scorecardresearch

Tamil Serial Rating : அர்ஜூன் சார் இது என்ன அடுத்த பிளானா… ஆனா இப்படி பண்ணா எப்படி?

Tamil Serial Update : சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம்.

Tamil Serial Rating : அர்ஜூன் சார் இது என்ன அடுத்த பிளானா… ஆனா இப்படி பண்ணா எப்படி?

Tamil Serial Rating Update : சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல் ஒரு இன்றியமையாத பொழுதுபோக்காக மாறிவிட்டது என்று கூறலாம். அந்த அளவிற்கு சீரியல் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ளது. இதனை தங்கவைத்துக்கொள்ளும் நோக்கில் நாள்தோறும் புதிய சீரியல்கள் களமிறங்கி வருகினறனர். பழைய சீரியல்கள் ஒருசில முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சீரியல் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாள்தோறும் உயர்ந்து வருகிறது.

சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம். இதில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் ஒவ்வொரு சீரியலுக்கும் தினசரி ப்ரமோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ப்ரமோவை வைத்தே அன்றைய எபிசோடுகளின் கதையை தீர்மானித்து விடலாம். அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள ப்ரமோக்களை வைத்து எந்த சீரியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்ப்போம்.

ரோஜா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர், உண்மையில் வந்தவன் கொரியர். காரனா. இல்ல சாட்ஷியின் ஆளா நாளைவரை சஸ்பென்ஸ்சா என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் அர்ஜூன் அலார்ட்டா இருக்கேனு சொல்லிட்டு அனுவுக்கு கண்டன்ட் கொடுக்கிறார் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இது என்ன அடுத்த பிளானா அர்ஜூன் சார் என்று கேட்டுள்ளார். என்ன அர்ஜூன் சார் எல்லாரும் இருக்கப்போ இப்படி பண்ணிட்டீங்களே அவங்க எல்லாம் நீங்க பயந்துட்டீங்கனு நினைக்க மாட்டாங்களா என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் அர்ஜூனை விமர்சித்தே கருத்தக்களை கூறியுள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் முல்லைக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் முல்லை இவ்வளவு நாள் ஊமை மாதிரி இருந்துட்டு இப்போ சண்டைய மூட்டி விட்ட என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் ஜீவா ஜெனியூன் பர்சன், தப்புனு தெரிஞ்சவுடனே சாரி சொல்லிட்டாரு என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் முல்லையை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

பாரதி கண்ணம்மா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் கேட்டான் பாருயா ஒரு கேள்வி, இப்போதான் பாரதிக்கு புத்தி வரனும்னு டைரக்டர் சார் எழுதிருப்பாரே என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் என்ன வெண்பா வரிசையாக பல்ப் வாங்கிட்டு இருக்கு என்ன ரீசன்னு தெரியலையே என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் என்ன பாரதி பொசுக்குனு வெண்பா பார்த்து இப்படி ஒரு கேள்விய கேட்டுட்டீங்களே என்று பதிவிட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் பாரதியை பராட்டி கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

பாக்யலட்சுமி

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் என்னமா நடிக்கிறார் கோபி சான்ஸே இல்ல என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் முன்னாடி எழில் கிட்ட மாட்னீங்க பாக்யாவுக்கு ஸ்’கூட்டி கிடைத்தது இப்போ அப்பாகிட்ட மாட்டிகிட்டீங்க பாக்யாவுக்கு கார் கிடைக்குமா கோபி சார் என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் கோபி ராதிகா மேட்டர் பாக்யாவுக்கு தெரிய இன்னும் எத்தனை எபிசோடுகள் செல்ல வேண்டும் டைரக்டர் சார் என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் தலைவன் கோபி வேற லெவல் நடிப்பு என்றே கூறியுள்ளனர்.

இந்த கருத்துக்களை வைத்து பார்க்கும்போது இன்று பாரதி கண்ணம்மா சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம். வெண்பாவை பார்த்து பாரதி கேள்வி கேட்கும் காட்சியே இதற்கு முக்கிய காரணம். மற்றடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்று கூறலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial rating update with serial promo video in tamil