Advertisment

கோயம்பேடு சந்தையில் சண்டைக் காட்சி: சன் டிவி நடிகை வீடியோ வைரல்

கோயம்பேட்டில் நடந்த சூட்டிங்கில் சின்னத்திரை நடிகை ஒருவர் ரௌடிகளுடன் சண்டைப் போடும் காட்சியில் நடித்திருந்தார். இந்தக் காட்சிகள் தற்போது வைரலாகிவருகின்றன.

author-image
WebDesk
New Update
 Actress Anusha Pratap

கோயம்பேட்டில் சின்னத்திரை படப்பிடிப்பு வீடியோ வைரலாக பரவிவருகிறது

tamil-serial-news | சன் தொலைக்காட்சியில் ஆனந்த ராகம் என்ற சின்னத்திரை தொடர் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை மாலை 6.30 மணிக்கு வெற்றிகரமாக ஒளிபரப்பாகிவருகிறது.
இந்தச் சின்னத்திரை தொடரில் பெரிய திரையை போன்று சண்டைக் காட்சிகளுக்கும் பஞ்சமிருக்காது. அனுஷா பிரதாப் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தத் தொடரில் அவருக்கு ஜோடியாக அழகப்பன் நடிக்கிறார்.
இதில் அனுஷா ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தக் கதாபாத்திரத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஈர்ப்பு உண்டு. மேலும் அடிக்கடி சண்டைக் காட்சிகளும் இருக்கும். இதனால் இவரை அதிரடி ஈஸ்வரி என்றே கூறுவார்கள்.
இந்த நிலையில், ரௌடிகளுடன் ஈஸ்வரி சண்டையிடும் காட்சி ஒன்று சென்னை கோயம்பேட்டில் படமாக்கப்பட்டது.
இந்தப் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளை அனுஷா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். இந்தக் காட்சிகளை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சமீபகாலமாக பெரிய திரைக்கு போட்டியாக சின்னத் திரைகளிலும் காதல், ரொமாண்டிக் மற்றும் சண்டைக் காட்சிகள் இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

Advertisment

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Serial News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment