Tamil Serial Rating : 1000 எபிசோடு நெருங்கினாலும் கதை அப்படியேதான் இருக்கு… வேகமா மூவ் பண்ணுங்க…

Tamil Serial Update : சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம்.

Tamil Serial Rating Update : சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல் ஒரு இன்றியமையாத பொழுதுபோக்காக மாறிவிட்டது என்று கூறலாம். அந்த அளவிற்கு சீரியல் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ளது. இதனை தங்கவைத்துக்கொள்ளும் நோக்கில் நாள்தோறும் புதிய சீரியல்கள் களமிறங்கி வருகினறனர். பழைய சீரியல்கள் ஒருசில முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சீரியல் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாள்தோறும் உயர்ந்து வருகிறது.

சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம். இதில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் ஒவ்வொரு சீரியலுக்கும் தினசரி ப்ரமோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ப்ரமோவை வைத்தே அன்றைய எபிசோடுகளின் கதையை தீர்மானித்து விடலாம். அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள ப்ரமோக்களை வைத்து எந்த சீரியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்ப்போம்.

பாரதி கண்ணம்மா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் பொட்டுல அடிச்ச மாதிரி சொன்னீங்க சௌந்தர்யா அம்மா சூப்பர் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் அடுத்து பாரதி என்ன செய்வார் பார்க்க ஆவல இருக்கு என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் இப்படியோ போட்டி போட்டு கொண்டுபோன எப்போதான் உண்மையை சொல்லுவீங்க டைரக்டர் சார் என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் போதும் சார் சீக்கிரம் டிஎன்ஏ டெஸ்ட் எடுங்க இல்ல அதுக்கு முன்னாடியே உண்மையை சொல்லுங்க இந்த ஒரு உண்மையை வச்சிக்கிட்டு எத்தனை வருடம் ஓட்டுவீங்க ன்று கேட்டுள்ளார்.

பாக்யலட்சுமி

இந்த ப்ரேமோவை பார்த்த ரசிகர் ஒருவர் ஆடு மாதிரி தானா போய் தலையை கொடுத்தட்டீங்களே கோபி என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இப்போ ராதிகா போன் பண்ணி பாக்யகிட்ட கேட்டா எப்படி சமாளிப்பீங்க கோபி என்று கேட்டுள்ளார். மேலும் ஒரு ரசிகர் தலைவன் கோபி எல்லாத்துக்கும் ஒரு ஐடியா வச்சிருக்காரு என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் பாவம் பாக்யா நல்லவஙகளா இப்படி ஏமாத்துரீங்களே என்று கேட்டுள்ளனர். மேலும் ரசிகர்கள் பலரும் அடுத்து என்ன என்பதை எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறியுள்ளனர்.

ராஜா ராணி 2

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் பிரச்சனை மோட் போயிட்டு இப்போ சந்தோஷ மோட் வந்துருக்கு இதுக்கும் காரணம் சந்தியாதான் என்று சொல்லுவார் சிவகாமி என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இப்படியே சந்தோஷமா காமிச்சீங்களான நல்லாருக்கும் ஆன டைரக்டர்க்கு அப்படி காமிக்க மனசு வராதே என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் சித்துவின் நடிப்பை பாராட்டியுள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் பாத்து பத்திரமா போய்ட்டு வாங்க மீனா நீங்க எதாவது பிரச்சனையை இழுத்துகிட்டு வந்துவிடாதீங்க என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் மீனா எதார்த்தமான நடிப்பு என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் அடுத்த வாரம் கோவில் எபிசோடா நடத்துங்க என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் மீனாவை பாராட்டியே கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

ரோஜா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் டைகர்க்கு இப்பத்தா கொஞ்சம் கொஞ்சமா அறிவு வளருது போல என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் மாணிக்கம்அவர்களுக்கு ரோஜா தன் மகள் என்று இப்போது தெரியாவிட்டாலும் பரவாயில்லை, ரோஜா மீது கொஞ்சம் கருணை வந்தால்போதும் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் 2 வாரத்துல 1000 வது எபிசோடு வர போகுது ஆனா கதை அப்படியே இருக்கு இனிமேலாவது கதையை கொஞ்சம் ஃபாஸ்டா மூவ் பன்னுங்க டைரக்டர் என்று கூறியுள்ளார்.

இந்த கருத்துக்களை வைத்து பார்க்கும்போது பாரதி கண்ணம்மா சீரியலுக்கே அதிக வரவேற்பு உள்ளது என்று கூறலாம். பாரதிக்கு சௌந்தர்யா தடை போட்டதே இதற்கு முக்கிய காரணம். மற்றடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்று கூறலாம்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial rating update with promo video update in tamil

Next Story
சன் டிவி வில்லி நடிகையை பெண் கேட்ட இளைஞர்: மகன் போட்டோவை வெளியிட்டு நடிகை பதிலடிTamil serial news: krithika annamalai replies for marriage proposal in insta
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express