scorecardresearch

Tamil Serial Rating : ஆஹா என்ன ஒரு அருமையான காட்சி… ஆனா இத மட்டும் மறந்துட்டீங்களே பாரதி

Tamil Serial Update : சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம்.

Tamil Serial Rating Update : சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல் ஒரு இன்றியமையாத பொழுதுபோக்காக மாறிவிட்டது என்று கூறலாம். அந்த அளவிற்கு சீரியல் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ளது. இதனை தங்கவைத்துக்கொள்ளும் நோக்கில் நாள்தோறும் புதிய சீரியல்கள் களமிறங்கி வருகினறனர். பழைய சீரியல்கள் ஒருசில முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சீரியல் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாள்தோறும் உயர்ந்து வருகிறது.

சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம். இதில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் ஒவ்வொரு சீரியலுக்கும் தினசரி ப்ரமோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ப்ரமோவை வைத்தே அன்றைய எபிசோடுகளின் கதையை தீர்மானித்து விடலாம். அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள ப்ரமோக்களை வைத்து எந்த சீரியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்ப்போம்.

ரோஜா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் 1000 ரோஜா கலந்த கலவை ஆகும் இதில் உள்ள பாடல்கள் உள்ளன என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் வருசம் முழுவதும் ஒரே கதை தான் கடத்துறது காப்பாத்துறது கடத்துறது… ரிப்பீட்டு…. கதை எழுத கற்பனைக்கு பஞ்சமென்றால் நாடகத்தை முடித்து விடலாம் என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் என்ன அர்ஜுன் இப்படி ‌கண்ண கட்டி வைத்து கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுரிங்க ரோஜா வ ஏதாவது செய்ய போராங்க எங்களுக்கு கொஞ்சம் பயமா இருக்கும் இல்ல என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் எத்தனை முறைதான் ரோஜாவை கடத்துவீங்க அர்ஜூன் வந்து காப்பாத்துவாரு… என்று கேட்டுள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் அப்பாடா கதிர் இப்போ இந்த பிரச்சனையில் இருந்து தப்பிச்சிட்டாரு என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் மீனா சூப்பர் என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் இப்போ ஜனார்த்தனனுக்கு உண்மை தெரிஞ்சதுனு கண்ணனுக்கு தெரியுமா என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் மீனாவுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர் என்னதான் கண்ணன் தப்பு பண்ணலனு சொன்னாலும் மூர்த்தி என்ன வீட்லயா சேர்த்துக்க போறாரு என்று கேட்டுள்ளார்.

பாக்யலட்சுமி

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இப்போதான் செழியன் ஜெனி ஜோடி சூப்பரா இருக்கு என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் என்ன செழியன் டோட்டல் சேஜ் ஆகிட்டீங்க சூப்பர் சூப்பர் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் என்ன ஜெனி நீங்க வேலைக்கு போகலையாக என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளனர்.

ராஜா ராணி 2

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் எப்போதான அர்ச்சனா திருந்த போகுதே தெரியல.. அது திருந்தலானும் பரரவாயில்லை சிவகாமிகிட்ட மாட்டிவிடுங்க டைரக்டர் சார் என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் என்ன டைரக்டர் சார் நல்லா இருக்க குடும்பத்துல இப்படி பண்றீங்களே இது நல்லாவா இருக்கு என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் அர்ச்சனாவை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

பாரதி கண்ணம்மா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் ஆஹா என்ன ஒரு அருமையான காட்சி இதுக்குதான் இவ்வளவு நாளா காத்திருந்தோம் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் என்ன பாரதி உங்களுக்கு கோவம் வருதா என்று ஒருவர் கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் இப்படியே போனா என்ன அர்த்தம் சீக்கிரம் டிஎன்ஏ டெஸ்ட் எடுங்க என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் பாரதி டிஎன்ஏ டெஸ்ட் குறித்து கேட்டுள்ளனர்.

இந்த கருத்துக்களின் அடிப்படையில் வைரத்து பார்க்கும்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம். மீனா தனது அப்பாவிடம் கண்ணன் பணத்தை எடுக்கவில்லை என்று நிருபிக்கும் சீனுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். மற்றபடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்று கூறலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial rating update with serial promo video in tamil