Tamil Serial Rating Bharathi Kannamma : புருஷன் போன் பொண்டாட்டிகிட்ட இருக்காம வேற யார்கிட்ட இருக்கும் என்ன வெண்பா இதுக்கெல்லாம் ஷாக் ஆகுறீங்க இன்னும் எவ்வளவோ இருக்கே…..
விஜய் டிவியின் முக்கிய சீரியல் பாரதி கண்ணம்மா. கணவன் மனைவி உறவு எப்படி இருக்க கூடாது என்பதற்கு இந்த சீரியல் மிகப்பெரிய உதாரணம். அதோடு மட்டுமல்லாமல் ஒன்னு சொல் புத்தி இருக்கனும் இல்ல சுயபுத்தி இருக்கனும் இரு ரெண்டுமே இல்லைனா வாழ்க்கை இப்பத்தான் போகும் என்று சொல்லாம்.
மனைவியை சந்தேகப்படும் பாரதி 8 வருடங்கள் ஆகியும் அதில் உண்மை இருக்கிறதா என்று கூட யோசிக்க முடியாத ஒரு நபர். மறுபுறம் கண்ணம்மா தான் தப்பே செல்லவில்லை என்று தெரிந்தும் கணவர் ஏன் நம் மீது சந்தேகப்படுகிறார் இதற்கு பின்னால் என்ன இருக்கிறது என்று தெரிந்துகொள்ள முயற்சிக்காத ஒரு கேரக்டர்.
இவர்கள் இருவருக்குள்ளும் என்னதான் நடக்கிறது என்று தெரிந்துகொள்ள முயற்சி செய்யாததால் இவர்களை தனது சூழ்ச்சியால் பிரித்த வெண்பா மட்டும் தனது தேவைகளை பூர்த்தி செய்ய ஓயாமல் முயற்சி செய்கிறார் ஆனால் அவரது முயற்சி கை கூடிய பாடில்லை. இப்படி முக்கிய கேரக்டர் மூவரும் அவரவர் பாதையில் செல்லதால் சீரியல் ஏனோ தானோனு செல்கிறது.
இதற்கிடையே வெண்பாவின் முயற்சிக்கு கடிவாளம் போடும் அளவுக்கு அவரது அம்மா இப்போ வெண்பாவுக்கு தொல்லை கொடுக்க தொடங்கியுள்ளார். பாரதியிடம் பேசுவதை விட்டுவிட்டு நான் சொல்லும் மாப்பிள்ளையை திருமணம் செய்துகொள்ள சொல்லி தனது தரப்பில் பெரிய முயற்சி செய்கிறார்.
இந்நிலையில், தற்போது பாரதிக்கு வீடியோ கால் செய்யும் வெண்பாவுக்கு அதிர்ச்சி தரும் விஷயமாக கண்ணம்மா போனை அட்டன் செய்கிறார். இதனால் அதிர்ச்சியாகும் வெண்பா பாரதி போன் எப்படி உண்கிட்ட என்று கேட்க புருஷன் போன் பொண்டாட்டிக்கிட்டதான இருக்கும் என்று சொல்ல வெண்பா கோபத்தில் வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் போட்டு உடைக்கிறார். இந்த ப்ரமோ தற்போது வைரலாகி வருகிறது.
இதை பார்த்த ரசிகர்கள் பலரும் வெண்பாவுக்கு இப்போதான் சரியான பாடம் புகட்டுகிறார்கள். அப்படியோ பாரதியையும் கொஞ்சம் திருத்தி விடுங்கள் டைரக்டர் சார் என்று கூறி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil