Tamil Serial Rating : அனுவை பின்தொடரும் அர்ஜூன் டீம் : உண்மையை கண்டுபிடிப்பாரா?

Tamil Serial Update : அனு அவர்களின் வாரிசு இல்லை என்று தெரிந்தும் சீரியல் முடியவில்லை எள்றால் அடுத்து ஒரு புதிய ட்ரீட் இருக்கிறது என்பதை நாம் எதிர்பாக்கலாம்.

Tamil Serial Update : அனு அவர்களின் வாரிசு இல்லை என்று தெரிந்தும் சீரியல் முடியவில்லை எள்றால் அடுத்து ஒரு புதிய ட்ரீட் இருக்கிறது என்பதை நாம் எதிர்பாக்கலாம்.

author-image
WebDesk
New Update
Tamil Serial Rating : அனுவை பின்தொடரும் அர்ஜூன் டீம் : உண்மையை கண்டுபிடிப்பாரா?

Roja Serial Update : சன்டிவியில் வெளியாகும் சீரியல்களில் ரோஜா சீரியலுக்கு முக்கிய இடம் உண்டு. டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னணியில் இருந்து வரும் இந்த சீரியலில் பிரியங்கா நல்காரி, சிப்பு சூரியன், வடிவுக்கரசி, ராஜேஷ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகினறனர். ஆசிரமததில் வளரும் பிரியா கொலை வழக்கில் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள அண்ணப்பூரணியின் பேத்தி அனு என்று சொல்லிக்கொண்டு அந்த வீட்டில் நுழைந்து விடுகிறார்.

Advertisment

இதற்கிடையே பிரியாவுடன் ஆசிரமத்தில் வளர்ந்த் ரோஜாவை அண்ணப்பூரணியின் பேரன் அர்ஜூன் காதலித்து திருமணம் செய்துகொள்கிறார். இவர்களுக்குள் நடக்கும் ஆடுபுலி ஆட்டம்தான் இந்த ரோஜா சீரியல். முதலில் அனுவை இந்த குடும்பத்தின் வாரிசு என்று நினைக்கும் ஒரு குருப் அவர் இந்த குடுத்பத்தின் வாரிசு இல்லை என்று நிரூபிக்க மற்றொரு குருப் என்று இருந்தது. ஆனால் தற்போது ஒட்டுமொத்த குடும்பமும் அனுவுக்கு எதிராக திரும்பி அவர் இந்த குடும்பத்தின் வாரிசுதான என்பதை கண்டுபிடிக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறது

இதற்கிடையே அனு விரிக்கும் வலையில், ரோஜா சிக்குவதும் அவரை அர்ஜூன் காப்பாற்றுவதும், அடுத்து அர்ஜூன் சிக்குவதும் அவரை ரோஜா காப்பாற்றுவதும் போன்ற சீன்கள் அடுக்கடுக்காக வந்துகொண்டிருந்தது. முதலில் இதன ரசித்த ரசிகர்கள தற்போது இந்த சீன்களுக்கு கடுமையான விமர்சனங்களை கொடுத்து வருகினறனர். மேலும் ஒரு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தால் முடிந்துவிடும் இந்த சீரியல் ஆனால் அதை செய்யாமல் ஜவ்வு மாதிரி இழுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், சமீபத்தில் அனு விரித்த வலையில் மாட்டிய ரோஜா சிறையில் இருந்து விடுதலையாகி வெளியில் வந்துவிட்ட நிலையில், அனு இந்த குடும்பத்தின் பேத்தி இல்லை என்பதை நிருப்பிக்க ஒரு விழாவை ஏற்பாடு செய்கிறார். அனுவை முழுவதுமாக நம்பி இருந்த அண்ணப்பூரணி தற்போது அனுவை சந்தேகப்பட்டு அர்ஜூனுடன் இணைந்துள்ளார். இதனால் சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisment
Advertisements

ஆனால் ஏற்கனவே ஜவ்வு மாதிரி .இழுத்துக்கொண்டிருக்கும் இந்த சீரியலில் இப்போதைக்கு அனு அவர்களின் குடும்ப வாரிசு இல்லை என்பதை நிருபிக்க மாட்டார்கள் என்று சொல்லாம் ஏனென்றால்,அனு அவர்களின் வாரிசு இல்லை என்ற உண்மை தெரிந்துவிட்டால் சீரியல் முடிந்துவிடும். இதனால் இன்னும் சீரியலை சுவாரஸ்யப்படுதுவதாக கூறி ஜவ்வு மாதிரி .இழுக்கவே டைரக்டர் முடிவு செய்திருப்பார். அப்படி அனு அவர்களின் வாரிசு இல்லை என்று தெரிந்தும் சீரியல் முடியவில்லை எள்றால் அடுத்து ஒரு புதிய ட்ரீட் இருக்கிறது என்பதை நாம் எதிர்பாக்கலாம்.

இன்றைய எபிசோடு குறித்த ப்ரமோவில் அண்ணப்பூரணியின் மகள் செண்பகத்தை கொலை செய்ய, அனுவும் சாக்ஷியும் திட்டமிடுகின்றனர். இந்த திட்டத்தை கண்டுபிடிக்க அர்ஜூன் மற்றும் இன்ஸ்பெக்டர் சந்திரகாந்தா இருவரும் முயற்சி செய்கின்றனர். இதில் யார் திட்டம் பலித்தது என்பதை இன்றைய எபிசோட்டில் காணலாம். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ப்ரமோ எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும்,  சீரியல்ல அனு குறித்த உண்மையை கண்டறிய இன்னும் பல எபிசோடுகள் கடக்க வேண்டுமோ என்ற எதிர்பார்ப்பே அதிகமாகியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Update Roja Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: