Advertisment

நீங்களே டெலிட் பண்ணிடுங்க... இல்லனா பிளாக் பண்ணிடுவேன்... பிரபல சீரியல் நடிகை எச்சரிக்கை

ஆச்சி மசாலா நிறுவனத்தில் எச்.ஆர். மேனேஜராக பணியாற்றி வந்த இவர், சில விளம்பர படங்களில் நடித்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு சீரியல் நடிகையாக மாறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
நீங்களே டெலிட் பண்ணிடுங்க... இல்லனா பிளாக் பண்ணிடுவேன்... பிரபல சீரியல் நடிகை எச்சரிக்கை

ஈரமான ரோஜாவே சீரியலில் நாயகியின் அம்மாவாக நடித்து வரும் நடிகை கிருபா ரசிகர்கள் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று ஈரமான ரோஜாவே. முதல் சீசன் வெற்றிகரமாக முடிந்த நிலையில், 2-வது சீசன் தற்போது பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது. கேப்ரியல்லா, சுவாதி, சித்தார்த் கண்ணன், திராவியம் ராஜகுமரன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த தொடரின் கேப்ரியல்லா நடித்து வரும் காவியா கேரக்டருக்கு அம்மாவாக நடித்து வருபவர் கிருபா.

ஆச்சி மசாலா நிறுவனத்தில் எச்.ஆர். மேனேஜராக பணியாற்றி வந்த இவர், சில விளம்பர படங்களில் நடித்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு தற்போது பிரபல சீரியல் நடிகைகயாக உள்ளார். மேலும் தமிழில் ஒரு சில திரைப்படங்களில் முக்கிய கேரக்டரிலும் நடித்துள்ளார். சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் கிருபா அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் ஈரமான ரோஜாவே சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், காவியா மற்றும் பிரியாவின் ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு தங்களது கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளது.

இந்த பதிவுகள் ஒரு கட்டத்தில் எல்லை மீறி இரு தரப்பு ரசிகர்களும் வலைதளங்களில் மோதிக்கொள்ளும் சூழல் ஏற்பட்ட நிலையில், தகாத வார்த்தைகள் கொண்ட பல கமெண்ட்கள் வர தொடங்கியுள்ளது. இதனால் அதிர்ச்சியாக நடிகை கிருபா, இது ஜெஸ்ட் புகைப்படம் அவ்வளவுதான். நீங்கள் இப்படி நடந்துகொள்வதை நாங்கள் விரும்பவில்லை.

சீரியலில் மட்டும் தான் நாங்கள் அப்படி மற்றடி செட்டில் நாங்கள் அனைவரும் ஒன்றாகத்தான் பேசிக்கொண்டிருப்போதும். இதை ஒரு பொழுதுபோக்காக பாருங்கள். நீங்கள் பதிவிட்ட கருத்துக்களை நீங்களே டெலிட் செய்துவிடுங்கள். இல்லை என்றால் நான் ப்ளாக் செய்துவிடுவேன். என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment