Advertisment

என்னது பாம் கண்டுபிடிக்க டிராக்கர் ஆப் இருக்கா? சீரியலா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா?

இளைஞர்கள் பார்க்கிறார்கள் என்பதற்காக நாங்கள் மாற்றம் செய்ய வேண்டுமா என்ன என்று கேட்கும் அளவுக்கு சீரியல் காட்சிகள் நம்பகத்தன்மை இல்லாத வகையில் தான் உள்ளது.

author-image
WebDesk
New Update
என்னது பாம் கண்டுபிடிக்க டிராக்கர் ஆப் இருக்கா? சீரியலா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா?

ஏன்பா இதெல்லாம் உங்களுக்கே அடுக்குமா? நீங்க சுந்துங்க உங்கள வேண்டாம்னு சொல்ல ஆன கொஞ்சம் மனசாட்சியோட சுத்துங்க பாஸ் என்று சொல்லும் அளவுக்கு சீரியல் காட்சிகள் அபந்தத்தின் உச்சமாக சென்றுகொண்டிருக்கிறது.

Advertisment

இன்றைய காலகட்டத்தில் இல்லத்தரசிகள் மட்டுமல்லாமல் இளைஞர்கள் மத்தியிலும் சின்னத்திரை ஒரு முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டது. அதிலும் கொரோனா காலகட்டத்தில் இளைஞர்களை வசப்படுத்திய இந்த சீரியல் தற்போது இவர்கள் விட்டாளும் இளைஞர்கள் தொடர்ந்து பார்த்து வருகின்றனர்.

ஆனால் இளைஞர்கள் பார்க்கிறார்கள் என்பதற்காக நாங்கள் மாற்றம் செய்ய வேண்டுமா என்ன என்று கேட்கும் அளவுக்கு சீரியல் காட்சிகள் நம்பகத்தன்மை இல்லாத வகையில் தான் உள்ளது. 90-களின் நடுப்பகுதியில் சின்னத்திரையில் சீரியல்கள் ஒளிபரப்பாக தொடங்கியது. முதலில் சீரியல் திரைப்படங்கள், ரியாலிட்டி ஷோக்கள் என்று இருந்த பல சேனல்கள் தற்போது தங்களது பிரதான நிகழ்ச்சியாக சீரியலையே வைத்துக்கொண்டனர்.

ஆரம்ப காலத்தில் குடும்ப உறவுகளை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டு வந்த சீரியல்கள் குடும்பத்தில் நடக்கும் பொதுவான பிரச்சினையை பற்றி பேசும் வகையில் இருந்தது. அதேபோல் வீட்டிற்கு வரும் பிரச்சினையை குடும்பத்தில் உளள அனைவரும் ஒன்றாக சேர்ந்து எதிர்கொள்வது போலத்தான் சீரியல்கள் ஒளிபரபரப்பாகி வந்தது.

அப்போது சீரியல்களை பெரும்பாலும் இல்லத்தரசிகள் மட்டுமே கண்டு ரசித்து வந்தனர். இவர்களின் ரசனைக்கேற்ப, ராதிகா, குஷ்பு, ரம்யா கிருஷ்ணன், தேவயானி உள்ளிட்ட சில முன்னணி நடிகைகள் பலரும் சீரியலில் களமிறங்கினர். ஆனால் ஆண்டுகள் செல்ல செல்ல புதுமையை புகுத்துகிறோம் என்ற பெயரில் மாமியார் மருமகள் சண்டை, அண்ணன் தம்பியை சண்டை, திருமணத்திற்கு மீறிய உறவு என மாற்றி கொஞசம் கூட நம்பகத்தன்மை இல்லாத வகையில் ஒளிபரப்பாகி வருகிறது.

ஏறக்குறைய தற்போது வெளியாகி வரும் அனைத்து சீரியல்களும், குடும்பத்திற்கு நடக்கும் பிரச்சினை மற்றும் குடும்ப உறவுகளுக்குள் இருக்கும் பொறாமை பேராசை உள்ளிட்ட வார்த்தைகளுக்கு அடங்கிப்போய்விடுகிறது. சீரியல் தொடங்கிய காலத்தில் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு சில சீரியல்கள் வந்தது. ஆனால் இப்போது வரும் சீரியல்களில் சீரிஸான காட்சிகளே காமெடியாக தெரிகிறது.

அப்போது வந்த நல்ல குடும்ப உறவுகள் தொடர்பான சீரியல்களை பார்த்து பழகிப்போன் இல்லத்தரசிகள் அதில் இருந்து மீள முடியாமல் தற்போது ஒளிபரப்பாகி வரும் சீரியல்களை பார்த்து பொழுமை கழித்து வருகின்றனர். இதில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால, திரைப்படங்களில் வில்லன் செய்யும் கொடூராமான செயல்களை விடவும் சீரியலில் வில்லிகள் செய்யும் கொடூராங்கள் உச்சக்கட்டமாக இருக்கும்.

பெண்களுக்கு பெண்களே வில்லி என்ற கூற்றுக்கு இணையாக சீரியலில் நாயகி பெண் என்றால் அவருக்கு எதிரியும் ஒரு பெண் தான். இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் இருந்தால் அவ்வளவுதான். குடும்பமானம் போய்விடக்கூடாது என்று சொல்லி வில்லி செய்யும் அத்தனை அட்டகாசங்களையும் வெளியில் சொல்லாமல் நாயகி மூடி மறைத்துவிடுவார். இப்போது இருக்கும் சீரியல்கள் வில்லிக்குதான் மாஸாக சென்றுகொண்டிருக்கிறது.  

அதே சமயம் சீரியலில் ஏழ்மையாக குடும்பத்தை காட்டினால், இவர்கள் இப்போதுமே ஒருவித மேக்கப்புடன்தான் காட்சி அளிப்பார்கள். சாதாரண நடுத்தர குடும்ப மக்களின் வாழ்வியலை அடிப்படையாக வைத்து சீரியல் எடுக்கிறோம் என்ற பெயரில் உண்மைக்கு புறம்பான காட்சிகள் தான் அதிகமாக வருகிறது.

இதில் சில புதிய யுக்திகளை கையாள்கிறோம் என்ற பெயரில் அவர்கள் எடுக்கும் காட்சிகள் காமெடியின் உச்சக்கட்டமாகத்தான் சென்றுகொண்டிருக்கிறது. இந்த வகையில் தற்போது கலர்ஸ் தமிழ் சேனலின் சில்லுனு ஒரு காதல் சீரியலில் அரங்கேறியுள்ளது. ஒரு பண்மை வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக நாயகனுக்கு போன் வருகிறது.

இந்த வெடிகுண்டை கண்டுபிடிப்பதற்காக வரும் நாயகன் நாயகி இருவரும் இங்கே தானே இருந்துச்சு எங்கே போச்சு என சொல்லும் சேஞ்சுக்கு தேடுகிறார்கள். எதாவது பொருள் தொலைந்துவிட்டால், இங்க எதைாவது பொருள் கிடந்துதா என்று அங்கே போற வரவர்களிடம் கேட்பது போல் தோடிக்கொண்டிருக்கிறார். அதன்பிறகு நாயகி செய்யும் ஒரு செயல்தான் பரபரப்பின் உச்சம் என்று சொல்லாம்.

சாதாரணமாக ஒரு இடத்தில் வெடிக்குண்டு இருக்கிறது என்றால், அதை செயலிழக்க செய்ய அந்த துறையை சேர்ந்தவர்கள் வந்து கண்டுபிடிப்பார்கள் ஆனால் இங்கு நாயகி பாம் டிராக்கர் ஆப் தனது மொபைலில் வைத்துள்ளதாகவும் அதை வைத்து கண்டுபிடிப்பதாக கூறுகிறார். இந்த சீனை பார்க்கும்போது வடிவேலு சொல்வதுபோல ஏன்டா கனவா இருந்தாலும் ஒரு ஞாயம் வேண்டாமாடா என்றுதான் கேட்க தோன்றுகிறது.

இந்த மாதிரி காட்சிகளை படம் பிடிக்கும்போது இயக்குநர்களுக்கோ அல்லது கதாசிரியர்களுக்கோ இந்த காட்சியை மக்கள் ரசிப்பார்களா அல்லது கலாய்ப்பார்கலா என்று யோசிக்கவே மாட்டார்கள்போல இன்றைய எபிசோட்டில் இந்த சீன் வைத்தால் நாளைய எபிசோட்டில் ஒரு நல்ல சீன் வைத்து ஒப்பேத்திவிடலாம் என்றுதான் யொசிப்பார்களே... எது எப்படியோ இந்த கேள்களுக்கான பதில் இயக்குநர்களுக்கே வெளிச்சம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment