Sun TV Roja Serial Update : சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலில் அனு அண்ணப்பூரணியின் வீட்டில் செட்டில் ஆக பல வகையில் முயற்சி செய்கிறாள். இந்த முயற்சியின் அடுத்தக்கட்டமாக சாந்தமூர்த்தியின் கேஸில் அர்ஜூன் என்ன பேசுகிறார் என்று தெரிந்துகொள்ள அர்ஜூன் அறையில் மைக் வைக்க சொல்லி சாக்சி கொடுத்த ஐடியாவை, பாலுவுடன் சேர்த்து கச்சிதமான செய்து முடிக்கிறாள் அனு.
இதன்பிறகு ஆபிஸ் முடித்து வீட்டிற்கு வரும் அர்ஜூன், ரோஜாவை தேடும்போது, கல்பனா கொடுத்த குழந்தை புகைப்பட காலண்டரை சுவற்றில் மாட்டுகிறான். அப்போது அவன் அம்மா கொடுத்த ஆடைகளை பார்த்துக்கொண்டிருக்கும்போது பின்னால் வரும் ரோஜா அர்ஜூனின் கண்ணை மூடுகிறாள். ஆனால் குல்பி என அர்ஜூன் கரெக்டாக சொல்கிறான். இவர்களின் ரொமான்ஸை அனு தான் வைத்த மைக் மூலம் ஒட்டுக்கேட்டுக்கொண்டிருக்கிறாள்.
அப்போது அர்ஜுன் சாந்த மூர்த்தி ஐயாவை வெளிய கூட்டிட்டு வரனும்னு எவ்வளவு நாள் வெயிட் பண்ணிட்டு இருக்கறது. கல்யாணம் ஆகி ஒரு வருஷமா வெயிட் பண்ணிட்டு இருக்கேன். இன்னும் நமக்குள்ள எதுவும் நடக்கல என சொல்கிறான் இதை கேட்ட அனு, அண்ணப்பூரணியிடம் சொல்லி புதிய பிரச்சினையை உண்டாக்குகிறாள். இதை கேட்ட அண்ணப்பூரணி, அனைவரையும் மணி அடித்து வீட்டின் ஹாலுக்கு வர வைத்து ரோஜாவை பூஜை அறை முன்பு நிற்க வைத்து உண்மையிலே உனக்கும், அர்ஜுனுக்கும் கல்யாணம் ஆச்சா என கேட்கிறாள்.
அண்ணப்பூரணியின் கேள்விக்கு பதில் சொல்ல தயங்கி கல்பனாவை பார்த்து நிற்கும் ரோஜாவிடம், அங்க என்ன பார்க்குற உன்கிட்ட தான கேட்கிறேன் பதில் சொல் என அதட்டுகிறாள். அப்போது கல்பனா என்னாச்சு அத்தை என கேட்கிறாள். நீ எதுக்காக இந்த வீட்ல வந்து உட்கார்ந்து இருக்க, உனக்கும் இந்த வீட்டுக்கும் என்ன சம்பந்தம் என கேட்டு ரோஜாவை அன்னப்பூரணி, அடிக்க போகிறாள்.
அந்த நேரத்தில் அங்கு வரும் அர்ஜுன் அவள் கையை பிடித்து தடுக்கிறான். அவனிடம் கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆச்சு, இன்னும் உன் பொண்டாட்டி வயித்துல ஒன்னும் வரல என அன்னபூரணி சொல்கிறாள். அப்போது அர்ஜுன் அண்ணப்பூரணியை கலாய்க்கும்போது, உன் மகனும், மருமகளும் உன்னை ஏமாத்துறாங்க மருமகளே என கல்பனாவிடம் கூறுகிறாள் அன்னப்பூரணி.
இதற்கு பதில் பேசும், அர்ஜுன் என்னோட அம்மா அப்பாவி, அவுங்களை எல்லாம் எப்பவும் ஏமாத்த மாட்டேன் என சொல்கிறான். பேச்சை மாத்தாத என சொல்லும் போது அன்னப்பூரணி சொல்லும்போது, பிரதாப் அம்மா உங்களுக்கு என்ன பிரச்சினை என கேட்க இந்த அர்ஜுனும், ரோஜாவும் உண்மையான புருஷன் பொண்டாட்டியே இல்லை. இரண்டு பேருக்கும் இன்னும் சாந்தி முகூர்த்தமே நடக்கல என சொல்கிறாள். அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil