Tamil Serial Rating : உண்மை தெரியாமல் கோவப்பட்டீங்களே பாரதி... இது தேவையா?

Tamil Serial Update : சீரியஸ் காட்சிகளை பார்த்தே பழகிவிட்ட ரசிகர்களுக்கும் இந்த மாதிரியான கட்சிகள் சலிப்பை ஏற்படுத்தத்தான் செய்யும்.

Tamil Serial Update : சீரியஸ் காட்சிகளை பார்த்தே பழகிவிட்ட ரசிகர்களுக்கும் இந்த மாதிரியான கட்சிகள் சலிப்பை ஏற்படுத்தத்தான் செய்யும்.

author-image
WebDesk
New Update
Tamil Serial Rating : உண்மை தெரியாமல் கோவப்பட்டீங்களே பாரதி... இது தேவையா?

Bharathi Kannamma Vijay Tv : விஜய் டிவியில் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பையும் வரவேற்பையும் பெற்று வரும் முக்கிய சீரியல் பாரதி கண்ணம்மா விணுஷா தேவி, அருண்பிரசாத் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்து வரும் இந்த சீரியல் ரசிகர்க்ள மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னிலையில் இருந்து வந்த இந்த சீரியல் சமீப வாரங்களாக ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் விதமாக உள்ளது.

Advertisment

இந்த நிலைக்கு முக்கிய காரணம் கண்ணம்மா வேடத்தில் நடித்த ரோஷ்னி மற்றும் வில்லி வெண்பா சீரியலில் இருந்து விலகியது. ஆனாலும் தற்போது கண்ணம்மாவாக நடித்து வரும் விணுஷா தேவி நடிப்பில் குறை வைக்கவில்லை என்றாலும் கூட பாரதி கண்ம்மாவின் தற்போதைய எபிசோடுகள் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்த தவறிவிடுகின்றன. பாரதி கண்ணம்மா அவரவர் வீடுகளில் இருந்தாலும் கூட இவர்களின் சண்டை ரசிக்கும்படி இருக்கும் ஆனால் தற்போது ஒரே வீட்டில் இருந்தாலும் இவர்கள் வரும் காட்சிகள் அவ்வளவாக ரசிக்கும்படி இல்லை.

மாறாக வில்லி வெண்பாவா சீரியலில் இன்னும் என்ட்ரி கொடுக்காதது பெரிய பலவீனமாக உள்ளது. அவர் செய்யும் வில்லத்தனத்திற்காகவே ஒரு ரசிகர்கள் கூட்டம் காத்திருக்கிறது. ஆனால் அவர் இல்லாமல் சீரியல் விறுவிறுப்பாக இருக்காது என்று கருதிய குழுவினர், காமெடிக்காக அறந்தாங்கி நிஷாவை உள்ளே இழுத்துள்ளனர். அவர் வரும் காட்சிகள் கொஞ்சம் காமெடி கலாட்டாவாக இருந்தாலும், சீரியசான காட்களில் பல எபிசோடுகள் கடந்த நிலையில், தற்போது சீரியல் ட்ராக் மாறி காமேடி நோக்கி செல்கிறதா என்று ரசிகர்கள் யோசிக்கும் நிலையில் தான் உள்ளனது.

இதனால் இன்றைய எபிசோடு வழக்கமான நிலையிலேதான் செல்லும் என்று உறுதியாக சொல்லிவிடலாம். இன்றைய எபிசோடு குறித்த ப்ரமோவைில், கண்ணம்மா மீது சாப்பாடு கொட்டி விடுவதும் அதை பாரதி துடைத்துவிடுவதும், இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் காட்சிகளை சௌந்தர்யாவும் கண்ணம்மாவின்அப்பாவும் மறைந்து பார்க்கும் கட்சிகளும் இடம்பெறவுள்ளது. இதெல்லாம் பழைய காட்சிகள் தான் என்றாலும் கூட இந்த கட்சிகளை ரசிகர்கள் ஒரு சில ரசிகர்கள் கூட்டம் உள்ளது. மறுபுறம் வெண்பாவுக்கு ஜாமீன் கிடைக்க சீனியர் லாயர் ஒருவரை வரவழைக்க வேண்டும் என்று கூறி அட்வகேட் மேலும் ஒரு லட்சம் கேட்கிறார்.

Advertisment
Advertisements

அடுத்த சீனில் துணி அயர்ன் செய்வதில் பாரதிக்கும்கண்ணம்மாவுக்கு சண்டை வருது. வழக்கம்போல தப்பா புரிஞ்சிக்கிட்டு பாரதி சண்டை போட கண்ணம்மா அதற்கு விளக்கம் கொடுக்கிறாள் இந்த காட்சிகள் எல்லாம்ஒரு விதத்தில் காமெடியாக இருந்தாலும் பாரதி கண்ணம்மா சீரியல் கதைக்குள் செல்ல இன்னும் எத்தனை நாட்கள் ஆகும் என்று ரசிகர்கள் கேட்கும் அளவுக்குதான் உள்ளது. சீரியஸ் காட்சிகளை பார்த்தே பழகிவிட்ட ரசிகர்களுக்கும் இந்த மாதிரியான கட்சிகள் சலிப்பை ஏற்படுத்தத்தான் செய்யும். சீக்கிரம் கதைக்கும் வாங்க டைரக்டரே...  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bharathi Kannamma Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: