Tamil Serial Baakiyalakshmi Rating Update : மனைவிக்கு தெரியாமல் மற்ற பெண்ணுடன் தொடர்பு வைத்தக்கொள்ளும் ஆண்கள் எல்லாம் உள்ளுங்கள் ஒருவித பயத்துடன் தான் இருபபார்கள் என்பதற்கு விஜய் டிவியின் பாக்யலட்சுமி சீரியல் ஒரு முக்கிய உதாரணமாக சொல்லலாம். 3 குழந்தைகளக்கு தகப்பனான கோபி, தனது பள்ளி தோழி ராதிகாவுடன் அவரை திருமணம் செய்துகொள்வதாக கூறி பழகி வருகிறார். இப்போது ராதிகாவின் அம்மாவும் கோபிடம் எப்போது ராதிகாவை திருமணம் செய்துகொள்ள போகிறீர்கள் என்று கேட்க தொடங்கிவிட்டார்.
இதற்கிடையே கோபியின் 2-வது காதல்அவருடைய மகனுக்கு தெரிந்துவிட்டது. இப்போது அவருடைய அப்பாவுக்கும் தெரிய வந்துள்ளது. இதனால் வீட்டில் இருவருக்கும் ஏழாம் பொருத்தமாகவே உள்ளது. இதனிடையே பள்ளியில் பாலியல் பிரச்சினை மற்றும் பாக்யாவின் தொழில் என பல எபிசோடுகள் கடந்தாலும், கோபியும் அவரது அப்பாவுக்கும் உண்டான சண்டை இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஆனாலும் சீரியல் எபிசோடுகள் பரபரப்பாகத்தான் சென்று கொண்டிருக்கிறது.
கோபியின் அப்பா நடிப்பை ரசிகர்கள் பலரும் பாராட்டி தள்ளி வருகின்றனர். இந்நிலையில், பொங்கல் பண்டிகையை கொண்டாட கோபியின் அப்பா தனது குடும்பத்தினருடன் தனது கிராமத்திற்கு செல்கிறார். முதலில் கிராமத்திற்கு வர மறுக்கும் கோபி அப்பாவின் கட்டளைக்கு இணங்க குடும்பத்தினருடன் கிராமத்திற்கு செல்கிறார். ஆனால் அனைவரும் சந்தோஷமாக கிளம்பும்போது, கோபி மட்டும் சோகமாக செல்கிறார்.
கோபியை கவனிக்கும் பாக்யா அவர் சோகமாக இருப்பது குறித்து தனது மாமியாரிடம் சொல்கிறார். இதனிடையே பாக்யா வீட்டில் இருந்து வெளியில் வரும்போது கோபி போனில் சிரித்து பேசிக்கொண்டிருக்கிறார். இதை பார்க்கும் பாக்யா உறைந்து நிற்க அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது. இதனால் கோபி ராதிகாவிடம் தான் பேசிக்கொண்டிருந்தாரா, இப்படி பேசிய கோபி பாக்யாவிடம் மாட்டிக்கொண்டால் என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்பு சற்று அதிகரித்தாலும், இதுவும் புஸ்வானமாக போய்விடும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
மேலும் முதலில் கோபியை மற்றொரு பெண்ணுடன் பார்த்த எழில் அது குறித்து வீட்டில் சொல்ல வில்லை. இப்போ கோபியின் அப்பா எல்லாம் தெரிந்தும் வீட்டில் யாரிடமும் எதுவும் சொல்லாமல் உள்ளார். ஆனால் அப்பாவுக்கும் தாத்தாவுக்கும் இடையே நடக்கும் சண்டை குறித்து தெரிந்துகொண்ட எழில், தாத்தாவிடம் தனக்கு தெரிந்த உண்மையை சொல்லி விடுகிறார். இது கடந்த வார எபிசோடுகளின் நிலைமை.
இனி அடுத்த வார எபிசோடுகள் பொங்கல் பண்டிகையுடன் முடிடைந்துவிடும் என்பதால், கிராமத்தில் இருந்து பாக்யா குடும்பம் மீண்டும் சென்னைக்கு திரும்பும்போதுதான் என்ன திருப்பங்கள் நடக்கும் என்று ஓரளவு யூகிக்க முடியும். கோபி ராதிகாவை திருமணம் செய்வாரா, எழில் மற்றும் தாத்தாவின் அடுத்த ஸ்டெப் என்ன என்பது குறித்து எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “