Tamil Serial Rating : என்னதான் சொல்ல வர்றீங்க டைரக்டர் சார்… ஒன்னுமே புரியல… ரோஜா சீரியல் பரிதாபம்

Tamil Serial Update : சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது

Tamil Serial Rating Update : தற்போதைய காலகட்டத்தில் சீரியல் ரசிகர்களும் அதில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகளே மக்கள் மத்தியில அதிக வரவேற்பைபெற்று வருகினறனர். ஆனால் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை கவர்ந்ததா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல் எத்த்தனை சீரியல்கள் ஒளிபரப்பானாலும் வார இறுதியில் வெளியாகும் டிஆர்பி ரேட்ங்கில் முதல் 5 இடங்களை பெறும் சீரியல்களே அதிக கவனம் பெறுகின்றன. அதற்காக மற்ற சீரியல்கள் எல்லாம் சரியாக போகவில்லை என்று அர்த்தம் அல்ல.

சில சீரியல்கள் அதிகப்படியான ரசிகர்களின் மனதை கவர தவறி விடுகின்றன என்று கூறலாம். இதில் சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்படும். அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள ப்ரமோ வீடியோக்களில் எந்த சீரியல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்போம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் :

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் செம்மையாக கலாயத்து  கமெண்ட்களை பதிவிட்டுள்ளனர். இதை பார்த்த ஒரு ரசிகர் அப்படியே விஜய் , அஜித், சூர்யா எல்லாம் கூப்பிடுங்க .அஷ்வின் , தினேஷ் கார்த்திக் எப்போ வராரு . சிம்பு வருவார்ல கன்டிப்பா என பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் எங்க ஸ்கூல் ஆண்டு விழாவுக்கு கூட இப்படி கொண்ட்டிருக்கமாட்டாங்க என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் இவ்ளவு பெரிய மண்டபத்துல பக்ஷன் வைக்குராய்ங்க, பெரிய பெரிய ஆளல்லாம் பக்ஷனுக்கு கூப்டுராய்ங்க, கேட்டா காசு இல்லனு உருட்டுவாய்ங்க என பதிவிட்டுள்ளார்.

மற்ற்றொரு ரசிகர் தனத்தோடு அம்மா எப்படி மனசு மாறுனாங்க. இனி தனம் கீழயே நிக்க மாட்டா என்று பதிவிட்டுள்ளார். பழைய முல்லை இருந்த செமயா இருக்கும் என்று ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் நான் என்ன நெனச்சேன் தனம் அவங்க அம்மா வீட்டுக்கு போன பின்னாடி கண்ணன் ஐஸ்வர்யா லவ் வேற மாதிரி போகணும்னு நினைச்சேன் என பதிவிட்டுள்ளார். அதிகம் ஆஹ் குடும்ப விழா எடுத்தது இந்த சீரியல் தான்…. அதுலயும் அந்த லாஸ்ட்ல செண்டிமெண்ட் தமிழ் நாட்டை தாண்டிய ஒரு விஷயம்… என ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார்.

பாக்கியலட்சுமி

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் கோபியை திட்டி தீர்த்து வருகிறனர். அதில் ஒரு ரசிகர் பயபுள்ள பண்ற வேலைய மறைக்க என்னென்ன பண்றான் பாருங்க என பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் வீட்டுல மாட்டக்கூடாதுனு என்ன என்ன பண்ற பாருங்க என பதிவிட்டுள்ளார். கோபி போல் ஆட்கள் திருமணம் என்ற பந்ததின் மூலம் ஒரு பெண்ணின் வாழ்க்கையையும் பெற்ர பிள்ளைகள் வாழ்க்கையையும் நாசமாக்காமல் திருமணமே செய்யாமல் இருந்திருக்கலாம் என ஒரு ரசிகர் சீரியஸாக கமெண்ட் கொடுத்துள்ளார்.

மற்றொரு ரசிகர் பாசமே இல்லாதா கணவர் வந்து திடீர்னு பரிசு கொடுத்தா ஏதோ ஒரு தப்பு பன்றாங்கன்னு அர்த்தமோ என பதிவிட்டுள்ளார். பழைய ராதிகா முகத்தில் ஒரு நியாயம் தெரியும் இந்த புது நடிகை செயல் தோற்றம் எல்லாம் தவறாகவே உள்ளது. என பதிவிட்டுள்ளார் ஒரு ரசிகர். மற்றொரு ரசிகர் அட பாவி … நடத்து நடத்து என்னைக்கு உண்மை தெரியுதோ நீ காலி என பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் கோபி ஆனால் நீ இப்படி ஜால்ரா அடிப்பேன்னு நெனச்சு கூட பாக்கல என பதிவிட்டுள்ளார்.

