scorecardresearch

Tamil Serial Rating : மூர்த்தி அடிச்ச ஒரே ஒரு கல்லு இப்போ சம்பந்தம் பேசற அளவுக்கு கொண்டு வந்துருக்கு…

Tamil Serial Update : சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம்.

Tamil Serial Rating : மூர்த்தி அடிச்ச ஒரே ஒரு கல்லு இப்போ சம்பந்தம் பேசற அளவுக்கு கொண்டு வந்துருக்கு…

Tamil Serial Rating Update : சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல் ஒரு இன்றியமையாத பொழுதுபோக்காக மாறிவிட்டது என்று கூறலாம். அந்த அளவிற்கு சீரியல் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ளது. இதனை தங்கவைத்துக்கொள்ளும் நோக்கில் நாள்தோறும் புதிய சீரியல்கள் களமிறங்கி வருகினறனர். பழைய சீரியல்கள் ஒருசில முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சீரியல் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாள்தோறும் உயர்ந்து வருகிறது.

சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம். இதில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் ஒவ்வொரு சீரியலுக்கும் தினசரி ப்ரமோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ப்ரமோவை வைத்தே அன்றைய எபிசோடுகளின் கதையை தீர்மானித்து விடலாம். அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள ப்ரமோக்களை வைத்து எந்த சீரியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்ப்போம்.

ரோஜா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் அர்ஜுன் அனுக்கு நல்ல வைத்தியம் பாட்டி கையால சாட்டை அடி சூப்பர் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் ராட்ஷ்ஷசியான. பிரியா முகத்தில் பயம். இப்பதான் சந்தோஷமாக இருக்கு என்று கூறியுள்ளார். அனுக்கு பாட்டி மேல சந்தேகம் வந்துள்ளது என மற்றொரு ரசிகர் கூறியுள்ளார். செண்பகம் உயிரோடு நல்ல படியாக வந்தாச்சு.. அதனால் அவர் ஃபோட்டோ எடுத்து விட்டு, பிரதாப் அப்பா, அதாவது அன்னபூரணி பாட்டியின் கணவர் தாத்தா ஃபோட்டோவை வைக்கலாமே.. என கூறியுள்ளார்.

பாரதி கண்ணம்மா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் என்ன அகில் இப்படி ஆகிட்டீங்ளே என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இதையெல்லாம் பண்ணது வெண்பா தான் ஆனா அது யாருக்கும் தெரியுர மாதிரி காமிக்கவே மாட்டீங்களே பாரதிய பொருத்தவரை வெண்பா நல்லவள் அப்படித்தானே டைரக்டர் சார் என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் வெண்பா கதறுகிற மாதிரி ஏதாவது செய்யுங்கள என்று கூறியுள்ளனர்.

பாக்யலட்சுமி

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் கோபி தன்னோட வேலையை காட்ட தொடங்கிவிட்டார் இனி என்ன நடக்க போகுதோ என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் அவ்ளோ தைரியம் இருக்குள்ள கோபி அப்போ ராதிகாவை திருமணம் செய்துகொண்டு வர பிரச்சனையை பேஸ் பண்ணலாமே என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் அவன் எது சொன்னாலும் நம்புது பாரு ராதிகா ஒரு முட்டாள் என்று கூறியுள்ளனர். மேலும் ரசிகர்கள் பலரும் கோபியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

ராஜா ராணி 2

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் செந்தில் இப்போதான் சரியான வேலை செய்கிறார் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் அர்ச்சனா எவ்ளோ பண்ணாலும் திருந்தாத கேரக்டராச்சே என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளதாக கூறியுள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தமிழும் சரஸ்வதியும்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் மூர்த்தி அடிச்ச ஒரே ஒரு கல்லு இப்போ சம்பந்தம் பேசற அளவுக்கு கொண்டு வந்துருக்கு என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் தமிழ் சார் என்ன படிச்சிருக்காரு… சீரியலா இருந்தாலும் ஞாயம் வேண்டாமா சார் என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் மீனா கேரக்டர தவறா வேற யாரு கேரட்டும் பாக்குறதுக்கே நல்லா இல்ல என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் மீனாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த கருத்துக்களை வைத்து பார்க்கும்போது இன்று ரோஜா சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம். அனுவுக்கு தண்டனை கொடுக்கும் சீனுக்காக அனைவரும் வெயிட்டிங். மற்றடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்று கூறலாம்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial rating update with serial promo video in tamil

Best of Express