scorecardresearch

Tamil Serial Rating : செண்பக அம்மா வந்தும் கதை கொஞ்சம் கூட முன்னேற வில்லை… ரோஜாவுக்கு சோதனை

Tamil Serial Update : சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம்

Tamil Serial Rating : செண்பக அம்மா வந்தும் கதை கொஞ்சம் கூட முன்னேற வில்லை… ரோஜாவுக்கு சோதனை

Tamil Serial Rating Update : சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல் ஒரு இன்றியமையாத பொழுதுபோக்காக மாறிவிட்டது என்று கூறலாம். அந்த அளவிற்கு சீரியல் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ளது. இதனை தங்கவைத்துக்கொள்ளும் நோக்கில் நாள்தோறும் புதிய சீரியல்கள் களமிறங்கி வருகினறனர். பழைய சீரியல்கள் ஒருசில முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சீரியல் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாள்தோறும் உயர்ந்து வருகிறது.

சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம். இதில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் ஒவ்வொரு சீரியலுக்கும் தினசரி ப்ரமோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ப்ரமோவை வைத்தே அன்றைய எபிசோடுகளின் கதையை தீர்மானித்து விடலாம். அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள ப்ரமோக்களை வைத்து எந்த சீரியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்ப்போம்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் எல்லாரும் இருக்கீங்களே கண்ணன் எங்க என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் மறைமுகமா எல்லாம் செய்றீங்களே அப்படியோ அவனையும் கூப்பிட்டு இருக்கலாம்ல என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இன்னொரு கடை கட்டி முடிக்க 2 வருஷம் ஆகுமா என்று கேட்டுள்ளனர்.

பாக்யலட்சுமி

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் ஜெனி பாவம் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் ஜெனி செழியனுக்கு புரிய வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் குடும்பத்திற்குள் ஏன் ஒருத்தரை மட்டும் இப்படி நெக்டீவ் காட்டிறீங்க என்று கேட்டுள்ளார்.  மேலும் ரசிகர்கள் பலரும் செழியனுக்கு அம்மா மேலயும் பாசம் இல்லா மனைவி மேலயும் பாசம் இல்ல என்று கூறியுள்ளார்.

பாரதி கண்ணம்மா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் பாரதிக்கு வீட்ல இருக்கவங்கள தவிர மற்ற எல்லார் மேலையும் நம்பிக்கை இருக்கும் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இப்படியே எல்லாரையும் சந்தேகப்படு அப்ப்புறம் அவங்கமேல தப்பு இல்லனு தெரிஞ்சா என்ன பண்ணுவ அப்போ உன்ன பாக்கனும் என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் பாரதியை கடுமையாக விமர்சித்து கருத்துக்களைபதிவிட்டுள்ளனர்.

ராஜா ராணி 2

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் சிவகாமிக்கு இதே வேலைதான் எப்ப பார்த்தாலும் சண்டை போடுகிட்டே இருக்காங்க என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் லைசன்ஸ் வாங்கிட்டு வண்டி ஓட்டுனு சொல்ல நீங்க என்ன டிராபிக் போலீசா என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் இப்படியோ பண்ணிகிட்டு இருங்க சீரியல் விலங்கியும் என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் சிவகாமியை விமர்சித்து பதிவிட்டுள்ளனர்.

ரோஜா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இந்த பாட்டி ரோஜாவை செண்பத்தோட பொண்ணு தான் என நம்புற மாதிரி கதை எடுங்க டைரக்டர் சார்  என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் செண்பக அம்மா வந்தும் கதை கொஞ்சம் கூட முன்னேற வில்லை அப்படியே இருக்கு என கூறியுள்ளார். பாட்டிக்கு ௮ணு மேல சந்தேகம் வர மாதிரி எடுத்தா நல்லாருக்கும் என்று மற்றொரு ரசிகர் கூறியுள்ளார். மேலும ரசிகர்கள் பலரும் அண்ணபூரணியை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இந்த கருத்துக்களின் அடிப்படையில் பார்க்கும்போது பாக்யலட்சுமி சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம். ஜெனி செழியனிடம் பேச மறுப்பதும், பாக்யாவுக்கு செழியன் மீது சந்தேகம் வருவதும் இதற்கு முக்கிய காரணம். மற்றபடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்று கூறலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial rating update with serial promo video in tamil