ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் ராம் சீதாவிடம் வந்து எதுக்கு சித்தியை இப்படி அடிச்சுகிட்டு இருக்க என்று கேட்க பாஸ் இது சும்மா விளையாட்டு அடி. வலிக்காது என்று சொல்ல அர்ச்சனாவும் ஆமா வலிக்கல என்று சொல்கிறாள்.
அதன் பிறகு அஞ்சலி வர அஞ்சலியையும் சீதா அடி வெளுத்தெடுக்க அவளும் மதுமிதா இருப்பதால் வலிக்கவில்லை நல்லா இருக்கு என்று வலியை தாங்கிக் கொண்டு நடிக்கிறாள். அதன் பிறகு சாட்டையால் அடித்த சீதாவை பழிவாங்க வேண்டும் என அர்ச்சனா, அஞ்சலி ஆகியோர் திட்டம் போடுகின்றனர். எல்லோரும் டைனிங் ஹாலில் உட்கார்ந்து இருக்கும்போது சீதா வர அவளது காலை தட்டி விட சீதா கீழே விழாமல் மதுவை மோத இதனால் மதுமிதா கீழே விழ போக ராம் அவளை இடுப்பில் பிடித்து தாங்கி பிடிக்கிறான்.
இதைப் பார்த்து சீதா கடுப்பாகி கோபமாகிறாள். பிறகு ராம் மற்றும் மதுமிதா ஒன்றாக உட்காந்து சாப்பிட சீதா கோபமாகி எழுந்து செல்ல அர்ச்சனா அவளுக்கு கீழே உட்கார்ந்து சாப்பிட்டு தான் பழக்கம் என கிண்டல் அடிக்க ராம் அப்படின்னா கீழ உட்கார்ந்து சாப்பிடு சீதா என்று சொல்ல சீதா கோபத்தோடு ரூமுக்கு வந்து விடுகிறாள்.
இரவெல்லாம் தூங்காமல் இருக்கும் சீதா ராமை எழுப்பி நீங்க எதுக்கு அக்காவோட இடுப்ப புடிச்சீங்க என கேள்வி கேட்கிறாள். நான் இடுப்பையெல்லாம் பிடிக்கல கீழே விழப்போனதால் தாங்கி பிடிச்சேன் அவ்வளவுதான் என்று சொல்ல அதெல்லாம் எனக்கு தெரியாது எங்க அக்கா கிட்ட மன்னிப்பு கேட்கணும் என்று சீதா அடம்பிடிக்க நான் அவங்கள கீழ விழாம தான் காப்பாற்றினேன், நான் எதுக்கு மன்னிப்பு கேட்கணும் என ராம் சொல்கிறான்.
ஆனாலும் சீதா அவனை விடாமல் கூட்டிச்சென்று மதுமிதாவின் ரூமை தட்டி தூங்கிக் கொண்டிருந்தவளை எழுப்பி பாஸ் உங்க இடுப்ப பிடிச்சதனால் உங்ககிட்ட மன்னிப்பு கேட்கணும்னு வந்திருக்காரு என்று சொல்ல மதுமிதா அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை என்று சொல்ல ராம் அப்படின்னா நான் மன்னிப்பு ஏதும் கேட்க வேண்டாமா என கேட்க மதுமிதாவும் வேண்டாம் என சொல்கிறாள். ஆனால் சீதா நீங்க மன்னிப்பு கேட்டு தான் ஆகணும் என ராமை மன்னிப்பு கேட்க வைக்க மது என்ன காமெடி பண்ணிக்கிட்டு இருக்கீங்க என சிரித்தவாறு உள்ளே செல்கிறாள்.
திரும்பவும் ரூமுக்கு வந்த சீதா நீங்க எதுக்கு இப்போ அக்காவோட இடுப்ப பார்த்தீங்க? என்று கேட்க மன்னிப்பு கேட்க காரணம் சொல்லனும்ல என்று ராம் சொல்ல நீங்க என்னோட இடுப்பு பார்த்து சொல்ல வேண்டியது தானே இல்லனா என்னோட இடுப்புல கை வைத்து சொல்ல வேண்டியது தானே என்று கோபப்பட இதெல்லாம் ஒரு இடுப்பா என ராம் சீதாவை கலாய்க்கிறான்.
பிறகு சீதா எனக்கு 30 நாள் டைம் கொடுங்க என்னுடைய எடையை குறைத்து கோவில் சிலை மாதிரி வந்து நிற்கிறேன் என சவால் விடுகிறாள். மறுநாள் காலையில் மதுமிதா பூஜை செய்து கொண்டிருக்க இதை பார்த்த மகாலட்சுமி அவளுக்கு நெற்றியில் விபூதி குங்குமம் எடுத்து வைக்க மது அம்மாவை நினைத்து கவலைப்படாத உனக்கு நான் இருக்கேன் என மகா ஆறுதல் சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது குறித்து பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.