Tamil Serial Rating : ட்விஸ்ட்ங்கர பேர்ல நீங்க பண்ற அலும்பல் தாங்க முடியல சாமி… என்ன கோபி பகல் கனவா?

Tamil Serial Update : சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம்.

Tamil Serial Rating Update : சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல் ஒரு இன்றியமையாத பொழுதுபோக்காக மாறிவிட்டது என்று கூறலாம். அந்த அளவிற்கு சீரியல் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ளது. இதனை தங்கவைத்துக்கொள்ளும் நோக்கில் நாள்தோறும் புதிய சீரியல்கள் களமிறங்கி வருகினறனர். பழைய சீரியல்கள் ஒருசில முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சீரியல் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாள்தோறும் உயர்ந்து வருகிறது.

சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம். இதில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் ஒவ்வொரு சீரியலுக்கும் தினசரி ப்ரமோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ப்ரமோவை வைத்தே அன்றைய எபிசோடுகளின் கதையை தீர்மானித்து விடலாம். அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள ப்ரமோக்களை வைத்து எந்த சீரியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்ப்போம்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் சூப்பர் ப்ரமோ என்றும், முல்லை சூப்பர் என்று கூறியுள்ளனர். மற்றொரு ரசிகர் சூப்பர் முல்லை இதைத்தேன் எதிர்பார்த்தோம் சும்மா கதிர் அண்ணாவையே டிகிரேட் பண்ணி பேசிக்கிட்டு இருக்க கூடாது என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் பாண்டியன் ஸ்டோர்ஸ் பெஸ்ட் சீரியல் ஆனா என்ன இப்போலாம் அடிக்கடி சண்டை வருது என்று கூறியுள்ளார். மேலும ரசிகர்கள் பலரும் சூப்பர் முல்லை என்றே கூறியுள்ளனர். ஆனாலும் இந்த சண்டை எங்கு போய் முடியுமோ என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ரோஜா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் ஏன்டா வேற வேலையே கிடையாதா? இல்லா வேற சீனே எடுக்க தெரியாதா? எப்போ பார்த்தாலும் கடத்தல் நாடகம் தானா ஒன்னும் யோசிக்க முடியவில்லை என்றால் சீரியலை முடித்துவிடலாமே என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் அனு என்ன கேடி வேலை செய்தாலும் இறுதியில் ரோஜா தான் இந்த போட்டியில் வெற்றி பெறுவாள் என கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் உடனே இப்போ ரோஜாவ அர்ஜூன் காப்பாத்த போவாறு அதானே… சீரியல் ஸ்டார்ட் பண்ணதுல இருந்து இதையே தானே ஓட்டிக்கிட்டு இருக்கீங்க என்று கூறியுள்ளார்.

அன்பே வா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் ஆஹா வந்துவிட்டார் அம்மன் வேடத்துக்கு 100% பொருத்தமான நம்ம புன்னகை அரசி கே.ஆர்.விஜயா அம்மா என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் கே ஆர் விஜயா அம்மாவின் வருகை இந்த கதைக்கு இன்னும் பலம் கொடுக்கும் என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் நீண்ட நாட்களுக்கு பிறகு கேஆர் விஜயா அம்மாவை அம்மன் வேடத்தில் பார்ப்பது நன்றாக இருக்கிறது. சூப்பர். என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் கே.ஆர்,விஜயா வருகை சீரியலுக்கு பலம் என்றே கூறியுள்ளனர்.

பாக்யலட்சுமி

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இது எப்படி இருந்தாலும், கோபியின் கனவு என்று முடித்துவிடுவார்கள் என்று கூறயுள்ளார். மற்றொரு ரசிகர் பொட்டு வைக்க நீங்க என்ன ராதிகாவோட புருஷனா என்ன கோபி கனவா என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் ட்விஸ்ட்ங்கர பேர்ல நீங்க பண்ற அலும்பல் தாங்க முடியல சாமி. அதான ஈஸியா கண்டுபிடிச்சிடுறோமே அப்புறம் எதுக்கு இதெல்லாம் வைக்கிறீங்க புதுசா யோசிங்க டைரக்டர் சார் என்று கூறியுள்ளார். அது எப்படி எழிலும் செல்வியும் பார்க்கும்போது முகம் தெரியல இப்போ இவர் பாக்கும்போது மட்டும் முகம் தெரியுது கனவு தானே… என்று கேட்டுள்ளார்.

இந்த கருத்துக்களை வைத்து பார்க்கும்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம் முதல்முறையாக குடும்பத்தினரிடம் முல்லை கோபப்பட்டதே இதற்கு முக்கிய காரணம் மற்றபடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்று கூறலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial rating with promo video update in tamil

Next Story
இது வெடிக்கிற திரியா ..? டிரைலர் எப்படி?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com