Advertisment

Tamil Serial Rating : தலைவன் கோபி இப்படி பண்ண எல்லாம் மறந்து போய்டுது - பாக்கியலட்சுமி பரிதாபம்

Tamil Serial Update : சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம்.

author-image
WebDesk
New Update
Tamil Serial Rating : தலைவன் கோபி இப்படி பண்ண எல்லாம் மறந்து போய்டுது - பாக்கியலட்சுமி பரிதாபம்

Tamil Serial Rating Update : சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல் ஒரு இன்றியமையாத பொழுதுபோக்காக மாறிவிட்டது என்று கூறலாம். அந்த அளவிற்கு சீரியல் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ளது. இதனை தங்கவைத்துக்கொள்ளும் நோக்கில் நாள்தோறும் புதிய சீரியல்கள் களமிறங்கி வருகினறனர். பழைய சீரியல்கள் ஒருசில முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சீரியல் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாள்தோறும் உயர்ந்து வருகிறது.

Advertisment

சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம். இதில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் ஒவ்வொரு சீரியலுக்கும் தினசரி ப்ரமோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ப்ரமோவை வைத்தே அன்றைய எபிசோடுகளின் கதையை தீர்மானித்து விடலாம். அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள ப்ரமோக்களை வைத்து எந்த சீரியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்ப்போம்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர்,  இன்று கதிர் முல்லை ரொமான்ஸ் சீன் வேற லெவல் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் முதல்ல ஜீவா இப்போ மூர்த்தி அடுத்து நீங்கதானே நடத்துங்க என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் உங்களுக்கு முன்னாடி கண்ணன் முந்திடுவார் போல இருக்கே என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் அடுத்த சில எபிசோடுகளில் உங்களுக்கு குழந்தை வந்துவிடும் என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இந்த சீனுக்காக வெயிட் செய்வதாக கூறியுள்ளனர்.

பாரதி கண்ணம்மா

இந்த பரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் அஞ்சலிக்கு இந்த சாந்தமானா கேரக்டர் நல்லா இருக்கு என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் என்ன பிரச்சனை வந்தாலும் சேரிக்கு மேச்சா நெயில் பாலிஷ் அடிக்க மறக்க மாட்டாங்க எங்க கண்ணம்மா என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் இந்த சீரியலுக்கு பாவம் சௌந்தர்யானு பேர் வச்சிருக்கலாம் என கூறியுள்ளார். மற்றொருவர் இன்னும் எங்கள பைத்தியக்காரனவே நினைச்சிட்டு இருக்கீங்கலா என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் எவ்வளவு நாள்தான் இப்படி இழுத்துக்கிட்டே போவீங்க என்று கேட்டுள்ளனர்.

பாக்கியலட்சுமி

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் தலைவன் கோபி இப்படி பண்ணும்போது அவர் செய்த தப்பு எல்லாம் மறந்து போய்டுது என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இப்படி ஒரு சீன் வந்து ரொம்ப நாள் ஆச்சு என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் கோபிக்கு இப்படி ஒரு சீன் கொடுத்தே அவரை நல்லவர் மாதிரி காமெடி பீஸா மாத்தி விட்ருங்க டைரக்டர் சார் என்று கூறியு்ளளார். மேலும் ரசிகர்கள் பலரும் தலைவன் கோபி வேற லெவல் என்று கூறியுள்ளனர்.

ராஜா ராணி 2

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் சிவகாமி சும்மா இருந்தாலும் கூட இருக்கவங்க சும்மா இருக்க மாட்டாங்க போல என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் வீட்ல சிவகாமி அடுத்த பிரச்சனைக்கு ரெடி ஆகிட்டாங்க என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் தப்பே பண்ணாத சந்தியா ஒவ்வொரு முறையும் திட்டு வாங்கும்போது எல்லா தப்பும் பண்ற அர்ச்சனாவுக்கு ஏன் எல்லாம் சாதகமாவே நடக்குது என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் சிவகாமியை கடுமையாக விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

ரோஜா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் போலீஸ் கூட்டிட்டு வந்து கல்யாணம் நிறுத்தியிருக்கலாம் எதுக்கு கதை இழுக்குறிக்க என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் ரோஜா பூஜா இருவரும் ஒற்றுமையாக இருப்பது நல்லது என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் ரொம்ப நாள் கழிச்சி அண்ணா தம்பி சண்டையை பார்க்க சூப்பரா இருக்கு என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் அண்ணன் தம்பி சண்டையே வேற லேவல்தான் நின்ட இடைவேளைக்கு பிறகு ரொம்ப சூப்பர் ஸ்டைய்லோ தனி பார்க்க இனிமையாக இருக்கு கலை கட்டுது அர்ஜூன் அஸ்வின் என்று கூறியுள்ளார்.

இந்த கருத்துக்களை வைத்து பார்க்கும்போது பாக்யலட்சுமி சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம். கோபி ராதிகாவிடம் மாட்டுவாரா என்ற எதிர்பார்ப்பே இதற்கு முக்கிய காரணம். மற்றடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும்என்று கூறலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment