விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், ரோஹினி எப்போது மாட்டுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே தற்போது சிறகடிக்க ஆசை புதிய மைல் கல்லை எட்டியுள்ளது.
விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. வெற்றி வசந்த், கோமதி பிரியா ஆகியோர் முதன்மை கேரக்டரில் நடித்துள்ள இந்த சீரியலில் நடிகரும், இயக்குனருமான ஆர்.சுந்தர்ராஜன் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே நடக்கும் சம்பவங்களை வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியலில், அண்ணாமலை விஜயா தம்பதிக்கு 3 ஆண் பிள்ளைகள் உள்ளனர்.
முதல் மகன் மனோஜ், அம்மவுக்கு செல்லப்பிள்ளை, 2-வது மகன் முத்து அம்மாவுக்கு பிடிக்காத பிள்ளை ஆனால் அவனுக்கு அப்பாவை மிகவும் பிடிக்கும். மனோஜ் வீட்டில் ஏமாற்றி பணத்தை வாங்கிக்கொண்டு, அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் நிலையில், அவரது மனைவி ரோஹினி, தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகன் இருக்கிறான் என்பதை மறைத்து விஜயா மனோஜ் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களை ஏமாற்றியுள்ளார்.
இதன் காரணமாக ரோஹினி எப்போது மாட்டுவார்? அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்பு எழுந்துள்ளது. கடந்த வார எபிசோட்டில், கடைக்கு செருப்பு தைக்க வந்த ரோஹினி ப்ரண்ட், செல்போனை விட்டுவிட, அந்த கடைக்காரர் அந்த செல்போனை எடுத்து முத்துவிடம் கொடுத்துவிடுகிறார். அந்த போன் தனது தொலைந்துபோன போன் என்பதை அறியும் முத்து, இந்த போனை எடுத்து சென்றது யார் என்பது குறித்து சந்தேகமாக இருக்கிறார்.
மேலும், முத்துவின் சந்தேகம், ரோஹினி மீது திரும்ப இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார். தற்போது வித்யா மற்றும் ரோஹினியின் போட்டோவை செருப்பு தைக்கும் தாத்தாவுக்கு அனுப்பியுள்ளதால், இவர்களில் யார் போனை எடுத்தது என்பது குறித்து முத்துவக்கு தெரியவரும். அதேபோல் தான் எப்போது வேண்டுமானாலும், மாமியாரிடம் மாட்டிக்கொள்வோம் என்று, ரோஹினியும் பயத்தில் உள்ளதால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதனிடையே, சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. கதையே இல்லாமல், ஏற்கனவே வந்த காட்சிகளை மீண்டும் ரீகிரியேட் செய்வது போல் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களுக்கு மத்தியில் கதையுடன் ஒளிபரப்பாகி சிறப்பான வரவேற்பை பெற்று வரும் சிறகடிக்க ஆசை சீரியல், 600 எபிசோடுகளை கடந்துள்ளது. இது குறித்து சீரியல் குழுவினர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.