ராஜா ராணி 2

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் சந்தியாவுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனா. அதில் ஒரு ரசிகர் சிவகாமி இன்னைக்கு நல்லா பேசும்.. நாளைல இருந்து சந்தியாவ திட்ட ஆரம்பிச்சிரும் என்று பதிவிட்டுள்ளார். இதில் மற்றொரு ரசிகர் இனிமேலாவது அத்த நம்மல புரிஞ்சிக்குவாங்க என சந்தியா நினைப்பது போலவும் அதற்கு சிவகாமி என்னைக்கும் உன் மேல பகை பகைதான்டி என சொல்வது போலவும் பதிவிட்டுள்ளனார். மற்றொரு ரசிகர் சந்தியா நீ என்ன பண்ணாலும் உன் மாமியாருக்கு புரியபோறது இல்ல… சரவணனுக்கு புரிஞ்சா சரி. என பதிவிட்டுள்ளார்.

மற்றொரு ரசிகர் கிண்டலாக ஆமா இந்த சீரியல் ல என்ன கணவனும் மனைவியும் செல்போன் வீடியோ காமிச்சே தப்பிச்சிக்கிறார்கள் என பதிவிட்டுள்ளார். அடியே சந்தியா உனக்கு ஒரு வாரம் தான் time அதுக்குள்ள நீ நல்ல மருமகள்னு நிரூபிக்கணும் என சிவகாமி சொல்வது போல் ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார். ஆமா சிவகாமி என்ன பார்வை இதுக்கு அப்புறம் நாளைக்கே கழுவி ஊத்ததான் போற என்ன சிவகாமி நான் சொல்றது  என சந்தியா நினைப்பது போல கமெண்ட் பதிவிட்டுள்ளார். இவளே வாய்பேசி கடைய மூட வைப்பளாம்.. அப்றம் இவளே அத தொறக்க வைப்பளாம்… என பதிவிட்டுள்ளார்.

ரோஜா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் அனு இத்தனை நாளும் நடித்துக் கொண்டு இருந்தார் இந்த லூசு இன்னும் திருந்தாத போல அடிபட்டு திருந்தாத ஜென்மம் அனு என பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் என்னதாய்யா சொல்ல வாரிங்க ஒன்னும் புரியல என பதிவிட்டுள்ளார். திரும்பவும் முதலில் இருந்தா இந்த சீரியலுக்கு முடிவே கிடையாதா ரொம்ப நல்லா பண்றீங்க என மற்றொரு ரசிகர் பதிவிட்டுள்ளார். கதையை எண்ணி எங்களுக்கு மெண்டல் வந்துடும் இனியாவது ரோஜா செண்பகத்தை பார்க்க வேண்டும் கோர்ட்ல வந்து அணுவை பத்தி சொல்லி மாணிக்கத்தின் முகத்தில் கரியை பூசணும் என மற்றொரு ரசிகர் பதிவிட்டுள்ளார்.

அதில் ஒரு ரசிகர் 4வது மாடியிலிருந்து விழுந்து கோமா ஸ்டேஜுக்கு போய் இரண்டாவது நாளே பிழைத்துவிட்ட அனு, எந்த ஊரு ஹாஸ்பிடல் கொஞ்சம் சொல்லுங்க எனபதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் டைரக்டர் கதையை முடிக்க கூடாதே என்பதற்காக இழுத்துக்கொண்டு போய் நம்ம உயிர வாங்குராரு என பதிவிட்டுள்ளார். எனக்கு ஒண்ணுமே புரியல ஆனா ஒன்னு மட்டும் புரியுது இந்த பைத்தியம் பிடிச்ச டைரக்டர் நம்மலயும் பைத்தியம் பிடிக்க வைக்கிறான் என பதிவிட்டுள்ளார்.

இந்த கருத்துக்களின் அடிப்படையில் பார்க்கும்போது ரோஜா சீரியலே கொஞ்சம் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ள என்று சொல்லாலம். கோமாவில் இருந்த அனு தப்பித்தது ரோஜா ஆஸ்பத்திரியில் அனுமதி ஏன் என் இந்த பரமோ ரசிகர்கள் மத்தியில் ஒரு வித எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மற்றபடி அனைத்து சீரியலும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என நம்பலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial rationg weekly promo fans reviews

Next Story
Zee Tamil Serial : வெற்றிபெற்ற மகிழ்ச்சியில் பார்வதி… வில்லத்தனத்தை தொடங்கிய ஐஸ்வர்யா… அடுத்து என்ன?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com