/tamil-ie/media/media_files/uploads/2021/08/Tamil-Serials-6.jpg)
Tamil Serial Rating Update : தற்போதைய காலகட்டத்தில் சீரியல் ரசிகர்களும் அதில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகளே மக்கள் மத்தியில அதிக வரவேற்பைபெற்று வருகினறனர். ஆனால் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை கவர்ந்ததா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல் எத்த்தனை சீரியல்கள் ஒளிபரப்பானாலும் வார இறுதியில் வெளியாகும் டிஆர்பி ரேட்ங்கில் முதல் 5 இடங்களை பெறும் சீரியல்களே அதிக கவனம் பெறுகின்றன. அதற்காக மற்ற சீரியல்கள் எல்லாம் சரியாக போகவில்லை என்று அர்த்தம் அல்ல.
சில சீரியல்கள் அதிகப்படியான ரசிகர்களின் மனதை கவர தவறி விடுகின்றன என்று கூறலாம். இதில் சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்படும். அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள ப்ரமோ வீடியோக்களில் எந்த சீரியல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்போம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் :
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இன்னும் எத்தனை நாள் தான் தெருவுலே நிக்க வைப்பீங்க சீக்கரமா வீட்டுக்குள்ள சேர்த்துவிடுங்க என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் உங்கள தலைகுனிய வச்ச மல்லி இப்போ ரொம்ப முக்கியமா என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் தனம் ஹெல்ப் பண்ண முடியல அடுத்து முல்லை ஹெல்ப் இப்படி ஆகிடுச்சி அடுத்த மீனா ஹெல்ப் பண்ண போராஹ்களா என்று பதிவிட்டுள்ளார். மேலும் பலரும் கண்ணன் பாவம் என்றே கூறியுள்ளனர். மற்றொரு ரசிகர் மீனா கேரக்டர் மேஜிக் தான்.ஆரம்பத்துல வில்லி மாதிரி இருந்து.அப்படியே மாறி மாறி மாறிட்டாங்க சூப்பர் என பதிவிட்டுள்ளார்.
பாரதி கண்ணம்மா :
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் பாரதி நல்லா காமெடி பண்றாபோல என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் கண்ணம்மா உண்மையை சொல்லிடலாமே ஏன் இந்த தயக்கம் என் பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் கண்ணம்மா சொந்த கால்ல நிக்கிறேன்னு சாவல் விட்ருந்தாலும் குழந்தைக்கு அப்பா பாசம் வேணும்னு நினைக்கிறாங்க போல என பதிவிட்டுள்ளார். மேலும் பலரும் திரும்பவும் பழைய ரெக்கார்ட போட்டு இப்படி பண்ரீங்களே என்று கூறியுள்ளனர்.
பாக்கியலட்சுமி
கோபி சொந்த பொண்டாட்டிக்கு உதவி செய்ய மாட்டாராம் அடுத்தவன் பொண்டாட்டிக்கு உதவி செய்யறதுக்கு என்னவா ஆர்வமா இருக்காரு என ஒரு ரசிகர் கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் கோபி உங்களுக்கு வந்தா ரத்தம் பாக்கியா அம்மாக்கு வந்தா தக்காளி சட்னியா என கேட்டுள்ளார். பாக்ய லட்சுமி அவங்களுக்கு சப்போட்டா இருந்து மாமனார் இப்போ அடிபட்டும் சுடதண்ணி சூடா இருக்கனும் எடுத்துத்து வர சொன்னாரு இவர என்ன சொல்றது என கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் கோபி குடும்பத்தை விமர்சனம் செய்தே கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
ரோஜா
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் மறுபடியும் ரோஜா அழுதுட்டு இருப்பா இதுதான் மறுபடியும் நடக்கும் இந்த டைரக்டர்கு வேர எதுவும் எடுக்கதெறியாது என பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் எப்படியோ ரோஜா கல்பனா பல்ப் தான் வாங்க போறீங்க இதுக்கு எதுக்கு இவோலோ சீன் என பதிவிட்டுள்ளார். இந்த நாடகத்தை பொறுத்தவரை கிரிமினல் எப்பவுமே காப்பாற்றப் படுவர். நல்லவுங்க அவமானப் படுவார்கள். இது சகஜம்தான் என ஒருவர் பதிவிட்டுள்ளார். மேலும் பலரும் ரோஜா கலபனா இருவரும் பல்ப் வாங்கப்போசது நிச்சயம் என்பதை குறிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த கருத்துக்களை வைத்து பார்க்கும்போது பாரதி கண்ணம்மா சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு இருப்பதாக கூறலாம். பாக்யாவுக்கு பெரிய அடிப்பட்டும் அவரை வேலை வாங்கும் குடும்பம் கோபிக்கு சின்ன அடி என்றதுமே பதறிப்போகிறது. இதை பார்த்து எழில் என்ன செய்யப்போகிறார் என்பதே இந்த எதிர்பார்ப்பிற்கு முக்கிய காரணம். மற்றபடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும்என நம்பலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.