New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/07/Vj-Akshiya.jpg)
vj Akshayaa In Roja Serial : சன்டிவியின் ரோஜா சீரியலில் தற்போது வில்லியாக களமிறங்கியுள்ள விஜே அக்ஷைய வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.
Suntv Roja Serial VJ Akshayaa Viral Post : சன்டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல்களில் ஒன்று ரோஜா. சுப்பு சூரியன், பிரியங்கா நல்காரி, வடிவுக்கரசி ராஜேஷ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் இந்த சீரியலில் ஷாமிலி என்பவர் முக்கிய வில்லி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், இதற்கு காரணம் ரோஜா அர்ஜூன் ரொமான்ஸ் கட்சிகள் தான் என்றாலும், அனுவின் வில்லத்தமும் முக்கிய காரணமாக உள்ளது.
வரந்தோறும் வெளியாகி வரும் டிஆர்பி ரேட்டிங்கில், முக்கிய இடம் வகித்து வரும் ரோஜா சீரியலில் இருந்து அனுவாக நடித்து வந்த நடிக ஷாமிலி விலகியுள்ளார். அவர் கர்ப்பமாக இருப்பதால் சீரியலில் இருந்து விலகிவிட்டதாக தகவல் வெளியானதை தொடர்ந்து தற்போது அவருக்கு பதிலாக விஜே அக்ஷையா அனுவா ரோஜா சீரியலில் களமிறங்கியுள்ளார். இவ்வளவு நாள விஜேவாக இருந்த அவர் இந்த சீரியல் மூலம் நடிகை அவதாரம் எடுத்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை அக்ஷையா, “முதன்முறையாக, உங்கள் எல்லா அன்பையும் ஆதரவையும் கொண்டு, ரோஜா சீரியலில் # அனு என மிகவும் சவாலான வில்லி பாத்திரத்தில் அறிமுகமாகியுள்ளேன். நான் ஏற்றுக்கொண்ட இந்த கதாபாத்திரம் சிறந்து விளங்கவும், திறமையை வெளிப்படுத்தவும், உங்கள் இதயப்பூர்வமான ஆசியும் அன்பு எனக்கு தேவை.
இந்ந சீரியலில் முதல் நாளிலிருந்து நீங்கள் எப்படி எடுத்தக்கொள்கிறீகள் என்பது பொறுத்து எனது எதிர்கால முயற்சிகளிலும் என்னைத் திருத்த எனக்கு உதவுங்கள். ஒரு வி.ஜே. வாக இருந்து நடிகையாக இந்த பயணம் மிகப்பெரியது. மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன் என்று பதிவிட்டுள்ளார்.
ரோஜா சீரியல் அதிக பார்வையாளர்கள் கொண்ட சீரியல்களில் ஒன்றாக இருப்பதால்,அவர் நடித்தது குறித்து ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஹிட்லிஸ்ட், செம்மா மார்னிங் மற்றும் வனக்கம் தமிழா போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் அக்ஷயா என்பது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.