Advertisment

கர்ப்பமாக இருக்கும் மீனா... விஜயா என்ன செய்ய போகிறார்? வைரல் வீடியோ

முத்து தனது மனைவிக்காக பூக்கடை வைத்து கொடுக்க, மாலை கட்டிய பணத்தில் மீனா தனது கணவர் முத்துவுக்கு கார் வாங்கி கொடுத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Gomathi Priya Pregnant

கோமதி பிரியா

விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது இந்த சீரியலின் நாயகி மீனா கர்ப்பமாக இருப்பது போன்ற சில புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

Advertisment

விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. விஜய் டிவியின் டி.ஆர்.பி ரேட்டிங்கை அதிகரிக்கும் இடத்தில் இருக்கும் இந்த சீரியல் குடும்பத்தில் நடக்கும் முக்கிய பிரச்சனைகளை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இயக்குனரும் நடிகருமான சுந்தர்ராஜன் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இந்த சீரியலில் வசந்த், கோமதி பிரியா ஆகியோர் முதன்மை கேரக்டரில் நடித்து வருகின்றனர்.

முத்து தனது மனைவிக்காக பூக்கடை வைத்து கொடுக்க, மாலை கட்டிய பணத்தில் மீனா தனது கணவர் முத்துவுக்கு கார் வாங்கி கொடுத்துள்ளார். இதனால் இவர்களுக்கு இடையே ரொமான்ஸ் அதிகரித்து வருகிறது. மறுபக்கம், ரோஹினி – மனோஷ் இடையே மோதல் இருந்து வரும் நிலையில், ரோஹினி விஜயாவிடம் எப்போது மாட்டுவார் என்ற பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதனிடையே நாயகி மீனா தற்போது கர்ப்பமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 3 மருமகள்களில் முதலில் யார் கர்ப்பமாக ஆகிறார்களோ அவருக்கு கிராமத்தில் நிலம் எழுதி வைப்பேன் என்று முத்துவின் பாட்டி சொல்லிவிட்ட நிலையில், மீனா கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் வெளியானதால், விஜயாவுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வந்த நிலையில், தற்போது அவர்களுக்கு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சிறகடிக்க ஆசை சீரியல் தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. இதில் மலையாளத்திலும் கோமதி பிரியாவே நாயகியாக நடித்து வருகிறார். அதே போல் குறும்படங்களிலும் நடித்து வரும் கோமதி பிரியா, தற்போது ஜீ தமிழின் அண்ணா சீரியலில் முத்துப்பாண்டி கேரக்டரில் நடித்து வரும் நடிகர் சத்யாவோடு இணைந்து ஒரு வீடியோ க்ளிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ க்ளிப்பில் உள்ள புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா கர்ப்பமாக இருக்கிறார் என்று மகிழ்ச்சியில் இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ள நிலையில், இது விரைவில் நடக்கும் என்றும் கூறி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Siragadikka Aasai Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment