/tamil-ie/media/media_files/uploads/2021/08/Tamil-Serials-10.jpg)
Tamil Serial Rating Update : தற்போதைய காலகட்டத்தில் சீரியல் ரசிகர்களும் அதில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகளே மக்கள் மத்தியில அதிக வரவேற்பைபெற்று வருகினறனர். ஆனால் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை கவர்ந்ததா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல் எத்த்தனை சீரியல்கள் ஒளிபரப்பானாலும் வார இறுதியில் வெளியாகும் டிஆர்பி ரேட்ங்கில் முதல் 5 இடங்களை பெறும் சீரியல்களே அதிக கவனம் பெறுகின்றன. அதற்காக மற்ற சீரியல்கள் எல்லாம் சரியாக போகவில்லை என்று அர்த்தம் அல்ல.
சில சீரியல்கள் அதிகப்படியான ரசிகர்களின் மனதை கவர தவறி விடுகின்றன என்று கூறலாம். இதில் சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்படும். அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள ப்ரமோ வீடியோக்களில் எந்த சீரியல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்போம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இந்த சீரியலை குழந்தைகளும் பார்ப்பார்கள் ஆதலால் காதல் காட்சிகளை தவிருங்கள் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இது இப்போ ரொம்ப முக்கியம் என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் ஒருவர் அஙகு ரெண்டு குடும்பமும் அடிச்சிக்கிறாங்க உங்களுக்கு இங்க ரொமான்ஸ் கேக்குதா? என பதிவிட்டுள்ளார். மேலும் பலரும் காதல் கட்சிகளை தவிர்க்கலாமே என்பதை வலியுறுத்தும் வகையிலே கருத்தக்களை பதிவிட்டுள்ளனர்.
பாக்யலட்சுமி
இந்த பரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் அம்மா பையன் இப்படித்தான் இருக்கனும் என்று பதிவிட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் எழில் பாக்யா மாதிரி எல்லா வீட்லயும் இருக்கனும் என்பதை குறிக்கும் வகையிலே கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
பாரதி கண்ணம்மா
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் பிளாஷ்பேக்லயும் அதே சேலைதாள என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இப்போதான் கதையில் ஒரு திருப்பம் வந்துருக்கு என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் கண்ணம்மா ஆட்டம் இனிதான் ஆரம்பம் என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் இப்போ நல்லாதான் இருக்கும் அடுத்த 2 நாள்ல திரும்பவும் கடுப்பு ஏத்திருவீங்க என்று கூறியுள்ளார்.
ராஜாராணி 2
இந்த பரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் பாவம் பார்வதி என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் ஆமா அர்ச்சனா உன்னவிட் கிரிமினல்தான் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் எல்லா சீரியலும் ஒரே பேட்டன் தான் என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் பார்வதிக்கு ஆதரவாகவே கருத்தக்களை பதிவிட்டுள்ளனர்.
நாம் இருவர் நமக்கு இருவர்
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் மாயன் நாச்சியாருக்குத்தான் சப்போர்ட் செய்வார் என்று கருத்தக்களை பதிவிட்டுள்ளனர். அதில் ஒரு ரசிகர் இனி மாயனுக்கும் மாறனுக்கும் சண்ட ஆரம்பம் இத மாசாணி குரூப் பாத்து சந்தோசப்படும் கண்டுகளியுங்கள் "பாவம் மாயன்" என பதிவிட்டுள்ளார்.
இந்த கருத்துக்களின் அடிப்படையில் பார்க்கும்போது இன்று பாரதி கண்ணம்மா சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது. தனக்கு பிறந்தது இரட்டை குழந்தை என்பதை தெரிந்துகொண்ட கண்ணம்மா அடுத்து என்ன செய்வார் என்பது குறித்து ஆவலே இந்த எதிர்பார்ப்பிற்கு முக்கிய காரணமாக உள்ளது. மற்றபடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என நம்பலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.