/tamil-ie/media/media_files/uploads/2022/07/Roja-1.jpg)
தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல்களிரல் சன் டி.வி. சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. காலை முதல் நள்ளிரவு வரை சீரியலை ஒளிபரப்பி இல்லத்தரசிகளை தனது கட்டுக்குள் வத்திருப்பதில் சன் டி.வி.க்கு முக்கிய பங்கு உண்டு.
மேலும் சன்.டி.வியில் பல வருடங்களுக்கு முன்பு வெளியான சீரியல்கள் கூட மக்கள் மத்தியில் நீங்க இடம் பெற்றுள்ள நிலையில், தற்போது ஒளிபரப்பாகி வரும் சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பையும் விறுவிறுப்பையும் ஏற்படுத்த தவறுவதில்லை.
அந்த வகையில் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல் ரோஜா. பிரியங்கா நல்காரி, சுப்பு சூரியன் வடிவுக்கரசி, ராஜேஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் அதிகம்.
அதுமட்டுமல்லாமல் இந்த அர்ஜூன் ரோஜா இடையேயான ரொமான்ஸ் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் இதனால் ரோஜா சீரியல் டிஆர்பி ரோட்டிங்கிலும் முன்னணியில் இருந்து வருகிறது.
இந்நிலையில், நாளுக்கு நாள் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலில் தற்போது பெரிய ட்விஸ்ட் அரங்கேறியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ரோஜா காணமல் போனதாக காட்சிகள் ஒளிபரப்பானது. ஆனால் வில்லன் கோஷ்டி ரோஜா இறந்துவிட்டார் என்று கூறி வருகின்றனர்.
இதை உறுதிப்படுத்தும் விதமாக ரோஜா பேயாக வரும் சில சீன்கள் ஒளிபரப்பானது. இதெல்லாம் நடிப்பா அல்லது ரோஜா உண்மையிலேயே இறந்துவிட்டாரா என்று ரசிகர்கள் குழப்பத்தில் இருந்து வந்த நிலையில், தற்போது அவர்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தும் விதமாக ஜெசிகா விக்டர் ஐபிஎஸ் என்ற கேரக்டரில் ரோஜா போல் தோற்றம் கொண்ட மற்றொரு கேரக்டர் அறிமுகமாகியுள்ளது.
இதனால் சீரியலில் பிரியங்கா நல்காரி இரட்டை வேடமா அல்லது வில்லன் கோஷ்டியை ஏமாற்ற இறந்த மாதிரி நடித்து ஜெசிகா விக்டராக மீண்டும் ரோஜாவே வந்துள்ளாரா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.