Tamil Serial Rating : இப்போதான் பரபரப்பா போய்க்கிட்டு இருக்கு இதையே கன்டினியூ பண்ணுங்க – கண்ணம்மாவுக்கு பாராட்டு

Tamil Serial Update : சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது

Tamil Serial Rating Update : தற்போதைய காலகட்டத்தில் சீரியல் ரசிகர்களும் அதில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகளே மக்கள் மத்தியில அதிக வரவேற்பைபெற்று வருகினறனர். ஆனால் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை கவர்ந்ததா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல் எத்த்தனை சீரியல்கள் ஒளிபரப்பானாலும் வார இறுதியில் வெளியாகும் டிஆர்பி ரேட்ங்கில் முதல் 5 இடங்களை பெறும் சீரியல்களே அதிக கவனம் பெறுகின்றன. அதற்காக மற்ற சீரியல்கள் எல்லாம் சரியாக போகவில்லை என்று அர்த்தம் அல்ல.

சில சீரியல்கள் அதிகப்படியான ரசிகர்களின் மனதை கவர தவறி விடுகின்றன என்று கூறலாம். இதில் சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்படும். அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள ப்ரமோ வீடியோக்களில் எந்த சீரியல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்போம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் எவ்ளோ கோவமாக இருந்தாலும் தம்பிக்கு ஒரு பிரச்சனை வந்தவுடன் சரியான நேரத்தில் உதவுகிறார் எள்று கூறியுள்ளனர். ஊருக்குள்ள சண்டை மனசுக்குள்ள சமாதானம் என்ன சார் உங்க நாடகம் என ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் கண்ணனுக்கு வாழ்கைய புரிய வைக்கறேன்னு சொல்லிட்டு மாறி மாறி ஹெல்ப் பண்றீங்களே என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் பரவால்லை என்பது போலவே கருத்தக்களை பதிவிட்டுள்ளனர்.

பாரதி கண்ணம்மா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் நீ எல்லாத்தையும் மனசுக்குள்ளயே கேட்டுக்கோ என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் ஒருவர் சரியாதா கெஸ் பன்ற ஆன அத வெளியில சொல்ல மாட்டேங்கிறியே என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் இப்போதான் பரபரப்பா போய்க்கிட்டு இருக்கு இதையே கன்டினியூ பண்ணுங்க என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் பாரதி கண்ணம்மா இப்போதூன் விறுவிறுப்பாக செல்வதாக கூறியுள்ளனர்.

பாக்கியலட்சுமி

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் கோபி எல்லாமே சரியா கனிக்கிறார்பா என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் வீட்டுக்கு தெரயாமல் தப்பு பண்ற எல்லாருக்கும் இதுதான் நிலைமை என்று கூறியுள்ளார். மற்றொரு ரசகிர் சீக்கிரம் கோபி வீட்ல மாட்ட விடுங்க டைரக்டர் சார் என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் கோபி எல்லாரையும் நல்லா சமாளிக்கிறார்பா என்று கூறியுள்ளனர்.

ரோஜா

இந்த ப்ரமோவை பார்த்த ரசகர் ஒருவர் ரோஜா சத்தியம் பண்ணுவா..உடனே உண்மையான செண்பகம் இங்க செண்பகமாக நடிக்க வருவாங்க..இதை வைத்து இன்னும் 6 மாதம் ஓட்டுவாங்க என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் ரோஜாவ கொஞ்சம் நாளாக தைரியமான பெண்ணாக காட்டுகிறீர்கள் என கூறியுள்ளார். சாப்பாட்டு தட்டை. தட்டி விட்ட பிரியா கையை. முறிக்கி. முதுகில் ‌நாலு அடி போட்ட ‌ ரோஜாவுக்கு பாராட்டு என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இந்த சீரியலை சீக்கிரம் முடிங்க என்பதை வலியுறுத்ம் வகையிலே கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

இந்த கருத்தக்களை வைத்து பார்க்கும்போது பாரதி கண்ணம்மா சீரயலக்கே அதிக வரவேற்பு இருந்து வருகிறது.இரட்டை குழந்தை குறித்து உண்மை தெரியவரும் வரை இந்த சீரியலின் விறுவிறுப்பு குறைவானது என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது. மற்றடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என நம்பலாம்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial rating with promo video update

Next Story
Vijay TV Serial; பாரதிக்கும் வெண்பாவுக்கும் கல்யாணம் ஆகல… உண்மையை உடைத்த அஞ்சலி
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com