Serial Actress Priyanka Nalgari Amman : தமிழகத்தில் அம்மன் வேடமிட்டு நடிக்கும் நடிகைகளுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. ரம்யா கிருஷ்ணன், மீனா, பானுபிரியா சமீபத்தில் நயன்தாரா என ஒரு சில நடிகைகள் அம்மனாக நடித்து பெரும் புகழ்பெற்றுள்ளனர். முன்பு திரைப்படங்களில் மட்டுமே அம்மன் வேடம் கலைகட்டிய நிலையில், தற்போது சின்னத்திரையிலும் அம்மன் ஆட்டம் தொடங்கியுள்ளது.
இதில் கலர்ஸ் தொலைக்காட்ச்சியில் அம்மன் சீரியலில் அம்மன் வேடமிட்ட நடிகைகள் புகைப்படம் மற்றும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் நடிகை வனிதா ஆகியோர் அம்மன் வேடம் போட்டு ரசிகர்கள் மத்தியில் வைரலாக வலம் வந்தனர். அந்த வகையில் தற்போது ரோஜா சீரியல நடிகை பிரியங்கா நல்காரி அம்மன் வேடத்தில் புது அவதாரம் எடுத்துள்ளார்.
சின்னத்திரையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் சீரியல்களில் ஒன்று ரோஜா. சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில், பிரியங்கா நல்காரி மற்றும் சுப்பு சூரியன் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இதில் இவர்கள் இருவரின் ரொமான்ஸ் காட்சிக்கு அதிக ரசிகர்கள் இருந்து வரும் நிலையில், பிரியங்காவை சமூக வலைதளங்களில் அதிக ரசிகர்கள் ஃபாலோ செய்து வருகின்றனர்.
இந்த சீரியலில் ரோஜா தான் தான் செண்பகத்தின் உண்மையான மகள் என நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இதனை தடுக்க வில்லி அனு செய்யும் சூழ்ச்சியே தற்போது விறுவிறுப்பாக திரைக்கதையுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இதனால் ரோஜா குறித்த உண்மை எப்போது தெரிய வரும் என்று ரசிகாகள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது ரோஜா அம்மன் வேடத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.
பிரியங்கா நல்காரி அம்மன் போல இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். அதற்க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், மூக்குத்தி அம்மன் படத்தில் அம்மனாக கலக்கிய நடிகை நயன்தாராவுக்கு போட்டியாக பிரியங்கா உருவெடுத்துள்ளர் என்று ரசிகர்கள் கருத்தக்களை கூறி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil