ரோஜா சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நடிகை அக்ஷையா தனது திருமண நாளில் ரசிகர்களிடம் மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சன்.டி.வி.யின் பிரபலமான சீரியல்களில் முக்கியமானவது ரோஜா. சிப்பு சூரியன், பிரியங்க நல்காரி, வடிவுக்கரசி, ராஜேஷ் விஜே அக்ஷையா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இந்த சீரியல் 1000 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக பயணித்துக்கொண்டிருக்கிறது. மேலும் இந்த சீரியலில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கு தனியாக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
அந்த வகையில் தனக்கென தனியாக ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளவர் விஜே அக்ஷையா. சன்.டி.வியின் வணக்கம் தமிழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பிரபலமான இவர், அதனைத் தொடர்ந்து சன்டிவியின் ரோஷா சீரியலில் அனு என்ற முக்கிய நெகடீவ் கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமானார். ஏற்கனவெ அந்த சீரியலில் அனுவாக நடித்து வந்த நடிகை ஷாமிலி விலகியதை தொடர்ந்து அக்ஷையா அந்த கேரக்டருக்கு வந்தார்.
தொடக்கத்தில் இவரை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் தற்போது அனு என்ற வில்லியாக ரசிகர்கள் இவரை பாராட்டி வருகின்றனர். அனு கேரக்டரை பலரும் திட்டி வருவதே இவருக்கு கிடைக்கும் முக்கிய பாராட்டாகும். மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் அக்ஷையாவை பின்தொடரும் ரசிகர்கள் எண்ணிக்கையும் அதிகம். அதேபோல் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களையும் அக்ஷையா பதிவிட்டு வருகிறார்.
தற்போது ரோஜா சீரியல் பரபரப்பின் உச்சமாக சென்றுகொண்டிருக்கும் இந்த ரசிகர்களுக்கு விநாயகர் சதூர்த்தி வாழ்த்துக்களை சொல்லும் விதமாக சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த நேரத்தில் தனது 2-வது திருமண நாளை கொண்டாடும் அக்ஷையா தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா என்று ஆச்சரியத்துடன் கேட்டு அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனா. இது தொடர்பாக அக்ஷையா வெளியிட்டுள்ள பதிவில்,
எங்களுடைய குடும்பம் விரைவில் ஆத்மார்த்தமாக மூவராக மாறும் என்பதை உங்கள் அனைவருக்கும் தெரிவிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். சிறிய அதிசயம் நடக்க உள்ளது என்று கூறியுள்ள அவர், இரண்டாம் ஆண்டு திருமண நாள் வாழ்த்துக்கள் என்று தன்னுடைய கணவருக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார். அவருக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”