Tamil Serial Rating Update : தற்போதைய காலகட்டத்தில் சீரியல் ரசிகர்களும் அதில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகளே மக்கள் மத்தியில அதிக வரவேற்பைபெற்று வருகினறனர். ஆனால் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை கவர்ந்ததா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல் எத்த்தனை சீரியல்கள் ஒளிபரப்பானாலும் வார இறுதியில் வெளியாகும் டிஆர்பி ரேட்ங்கில் முதல் 5 இடங்களை பெறும் சீரியல்களே அதிக கவனம் பெறுகின்றன. அதற்காக மற்ற சீரியல்கள் எல்லாம் சரியாக போகவில்லை என்று அர்த்தம் அல்ல.
சில சீரியல்கள் அதிகப்படியான ரசிகர்களின் மனதை கவர தவறி விடுகின்றன என்று கூறலாம். இதில் சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்படும். அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள ப்ரமோ வீடியோக்களில் எந்த சீரியல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்போம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் :
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் கண்ணன் ஒருவனால் இந்த குடும்பம் பிரிவது நிச்சம் என்றே கருத்துக்களை கூறியுள்ளனர். கடந்த வாரம் வளைகாப்பு பங்ஷன் கொண்டாட்டம் இந்த வாரம் கல்யாண திண்டாட்டம் என ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார். மேலும் பலரும் சூரிய வம்சம் படத்தில் வரும் உதவாக்கரை டைலாக்கையே கருத்துகளாக பதிவிட்டுள்ளனர்.
பாக்கியலட்சுமி :
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் செழியன் மீது கோபத்தை கொட்டியுள்ளனர். அதில் ஒரு ரசிகர் லவ் பண்ணும்போது நல்லா இருக்கும் லைப் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும்போல என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் செழியன் பேரு வச்சதுக்கு பதிலா சனியனு பேர் வச்சிருக்கலாம் ஐ ஹட் செழியன் என்று கூறியுள்ளார். கடந்த சில நாட்களாகவே செழியன் ஜெனி இடையே வரும் சண்டை ரசிகர்களை சலிப்படைய செய்துள்ளது என்று கூறியுள்ளனர்.
பாரதி கண்ணம்மா :
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் சௌந்தர்யாவுக்கு சபாஷ் சொல்லி வருகினறனர். அதில் ஒரு ரசிகர் மம்மி செம போங்க என்று பதிவிட்டுள்ளார். மேலும் பலரும் இந்த சீன் சூப்பர் என்று கூறியுள்ளனர். பாரதி கண்ணம்மா சீரியலில் கடந்த சில நாட்களாகவே விறுவிறுப்பாக ரசிகாகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் அளவுக்கு காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது வரவேற்பை பெற்றுள்ளது என்றே கூறலாம்.
ராஜா ராணி 2 :
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் சந்தியாவை கலாய்த்து வருகின்றனர். அதில் ஒரு ரசிகர் இந்த ப்ரமோ சவுண்ட் இல்லாம பாத்தா காரமா சாப்டு அழுவுற மாதிரி இருக்கும் என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் எந்த சுட்வேஷன் வந்தாலும் சேம் ரியாக்ஷன் என்று கூறியுள்ளார். மற்றெரு ரசிகர் ஓவர் ஆக்டிங் என்று கலாய்த்துள்ளார். மற்றொரு ரசிகர் ஐபிஎஸ் கனவை மூடி வச்சிட்டு இங்க வந்து குதிச்சிட்டு இருக்கியா பாடி சோடா என்று பதிவிட்டுள்ளார்.
ரோஜா :
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் அர்ஜுன் மாஸ் காட்டுகிறார் என்ன செய்ய இந்த ரோஜாதான் அர்ஜுனை எப்பவுமே ஏமாற்றுகிறார் என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் ஒரு மணி நேரம் ஸ்பெஷல் எபிசோடு போட்டாதான ரோஜா ஜெயில்ல இருந்து வெளிய வருவாங்க என்று பதிவிட்டுள்ளார். எப்பவும் உண்மை பேசும் ரோஜாவையும் பொய் பேச வைத்த இயக்குனர் சறுக்கி விட்டார் என ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார். மேலும் பலரும் இந்த சீன் வைத்த இயக்குநருரை விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த ப்ரமோவின் கருத்துக்களை வைத்து பார்க்கும்போது பாரதி கண்ணம்மா சீரியலே ஓரளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சௌந்தர்யா தனது மகனிடம் பேசும் காட்சிகளே ரசிகர்களுக்கு ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்று கூறலாம் மற்றபடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்பதிப்படுத்தும் என நம்பலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil