Tamil Serial Rating : மாமியார் – மருமகள் இப்படி இருந்தா பிரச்சனையே இல்ல… பாராட்டுக்கள் பெற்ற பாக்யலட்சுமி

Tamil Serial Update : சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது

Tamil Serial Rating Update : தற்போதைய காலகட்டத்தில் சீரியல் ரசிகர்களும் அதில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகளே மக்கள் மத்தியில அதிக வரவேற்பைபெற்று வருகினறனர். ஆனால் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை கவர்ந்ததா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல் எத்த்தனை சீரியல்கள் ஒளிபரப்பானாலும் வார இறுதியில் வெளியாகும் டிஆர்பி ரேட்ங்கில் முதல் 5 இடங்களை பெறும் சீரியல்களே அதிக கவனம் பெறுகின்றன. அதற்காக மற்ற சீரியல்கள் எல்லாம் சரியாக போகவில்லை என்று அர்த்தம் அல்ல.

சில சீரியல்கள் அதிகப்படியான ரசிகர்களின் மனதை கவர தவறி விடுகின்றன என்று கூறலாம். இதில் சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்படும். அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள ப்ரமோ வீடியோக்களில் எந்த சீரியல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்போம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் :

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் சீன் ரொம்ப லாங்கா போகுது என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் எபிசொடுக்காக வெயிட்டிங் என்று பதிவிட்டுள்ளார்.  மேலும் ரசிகர்கள் ஒரு சிலர் கண்ணனுக்கு இது தேவையா என்று பதிவிட்டுள்ள நிலையில், சிலர் எப்படியோ ரெண்டுபேரும் கல்யாணம் முடிச்சிட்டிங்க…. அடுத்து எங்க வெளியூருக்கு வீட்டுக்கா என்று பதிவிட்டுள்ளனர். கடந்த வாரம் முதலே பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரமோ வெளியாகி ஒரு வித எதிர்பார்ப்பை தூண்டிய நிலையில், இன்றைய எபிசொடு அந்த எதிர்பார்ப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்துள்ளது என்பதே ரசிகர்கள் கருத்தாக உள்ளது.

பாரதி கண்ணம்மா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இப்போதான் சீரியல் சூப்பரா இருக்கும். பாரதி கண்ணம்மா இருவரும் நல்லா நடிக்கிறாங்க என்று கூறியுள்ளார்.  மேலும் ஒருவர் இதையே கன்டினியூ பண்ணுங்க டைரக்டர் சார் என்று பதிவிட்டுள்ளார்.  கடந்த சில ஆண்டுகளாக இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், தற்போது இவர்கள இருவரும் இணைந்து வாழும் அறிகுறி தெரிகிறது. இதனால் இந்த ப்ரமோ மற்றும் சீரியல் எபிசோடுகள் ரசிகர்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்று கூறலாம்.

பாக்கியலட்சுமி

இந்த ப்ரமோ பார்த்த ரசிகர் ஒருவர் நல்ல பொண்ணுங்க எல்லா செழியன் கோபி மாதிரி ஆளங்க கிட்ட மாட்டிகிறாங்க என கூறியுள்ளார். நிஜத்தில் மாமியார் மருமகள் இப்படி இருந்தால் எந்த குடும்பத்தில் பிரச்சனை வரும் சொல்லுங்க என மற்றொரு ரசிகர் பதிவிட்டுள்ளார். பாக்கியலட்சுமி மாதிரி நல்ல மாமியார் கிடைச்சா ஊர்ல எந்த மருமகளுக்கும் பிரச்சனையே இருக்காது என ஒரு ரசிகர் கூறியுள்ளார். அப்பா மாதிரியே இருக்கான் பையன் பொண்டாட்டி மனசு புரிஞ்சுக்க தெரியாம என ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார். மேலும ரசிகர்கள் பலருமத் பாக்யாவுக்கே வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ராஜா ராணி 2

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் பலர் ஒரு பிரச்சனை போன இன்னொரு பிரச்சனை இதுக்கு ஒரு முடிவே இல்லையா என்று பதிவிட்டுள்ளார். மேலும் பலரும இந்த பிரச்சினையும் சநதியா தலையிலதான் வழும் என்றுகூறியுள்ளார். ஆக மொத்தத்துல சந்தியா அந்த வீட்ல நிம்மதியா இருக்க விடமாட்டாரு டைரக்டர் சார் என்று ஒருவர் கூறியுள்ளார். கடந்த சில வாரங்களாக சரவணன் சந்தியா சண்டையில் போர் அடித்த்து இப்போது இந்த சண்டையா என்று பலரும் கூறி வருகின்றனர்.

ரோஜா

இந்த பரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் ஆமாம்!!! ஜெயில் மாத்தனா, கோர்ட், கோர்ட் மாத்தனா ஜெயில்,,,ஐவ்வு மாதிரி கதை இழுத்துக் கொண்டு போகிறது என பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் அண்ணப்பூரணி ஜெயில்க்கு போனாலும் திருந்தாது…….அங்கயும் உக்காந்துகிட்டு அனு தான் என் பேத்தின்னு சொல்லிக்கிட்டு இருக்கும் என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் ரோஜா வழக்கிற்காக மட்டும் நீதிமன்றத்தை ஒரு வாரமாக வாடகைக்கு எடுத்து விட்டனர் வேற கேஸ் எதுவும் அனுமதி இல்லை இந்த கொரோனா காலத்தில் என கூறியுள்ளார் மேலும ரசிகர்கள் பலரும அர்ஜூன் ரோஜாவுக்கு ஆதரவாக கமெண்ட் கொடுத்துள்ளனர்.

இந்த கருத்துக்களை வைத்து பார்க்கும்போது பாக்கியலட்சுமி சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது. மாமியார் மருமகள் பாசம் குறித்து வெளியாகியுள்ள இந்த ப்ரமோ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மற்றபடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்று கூறலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial rating update with serial promo video

Next Story
சன் டிவி சீரியலுக்கு விடைகொடுத்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை: புதுசா வர்றவங்க யாரு?reshma Pasupuleti tamil news: actress reshma exits from Anbe Vaa serial
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com