சன்.டி.வி.யின் பிரபலமான சீரியல்களில்முக்கியமான ஒன்றாக இருந்தது ரோஜா சீரியல். சுப்பு சூரியன், பிரியங்க நல்காரி ஆகியோர் முதன்மை கேரக்டரில் நடித்த இந்த சீரியலில், வடிவுக்கரசி, ராஜேஷ் விஜே அக்ஷையா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வந்தனர். 1000 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக பயணித்துக்கொண்டிருந்த இந்த சீரியல், பெரிய எதிர்பார்ப்புடன் ஒளிபரப்பானது.
Advertisment
மேலும் இந்த சீரியலில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கு தனியாக ரசிகர்கள் பட்டாளம் உருவானது. குறிப்பாக சுப்பு சூரியன் நடித்த அர்ஜூன் கேரக்டர், பிரியங்கா நல்காரி நடித்த ரோஜா கேரக்டருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு ஏற்பட்டு, இவர்கள் உண்மையான தம்பதிகள் என்றே நினைத்து வந்தனர். அந்த அளவிற்கு நடிப்பில் கவனம் ஈர்த்த இவர்கள் இருவரும் ரோஜா சீரியல் முடிந்த பிறகு நடித்த சில சீரியல்கள் கைகொடுக்கவில்லை.
இதனிடையே கடந்த சில தினங்களாக ரோஜா சீரியலின் 2-ம் பாகம் ஒளிபரப்பாக உள்ளதாக ப்ரமோ வெளியாகி வருகிறது. இந்த சீரியலின் கதை, அர்ஜூன் ரோஜா தம்பதியின் மகள் கேரக்டரை சுற்றி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளனது. இதில் அர்ஜூன் ரோஜா கேரக்டரின் மகள் மலர் கேரக்டரில், ரோஜாவாக நடித்த பிரியங்கா நல்காரியே நடித்துள்ளார். அவரது காதலாரா, நியாஸ்கான் என்பவர் நடிக்கிறார். முக்கிய கேரக்டரில் எதிர்நீச்சல் சீரியலில் நடித்த ஹரிப்பிரியா நடித்துள்ளார்.
இந்த சீரியலின் 3-வது ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது, இதில் ஹரிப்பிரியா தனது கணவரிடம் சென்று, எனக்கு லவ் ப்ரபோஸ் செய்த நாள், நமது திருமண நாள், நமது குழந்தை பிறந்த நாள் என ஒவ்வொன்றாக கேட்க, அதற்கு அவர் தெரியாது தெரியாது என்று சொல்கிறார் ஒரு கட்டத்தில் டென்ஷன் ஆன ஹரிப்பிரியா, இந்த கேள்விக்கு பதில் சொல்லலான கழுத்தை அறுத்துவிடுவேன் என்று சொல்லி கழுத்தில் கத்தியை வைக்க, அதான் டெய்லி அறுக்குறியே என்று அவரது கணவர் சலித்துக்கொள்கிறார்.
Advertisment
Advertisement
அதன்பிறகு, இப்போது நான் கேள்வி கேட்கிறேன் நீ பதில் சொல்லு என்று சொல்லிவிட்டு, இந்த வீட்டுக்கு எவ்வளவு லோன் தெரியுமா? கார் லோன் எவ்வளவு தெரியுமா? நகைக்கடையில் அட்டிகை வாங்குனியே அது எப்போ தெரியுமா? என்று கேட்க, ஹரிப்பிரியா, எதுவும் தெரியாது என்று அங்கிருந்து நழுவி விடுகிறார். விறுவிறுப்பாகவும், பார்ப்பதற்கு பொழுதுபோக்காகவும் இருக்கும் இந்த ப்ரமோ தற்போது கவனம் ஈர்த்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”