Tamil Serial Rating Update : தற்போதைய காலகட்டத்தில் சீரியல் ரசிகர்களும் அதில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகளே மக்கள் மத்தியில அதிக வரவேற்பைபெற்று வருகினறனர். ஆனால் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை கவர்ந்ததா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல் எத்த்தனை சீரியல்கள் ஒளிபரப்பானாலும் வார இறுதியில் வெளியாகும் டிஆர்பி ரேட்ங்கில் முதல் 5 இடங்களை பெறும் சீரியல்களே அதிக கவனம் பெறுகின்றன. அதற்காக மற்ற சீரியல்கள் எல்லாம் சரியாக போகவில்லை என்று அர்த்தம் அல்ல.
சில சீரியல்கள் அதிகப்படியான ரசிகர்களின் மனதை கவர தவறி விடுகின்றன என்று கூறலாம். இதில் சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்படும். அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள ப்ரமோ வீடியோக்களில் எந்த சீரியல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்போம்.
ராஜா ராணி
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் செந்தில் இப்ப தான் ஆம்பள மாதிரி நடந்துக்கிறான் என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் செம ப்ரமோ இப்பவாச்சு பார்வதி சந்தியாவ நம்புறாளே என கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் 35sec-ல முடிஞ்ச ஒரு நிகழ்வை ஒரு வாரம் ஓட்டூறீங்களேடா நிஜமாவே மெகா சீரியல் தாண்டா என கூறியுள்ளார். மேலும் பலரும் அர்ச்சனாவுக்கு எதிராகவும், சந்தியாவுக்கு ஆதரவாகவும் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
பாரதி கண்ணம்மா
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் என்ன ஒரு அதிசயம்…… ரொம்ப நாளைக்கு அப்புறம் நல்ல சீன் என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இப்போ இன்ரஸ்டிங்காதான் இருக்கும். ரெண்டு நாள் க்கு அப்புறம் மறுபடியம் அரச்ச மாவையே அரைப்பாங்க என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இதுக்குதானே இத்தனை நாள் வெயிட்டிங் இனி கண்ணம்மா அந்த வீட்டுக்கு போனா ஒரு தென்றல் புயலாக வருதே என கூறியுள்ளார். மேலும் பலரும் இனி கண்ணம்மா ஆட்டம் தொடங்கும் என்றே கூறியுள்ளனர்.
ரோஜா
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் எந்த உண்மையும் யாருக்கும் தேரிய போவது இல்லை… எல்லாமே வீண் என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் கடைசிவரைக்கும் பார்வையாளர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே என கூறியுள்ளார். நீங்க ஜெயிக்கவே வேண்டாம் டைரக்டரிடம் சொல்லி சீரியல முடிக்க சொல்லுங்க அதுதான் நல்லது என ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார். கண்டிப்பா ஜெயிக்க மாட்டீங்க . ஜவ்வு இழுவை பல வருடங்கள் இருக்கு என கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் கடுமையான விமர்சனங்களையே பதிவிட்டுள்ளனர்.
இந்த கருத்தக்களின் அடிப்படையில் பார்க்கும்போது பாரதி கண்ணம்மா சீரியலுக்கே அதிக எதர்பார்ப்பு உள்ளது என கூறலாம். இதுவரை தனக்கு பிறந்தது ஒரு குழந்தைதைன் என்று நனைத்துக்கொண்டிருந்த கண்ணம்மாவுக்கு தற்போது தனக்கு பிறந்தது இரட்டை குழந்தை என்று தெரியவந்ததே இந்த எதிர்பார்ப்பிற்கு காரணம் என கூறலாம். மற்றபடி அனைத்து சீரியல்களும் அந்ந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என நம்பலாம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil