/tamil-ie/media/media_files/uploads/2021/07/Roja-Serial-1.jpg)
Suntv Roja Serial Promo Update : சின்னத்திரை சீரியகளில் ரசிகர்களை பரபரப்பு உள்ளாக்குவதில் ஒருசில சீரியல்களுக்கு முக்கிய இடம் உண்டு. அந்த வகையில் விறுவிறுப்பாக கதையை கொண்டு சென்று ரசிகர்களை ஒரு வித எதிர்பார்ப்புக்குள் தள்ளுவதில் ரோஜா சீரியல் தனி பெருமை பெற்றுள்ளது. கடந்த சில வாரங்களாக இந்த சரியலில் நடக்கும் குழப்பங்கள் ரசிகர்களுக்கு ஒரு வித த்ரிலிங்கை கொடுக்கிறது என்றே சொல்லாம்.
செய்யாத தவறுக்கு சிறையில் உள்ள ரோஜா, ரோஜாவை காப்பாற்ற அனுவை கடத்தும் அர்ஜூன், சாக்ஷியை அடிக்கும் ரோஜா, செண்பகம் கண்ணில்படும் அனு என கடந்த வார எபிசோடுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்துவதாக அமைந்தது. இந்த பரபரப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
இந்த ப்ரமோவில், சிறைக்கு சென்று ரோஜாவை சநதிக்கும் டைகர் மாணிக்கம். அர்ஜுனை சுட்டுவிடுவார்கள் என சொல்கிறார். அதன் பின் அர்ஜுனை போலீஸ்காரர்கள் சிலர் துரத்தி சென்று சுட்டுவிடுவது போல காட்டப்படுகிறது. ஆனால் அதற்கு முன்னே ப்ரமோவில் ரோஜா அர்ஜூன் சார் என கத்தி விடுகிறார். இதில் இருந்து ரோஜாவின் கனவில்தான் அர்ஜூன் சுடப்படுகிறார் என்பது ஓரளவு தெளிவாகிறது. அடுத்து ரோஜாவை பழி தீர்க்கும் முயற்சியில் சாக்ஷி இரும்பு பைப் கொண்டு அவரை தாக்கிவிடுகிறார்.
அதனால் அவரது தலையில் ரத்தம் வழிகிறது. அடுத்து அவருக்கு என்ன ஆனது என்று தெரியிவில்லை. அத்துடன் இந்த ப்ரமோ முடிகிறது. இதனால் இன்றைய எபிசோடு சற்று விறுவிறுப்பு அதிகமானவே உள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.