ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதியதாக ஒளிபரப்பாக உள்ள சீதா ராமன் சீரியல் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் முக்கியமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வரும் ஜீ தமிழில் அவ்வப்போது புதிய நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் தொடங்கப்பட்டு வருகிறது. இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
அதிலும் குறிப்பாக ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அமுதாவும் அன்னலட்சுமியும், மாரி, வித்யா நம்பர் 1, கார்த்திகை தீபம், மீனாட்சி பொண்ணுங்க உள்ளிட்ட சீரியல்கள் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது ஜீ தமிழின் புதிய சீரியல் சீதா ராமன்.
சன் டிவியின் ரோஜா சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ரோஜா சீரியல் புகழ் பிரியங்கா நல்காரி நாயகியாக நடித்து வரும் நிலையில், விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கேரக்டரில் நடித்து வரும் ரேஷ்மா பசுபுலேட்டி முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். விரைவில் ஒளிபரப்பாக உள்ள இந்த சீரியல் குறித்து ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
அந்த வீடியோவில் பிரியங்கா திருமண கோலத்தில் ஒரு வீட்டின் வெளியே தனியாக நின்று கொண்டிருக்க கொட்டும் மழையில் அவளது குங்குமம் அழிய தொடங்குவது போன்ற காட்சிகள் இந்த ப்ரோமோ வீடியோவில் இடம் பெற்றுள்ளது.

இதனால் சீதா வாழ்க்கையில் நடக்க போவது என்ன? இந்த சீரியல் எப்படி இருக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. விரைவில் இந்த சீரியலின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil