TamilSerial Rating Roja : சன்டியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல்களில் ஒன்று ரோஜா. சுப்பு சூரியன், பிரியங்கா நல்காரி, வடிவுக்கரசி, ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த சீரியல் எபிசோடுகள் நாளுக்கு நாள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில, டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வருகிறது.
ஒரு அழகான குடும்பத்தில், மகள் இறந்துவிட. பேத்தியும் தொலைந்து விடுகிறார். இதனால் இதனால் மனஉலைச்சலில் இருந்து வரும் அண்ணப்பூரணிக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக தொலைந்துபோன பேத்தி திரும்ப கிடைக்கிறாள். அதேபோல் அண்ணப்பூரணியில் பேரன் அர்ஜூன் அநாதை பெண்ணான ரோஜாவை திருமணம் செய்துகொண்டு வீட்டிற்கு வருகிறார்.
இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்ளாத அண்ணப்பூரணி தனது பேத்தியை அர்ஜூனுக்கு திருமணம் செய்து வைக்க எண்ணுகிறாள். இதற்கிடையே பேத்தியாக வீட்டிற்குள் நுழைந்துள்ள அனு இந்த வீட்டின் வாரிசு இல்லை என்றும், அநாதை ரோஜா தான் இந்த வீட்டின் வாரிசு என்று அர்ஜூன் கண்டுபிடித்து விடுகிறார். ஆனால் இதை நம்பாத அண்ணப்பூரணி தனது பேத்தி அனு சொல்லும் அனைத்தையும் கண்மூடித்தனமாக நம்புகிறாள்.
இதற்கிடையே அனு இந்த வீட்டு வாரிசு இல்லை என்று நிரூபிக்க அர்ஜூன் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் அனு தனது தோழி சாக்ஷியின் உதவியுடன் தடுத்துவிடுகிறாள். ஒருகட்டத்தில் இறந்ததாக கருதப்பபடும் அண்ணப்பூரணியின் மகள் செண்பகம் திரும்ப கிடைக்க, கதையில் சுவாரஸ்யம் அதிகரிக்கிறது. திரும்பி வந்த செண்பகம் அனு தனது மகள் இல்லை ரோஜாதான் தனது மகள் என்பதை தெரிந்துகொள்கிறாள்.
மகள் மீது அதீத பாசம் வைத்துள்ள அண்ணப்பூரணி மகளின் பேச்சையும் நம்பி அனுவுக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க அர்ஜூனிடம் கூறுகிறாள். இதற்கிடையே கொலை பழியில் சிக்கிய ரோஜா தற்போது விடுதலையாகியுள்ளார். இந்த பக்கம் அடுத்து என்ன செய்யலாம் என்று அனு சாக்ஷியுடன் திட்டம் தீட்டுகிறாள். இதனால் அடுத்தடுத்த எபிசோடுகள் பரபரப்பாகியுள்ளது அந்த வகையில் இன்றைய எபிசோடு குறித்த ப்ரமோ வெளியாகியுள்ளது.
இதில் அனுவை வீட்டின் வாரிசு இல்லை என்று நிரூபிக்க அர்ஜூன் விழா எடுப்தாக கூறுகிறார். அடுத்து சிறையில் சாக்ஷியை சந்திக்கும் அனு செண்பகத்தை கொன்றுவிடுபடி கூறுகிறாள் இந்த ப்ரமோ ஒருபுறம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும் மறுப்புறம் பழைய திரைக்கதை சலிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. தற்போது சீரியல் 1000-ம் எபிசோடுகளை கடந்துள்ளது.
இந்த எபிசோடுகள் அனைத்திலுமே அனு அர்ஜூனுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுவதும் அதில் மாட்டிக்கொள்ளும் அர்ஜூன் ரோஜா எப்படி மீண்டும் வந்தார்கள் என்பதை தான் காட்டியுள்ளனர். ஆதிலும் சுவாரஸ்யம் இல்லாமல் பழைய திரைக்கதையை அப்படியே ஒளிபரப்பி வருகிறனர். அனு சாக்ஷி செய்யும் சூழ்ச்சியில் அர்ஜூன் மாட்டிக்கொண்டால் ரோஜா கோவிலில் பாரிகாரம் செய்வதும், ரோஜா மாட்டிக்கொண்டால் அர்ஜூன் கோர்ட்டில் வாதாடுவதும் வழக்கமாக உள்ளது.
இதனை ஒருசில ரசிகர்கள் ரசித்தாரும் பெரும்பாலும் ரசிகர்கள் திரைக்கதையை மாற்றுங்கள் அல்லது சீரியலை முடித்துவிடுங்கள் என்றே கருத்துக்களை கூறி வருகினறனர். இந்நிலையில், இன்றைய ப்ரமோவில் செண்பகத்தை கொலை செய்ய அனு திட்டம் தீட்டுவதும், அனுவை மாட்டிவிட அர்ஜூன் விழா எடுப்பதும் காண்பிக்கப்படுகிறது. ஆனால் இதில் யார் வெற்றி பெறுவார் என்பதை எளதில் கணித்துவிடலாம். நிச்சியமாக அனு பிளான் சக்சஸ் ஆக நிறையவே வாயப்புள்ளது.
ஏனெ்னறால் அர்ஜூன் பிளான் சக்ரஸ் என்றால் இந்த சீரியலே முடிந்துவிடும். ஆனால் ரசிகர்கள் யாரும் சீரியல் இப்போது முடிவதை யாரும் விரும்பவில்லை. இதனால் அர்ஜூன் பிளான் தோல்வியில்தான் முடியும் என்பது பலரும் எதிர்பார்க்கும் ஒன்றாக உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil