scorecardresearch

Tamil Serial Rating : இந்த சீரியல் பாக்குரவங்க ரொம்ப பாவம் டா… எவ்வளவுதான் தாங்குறது…

Tamil Serial Update : சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம்.

Tamil Serial Rating Update : சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல் ஒரு இன்றியமையாத பொழுதுபோக்காக மாறிவிட்டது என்று கூறலாம். அந்த அளவிற்கு சீரியல் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ளது. இதனை தங்கவைத்துக்கொள்ளும் நோக்கில் நாள்தோறும் புதிய சீரியல்கள் களமிறங்கி வருகினறனர். பழைய சீரியல்கள் ஒருசில முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சீரியல் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாள்தோறும் உயர்ந்து வருகிறது.

சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம். இதில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் ஒவ்வொரு சீரியலுக்கும் தினசரி ப்ரமோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ப்ரமோவை வைத்தே அன்றைய எபிசோடுகளின் கதையை தீர்மானித்து விடலாம். அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள ப்ரமோக்களை வைத்து எந்த சீரியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்ப்போம்.

பாரதி கண்ணம்மா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் சீரியல பார்க்கும் போது எங்களுக்கும் பாரதிக்கு வந்த மாறி தான் இருக்கு சேம் ஃபீலிங் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் முதலில் டிஎன்ஏ டெஸ்ட் எடுங்க அதுக்கு அப்புறம் க்ளின் பண்ணுங்க என்று கூறியுள்ளார். முழு நேர கில்மா மற்றும் மொக்க காமெடி சீரியலாக மாறிய பாரதி கண்ணம்மா என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். உண்மையிலயே இந்த சீரியல் பாக்குரவங்க ரொம்ப பாவம் டா என்று கூறியுள்ளார். அப்ப கடைசி வரை டிஎன்ஏ டெஸ்ட் மட்டும் எடுக்க மாட்டீங்கல்ல என்று கேட்டுள்ளார்.

ரோஜா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் என்னாடா ஜெயிலுக்குள்ள பாதுகாப்பு இல்லையா என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் கொலைகார நாடகம் என்று மற்றொருவர் கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் நல்லாதா இருக்கு ஆனா வந்த சீனே திரும்பவும் வர மாதிரி இருக்கு என்று கூறியுள்ளார். கொஞ்சமாவது மாத்தி யோசிங்கடா ஒரு மாதிரி எடுக்குறீங்க என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் போதும் சாமி இதுக்கு மேல தாங்காது 1000 எபிசோடு போனாலும் கதை நகரவே இல்லை அதே இடத்திலேயே சுத்திக்கிட்டுதான் இருக்கு என்று கூறியுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் ஐஸ்வர்யா இருக்கிற வரைக்கும் கண்ணன் அந்த வீட்ல நிம்மதியா இருக்கவே முடியாது என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் கண்ணன் ரொம்ப நல்ல மனைவியதான் தேடி புடிச்சிருக்காரு நல்ல குடும்பம் பல்கலை கழகம் என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் என்ன ஐஸ் குடுபத்தை பிரிக்க உங்க சித்தி மாதிரியே கிளம்பிட்டீங்களே என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் கதிர் செம்ம மாஸ் பட்டையை கிளப்பிட்டார் என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் ஐஸ்வர்யாவை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

பாக்யலட்சுமி

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் தாத்த மாஸ் பண்றாரு என்ன ராதிகா அம்மாகிட்ட பாக்யாவோட புருஷன்தான் கோபினு சொல்லிட்டு வந்துருக்கலாம் என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் இதுக்கெல்லாம் கோபி அசரவே மாட்டாரு என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் இப்படியே போய்கிட்டு இருந்தா எப்படி மத்தவங்களுக்கு உண்மை தெரியப்படுத்துங்கள தாத்தா என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் சூப்பர் சீன் வெயிட்டீங் என்று கூறியுள்ளனர்.

இந்த கருத்துக்களின் அடிப்படையில் பார்க்கும்போது பாக்யலட்சுமி சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம். கோபியும் தாத்தாவும் காரசாரமாக விவாதம் செய்வதே இதற்கு முக்கிய காரணம் மற்றபடி அனைத்த சீரியல்களும் அந்தந்த ரசிகர்கள திருப்திப்படுத்தும் என்று கூறலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial rating update with serial promo in tamil serials

Best of Express