Tamil Serial Rating Update : தற்போதைய காலகட்டத்தில் சீரியல் ரசிகர்களும் அதில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகளே மக்கள் மத்தியில அதிக வரவேற்பைபெற்று வருகினறனர். ஆனால் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை கவர்ந்ததா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல் எத்த்தனை சீரியல்கள் ஒளிபரப்பானாலும் வார இறுதியில் வெளியாகும் டிஆர்பி ரேட்ங்கில் முதல் 5 இடங்களை பெறும் சீரியல்களே அதிக கவனம் பெறுகின்றன. அதற்காக மற்ற சீரியல்கள் எல்லாம் சரியாக போகவில்லை என்று அர்த்தம் அல்ல.
சில சீரியல்கள் அதிகப்படியான ரசிகர்களின் மனதை கவர தவறி விடுகின்றன என்று கூறலாம். இதில் சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்படும். அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள ப்ரமோ வீடியோக்களில் எந்த சீரியல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்போம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இனி ஐஸ்வர்யா கலெக்டர் ஆகணும் கண்ணன் பஸ் சர்வீஸ் நடத்தணும் என சூர்ய வம்சம் கதை என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் கண்ணன் பணத்தை திருடிய போது கஷ்டப்பட்டவர்கள் முல்லையும் கதிரும், இப்போது ஆதரவு அளிப்பதும் அவர்களே என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் இந்த விஷயம் அத்தாச்சிக்கும் மல்லிகாவுக்கு தெரிச்சிது அவ்வளவுதா என கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் வீட்டில் கண்ணனுக்கு தனி ரூம் இல்லை அதனால் தான் வீட்டை விட்டு அனுப்பிவிட்டனர் என கூறியுள்ளார். மேலும் பலரும் கதிர் முல்லைக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
பாரதி கண்ணம்மா
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் டிஎன்ஏ டெஸ்ட் எடுத்துட்டு வா அப்புறம் லக்ஷ்மியை கொடுக்கிறேன் என்று கண்ணம்மா சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் பலரும் கண்ணம்மா சொந்த காலில் நிற்கிறேன் என்று சவால் விட்டாலும் ஏதாவது ஒரு வகையில் அவர் கணவரின் உதவியை நாடி வருகிறார் என்று கூறியுள்ளனர். மற்றொரு ரசிகர் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்காம கண்ணம்மாவை சந்தேகப்பட்டால் என்ன செய்வது என்று கேட்டுள்ளார்.
பாக்யலட்சுமி
இந்த பரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இது வீட்டுக்கு தெரியனும் அப்போதான் கோபி அடங்குவான் என்று பதிவிட்டுள்ளார். மேலும் ஒரு ரசிகர் கோபி எழிலிடம் மாட்ட வேண்டும் என்று கூறியுள்ளார். ரசிகர்கள் பலரும் கோபி மற்றும் ராதிகாவுக்கு விமர்னங்களை கொடுக்கும் வகையிலே கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
ராஜா ராணி 2
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் இதையே தொடர்ந்தால் நல்லாத்தான் இருக்கும்… ஆனா என்று பதிவிட்டுள்ளனர். அதில் ஒருவர் இதெல்லாம் நல்லாத்தான் இருக்கு அடுத்த எபிசோடுல மீண்டும் முட்டிக்கோங்க என்று கூறியுள்ளார். அதிலும் ஒரு ரசிகர் எவ்வளவுதான் இப்படி நடந்தாலும் பின்னாளில் சண்டைதான் வரும் என்று கூறியுள்ளார்.
ரோஜா
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் அதெல்லாம் இருக்கட்டும். அனு நடிக்கறத எப்ப தான் கண்டுபிடிப்பிங்க என கேட்டுள்ளார். அதில் ஒரு ரசிகர் பெரிய திரையில் இருவருக்கும் வாய்ப்பு கிடைத்தால் இன்னும் நன்றாக இருக்கும் என கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் அர்ஜூன் மற்றும் ரோஜா இருவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துகளையுமே தெரிவித்துள்ளனர்.
இந்த கருத்துக்களின் அடிப்படையில் பார்க்கும்போது, பாக்யலட்சுமி சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு என்று கூறலாம். கோபி ராதிகாவுடன் பழகுவதை விரும்பாத ராதிகாவின் கணவர் இவர்களை வீடியோ எடுப்பதால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மற்றபடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என் நம்பலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil