New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/06/Sembaruth.jpg)
Sembaruthi Serial Episode : ஜீ தமிழின் செம்பருத்தி சீரியலில் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பதை இந்த பதிவில் பார்போமா?
Tamil Serial Sembaruthi Update : கோவிலுக்கு செல்வதற்காக தயாராக நிற்கும் அகிலா, பார்வதிவை தெட அவள் இல்லை என்பதால், ஐஸ்வர்யாவை அழைத்துக்கொண்டு செல்கிறாள். அப்போது கதவு அருகில் கால் தடுக்கி விழும்போது, பார்வதி அந்த நேரத்தில் வந்து அவரை பிடிக்கிறார். போகும்போதே தடுக்கிறகு. தண்ணீர் குடித்துவிட்டு கொஞ்ச நேரம் இருந்துவிட்டு போங்கள் என பார்வதி சொல்ல, அதை கேட்காத அகிலா, கோவிலுக்குத்தான் போகிறேன், கடவுள் இருக்கிறான் என கூறிவிட்டு உடனே கிளம்பி செல்கிறார்.
அதன் பின் பார்வதி பூஜை அறைக்கு செல்லும் பார்வதி, சகுணம் சரியில்லை அம்மா பத்திரமாக வீடு வந்து சேரவேண்டும் என வேண்டிக்கொள்கிறார்.
இதனையடுத்து கோவிலுக்கு சென்ற அகிலா மற்றும் ஐஸ்வர்யா இருவரும் சாமி கும்பிடுதம்போது, குருஜியை பார்த்து தான் நிம்மதி இல்லாமல் இருப்பதாக சொல்லும் அகிலாவுக்கு பூஜை ஒன்றை நடத்தினால் எல்லாம் சரியாகிவிடும் என சொல்கிறார் குருஜி. அது பற்றிய விவரங்களை நானே வீட்டுக்கு வந்து சொல்கிறேன் என கூறிவிட்டு போகிறார்.
அதன்பின் அகிலா ஒரு கடவுள் சிலை முன்பு நின்று பிரார்த்தித்துக் கொண்டிருக்கும் போது அவர் தலை மீது இருக்கும் மரக்கிளை ஒடிந்து கீழே விழும்போது, அருகில் இருக்கும் நபர் ஒருவர் வேகமாக வந்து அகிலாவின் கையை பிடித்து இழுத்து காப்பாற்றுகிறார். ஆனால் இதை நினைக்காத அகிலா, தன் கையை பிடித்து இழுத்த நபரை உடனே பளார் என அறைந்து விடுகிறார்
ஆனால் மரக்கிளை விழுந்த பிறகுதான் அவருக்கு தெரிய வருகிறது. இருந்தாலும் என்னை யாரும் தொட கூடாது என மீண்டும் அந்த நபரை அடிக்க அகிலா போக, அந்த நபர் ஊமை என்கிற விஷயம் தெரியவருகிறது. அதற்குப் பிறகுதான் அகிலா கோபத்தை விட்டு விட்டு மன்னிப்பு கேட்கிறார்.
இந்த உதவிக்காக உனக்கு என்ன வேண்டும் கேள் என சொல்கிறார். அவர் தனக்கு நீண்ட நாட்களாக வேலை இல்லை எனவும் வேலை வேண்டும் எனவும் கூறுகிறார். ஐஸ்வர்யாவும் அவருக்கு வேலை போட்டுக் கொடுக்கலாம் என்று சொல்கிறார். அத்துடன் முடிகிறது இன்றைய எபிசொடு.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.