Advertisment

Tamil Serial Rating : மாட்டிக்கொண்ட சரவணன்.. அதிர்ச்சியில் சிவகாமி... ஆர்ப்பரிப்பில் அர்ச்சனா

Tamil Serial Update : எப்படித்தான் நாயகன் நாயகி பிரச்சனையில் சிக்கினாலும், வில்லத்தனம் செய்யும் அர்ச்சனா எங்கேயுமே தப்பு செய்து மாட்டிக்கொண்டதாக தெரியவில்லை.

author-image
WebDesk
Dec 29, 2021 11:41 IST
Tamil Serial Rating : மாட்டிக்கொண்ட சரவணன்.. அதிர்ச்சியில் சிவகாமி... ஆர்ப்பரிப்பில் அர்ச்சனா

Tami Serial Raja rani Update : ஒரு சமையல் கலைஞர், ஐபிஎஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் ஒரு பெண் சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த பெண் இவரை திருமணம் செய்துகொள்ளும் நிலை ஏற்பட்டு திருமணமும் செய்துகொள்கிறார். இந்த திருமணத்தில் சமையல் கலைஞர் சரவணன் குடும்பத்தினர் ஏமாற்றப்பட்டது பின்னர் தெரிய வருகிறது. இதனால் மருமகளை வெறுக்கிறார் மாமியார் சிவகாமி இவர்களுக்குள் நடக்கும் பாசப்போராட்டம்தான் ராஜா ராணி சீரியல் 2

Advertisment

விஜய் டிவியின் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்று வருகிறது. என்று சொல்லாம். மருமகள் சந்தியா எது செய்தாலும் அதில் ஒரு குற்றம் கண்டுபிடிக்கும் மாமியார் சிவாகமி சமூகவலைதங்களில் பெரிய வைரலாகி வருகிறார். பிடிக்காமல் திருமணம் செய்துகொள்ளும் சந்தியா ஒரு கட்டத்தில் கணவரை நேசிக்க தொடங்குகிறாள். அப்போது ஏற்படும் ஒரு விபத்தில் சந்தியா குறித்து சிவகாமி புரிந்துகொள்கிறார்.

.இதனிடையே சமையல் போட்டியில் பங்கேற்கும் சரவணன் அதில் வெற்றியும் பெற்றுவிடுகிறார். ஆனால் அதே வீட்டில் இவர்களின் முன்னேற்றத்தை பிடிக்காத சின்ன மருமகள் அர்ச்சனா இவர்களுக்கு எதிராக சதிவேலையில் ஈடுபடுகிறார். இந்த வேலைகளை செய்வது இவர்தான் என்று தெரிந்தும் அவரை கண்டிக்காமல் சீரியல் சென்றுகொண்டிருக்கிறது. வீட்டில் இருக்கும் அனைவருக்கும் கெடுதல் செய்யும் அர்ச்சனாவை ஒருவர் கூட கண்டுகொள்ளமாட்டார்கள்

இந்நிலையில், சரவண் சந்தியா இருவரும் குடும்பத்துடன் தற்போது சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகினறனர். இதற்கு முன்பு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அர்ச்சனா செய்த சதிவேலையில் சரணவன் துயரத்தை சந்தித்தார். ஆனால் தற்போது அவரே அவருக்கு சூனியம் வைத்துக்கொண்ட கதையாகிவிட்டது. தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில் சரவணன் செய்த சிக்கன் சமையலை பாராட்டி நடுவர் கருத்து கூறுகிறார். ஆனால் சரவணன் பெருந்தன்மையாக இது சிக்கன் இல்லை என்று சொல்லிவிடுகிறார்.

இதனால் கோபமான நடுவர்கள் அவரை நிகழ்ச்சியில் இருந்து வெளியே போக சொல்கின்றனர். சக போட்டியாளர்களும் சரவணனுக்கு எதிராக பேசுகின்றனர். இதனபின்னர் சரவணன் என்ன செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த பிரச்சனைக்கு காரணம் யார் என்பதையும் கண்டுபிடிக்க வேண்டும். இதனால் தற்போதைய எபிசோடு பரபரப்பின் உச்சமாக சென்றுகொண்டிருக்கிறது. எப்படித்தான் கொண்டு சென்றாலும், சரவணன் செயதது தப்புதான் என்று நடுவர்கள் கூறிவிடுவர்கள் அதன்பிறகு என்ன செய்ய முடியும் என்பது பல ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

சரவணன் சந்தியாவின் இந்த நிலை பார்த்து அர்ச்சனா சந்தோஷத்தில் மிதப்பார், சிவகாமிக்கு சந்தியாவை மட்டம் தட்ட இன்னொரு பாயிட் கிடைத்துவிட்டது இனி சீரியல் பழைய நிலைக்கு செல்லும் என்று கூறி வருகிறனர். ஆனால் இவர்கள் ஏன் இப்படி செய்தார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது என்பதே பலரின் கருத்தாக உள்ளது. எப்படி இருந்தாலும், இந்த நிகழ்ச்சியை வைத்தே இந்த சீரியல் இன்னும் ஒரு மாதத்திற்கு இழுக்க முடியும்.

ஆனால் எப்படித்தான் நாயகன் நாயகி பிரச்சனையில் சிக்கினாலும், வில்லத்தனம் செய்யும் அர்ச்சனா எங்கேயுமே தப்பு செய்து மாட்டிக்கொண்டதாக தெரியவில்லை. அதனைத்து தவறு செய்யும் அவரு கிரேட் எஸ்கேப் ஆனால் தவறே செய்யாத பிரச்சனையில் சிக்கி கொள்கிறன்றனர். இது சீரியலுக்கே உண்டான எழுதப்படாத விதி என்றுதான் சொல்ல வேண்டும். எடுத்து என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்போம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Raja Rani 2 Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment