Tamil Serial Rating : அடுத்த பிரச்சனை ரெடி... பழைபடி மாறும் மீனா? பரிதாபமான பாண்டியன் ஸ்டோர்ஸ்

Tamil Serial Update : சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம்.

Tamil Serial Update : சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம்.

author-image
WebDesk
New Update
Tamil Serial Rating : அடுத்த பிரச்சனை ரெடி... பழைபடி மாறும் மீனா?  பரிதாபமான பாண்டியன் ஸ்டோர்ஸ்

Tamil Serial Rating Update : சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல் ஒரு இன்றியமையாத பொழுதுபோக்காக மாறிவிட்டது என்று கூறலாம். அந்த அளவிற்கு சீரியல் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ளது. இதனை தங்கவைத்துக்கொள்ளும் நோக்கில் நாள்தோறும் புதிய சீரியல்கள் களமிறங்கி வருகினறனர். பழைய சீரியல்கள் ஒருசில முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சீரியல் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாள்தோறும் உயர்ந்து வருகிறது.

Advertisment

சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம். இதில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் ஒவ்வொரு சீரியலுக்கும் தினசரி ப்ரமோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ப்ரமோவை வைத்தே அன்றைய எபிசோடுகளின் கதையை தீர்மானித்து விடலாம். அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள ப்ரமோக்களை வைத்து எந்த சீரியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்ப்போம்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

Advertisment
Advertisements

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இப்போதான் டெலிவரி ஆச்சு அதுக்குள்ள வீட்டுக்கு வந்துட்டீங்க... அனும் ஃபுல் மேக்கப்போட இருக்கீங்களே என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் குடும்பத்துல மீனாவுக்கு ஆதங்கம் வந்துடுச்சி இனிமே பூகம்பமா என்று கேட்டுள்ளார்.  மற்றொரு ரசிகர் கயல் பாப்பாவ யாருமே கண்டுக்கலையா என்று கேட்டுள்ளார். மேலும ஒரு ரசிகர் இதுல ஒரு பிரச்சனை வெடிச்சு மீனா திரும்பவும் அப்பா வீட்டுக்கு போக போறாங்க அதானே என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் பாண்டியன் ஸ்டோர்ஸில் பிரச்சனை எழும்பும் என்றே கூறியுள்ளனர்.

பாரதி கண்ணம்மா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் அடடா கண்ணம்மா செம்மைய வச்சி செய்றீங்களே என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இதெல்லாம் பத்தாது இன்னும் அதிகமா என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் கண்ணம்மா ஹேமாகிட்ட உண்மையை எப்போ சொல்லுவாங்க இது தான் அடுத்த கேள்வி என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் வெண்பாவை கண்ணம்மா கலாய்ப்பது சூப்பர் என்றே கூறியுள்ளனர்.

பாக்கியலட்சுமி

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் செய்யுறது எல்லாம் செஞ்சிட்டு இப்போ நல்லவன் மாதிரி நடிக்கிறியா என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் நீ தப்பு பண்ணிட்டு செல்வி மேல கோப்ப்படுறீயா என்று கேட்டுள்ளார். மேலும் ஒரு ரசிகர் பாக்யா அம்மா சரியான கேள்வி கேட்டாங்க என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் செழியனை கடுமையாக விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

ராஜா ராணி 2

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் புதுப்பிரச்சனையை உண்டு பண்றீங்க வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். மற்றொ ரசிகர் இப்படியோ போய்க்கிட்டு இருந்தா எப்படி பிரச்சனை பண்ணுங்கனு யாராவது கேட்டாங்களா ஏன் இப்படி பண்றீங்க என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் சட்டு புட்டுனு முடிச்சிட்டு அடுத்த வேலைய பாருங்க எவ்வளவு நாள்தான் இழுத்துகிட்டு இருப்பீங்க என்று கேட்டுள்ளார்.

ரோஜா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் மதர்ஸ் டே ஞாயிறு கிழமை வரை கொண்டு போக கதையை இழுக்க ஆரம்பிச்சிட்டாங்க டைரக்டர் என்று கூறியுள்ளார். மற்றொ ரசிகர் பழைய சம்பூர்ண இராமாயணம் கூட இத விட அதிக ஓடும் , ரோஜா வுக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுகுறதுகுள்ள அவளுக்கு 45 வயசு ஆகிவிடும் என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் ரோஜா தேடி பிரச்சனைகள் வருகிறது போலியன அனுவிற்கு பிரச்சனைகள் இல்லை என்னங்கடா கொடுமை என கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் கடுமையான விமர்சனங்களையே பதிவிட்டுள்ளனர்.

இந்த கருத்துக்களை வைத்து பார்க்கும்போது பாரதி கண்ணம்மா சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம்.  வெண்பாவை கண்ணம்மா அலையவிடுவதே இதற்கு முக்கிய காரணம் மற்றபடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்று கூறலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: