Roja Serial Promo Update : சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று ரோஜா. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னணியில் இருந்து வருகிறது. இதில் அண்ணப்பூரணி வீட்டில் பொய்யான பேத்தியாக நடிக்கும் அனுவை கண்டுபிடிக்கும் முயற்சியில் அர்ஜூன் ரோஜா முழு முயற்சியில் ஈடுபட்டு வருவதால், இந்த சீரியல் நாளுக்கு நாள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதில் நேற்றைய எப்சோட்டில், அர்ஜுன் ரோஜா இருவரும் ஹனிமூன் முடிவு செய்யும்போது, அனு குணமாக காளி பூஜை செய்வதாகவும், அதற்கு முன்பு யாரும் வீட்டை விட்டு வெளியில் செல்லக்கூடாது என்றும் அண்ணப்பூரணி கட்டாயமாக சொல்லி விடுகிறார். ஆனால் அனு நடிக்கிறார் என்ற உண்மை அண்ணப்பூரணிக்கு தெரியவில்லை.
இதன்பிறகு அனு டைகர் மாணிக்கத்திற்கு போன் செய்து பேசுகிறார். அத்துடன் நேற்றைய எபிசோடு முடிகிறது. தொடர்ந்து இன்று வெளியாகியுள்ள ப்ரமோவில், அர்ஜுன் மற்றும் ரோஜா இருவரும் அனுவின் அறைக்கு சென்று பேசுகிறார்கள். அப்போது அர்ஜூன் அனு டைகர் மாணிக்கத்திடம் 15 நிமிடம் போனில் பேசியது பற்றி கூறுகிறார். அப்போது ரோஜா அனுவை சரி செய்து பேச வைப்பது தான் தனது முதல் வேலை என களமிறங்குகிறார்.
அதன்பிறகு ரோஜா. நெருப்பில் மிளகாய் போட்டு நெடி ஏற்றி அனு முகத்தின் முன்பு காட்டுகிறார். அப்போது அனு ரெடி தாங்க முடியாமல் இருமுகிறார். இதை பார்த்து ரோஜா அதிர்ச்சியாக அத்துடன் முடிகிறது இந்த ப்ரமோ. தற்போது இந்த ப்ரமோ வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil