விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தினசரி எபிசோடுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. 3 ஆண் பிள்ளைகள் கொண்ட ஒரு குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியலில், வெற்றி வசந்த், கோமதி பிரியா ஆகியோர் நாயகன் நாயகியாக நடித்து வருகின்றனர்.
Advertisment
பழம்பெரும் நடிகரும் இயக்குனருமான ஆர்.சுந்தர்ராஜன் இந்த சீரியலில் முக்கிய கேரகடரில் நடித்து வருகிறார். தனக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் இருக்கும் விஷயத்தை மறைத்து மனோஜ்ஜை திருமணம் செய்து கொண்ட ரோஹினி எப்போது மாட்டுவார்? முத்துவை அவரது அம்மா வெறுத்து ஒதுக்க காரணம் என்ன? என்பது தொடர்பான பல கேள்விகள் இந்த சீரியலில் எழுந்துள்ள நிலையில், அடுத்து வரும் எபிசோடுகளுக்கான ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது.
இதில் தனது மகன் கிருஷின் பிறந்த நாளை கொண்டாட ரோஹினி வீட்டுக்கு வந்த நிலையில், அதே வீட்டுக்கு முத்து – மீனா இருவரும் வந்திருக்கின்றனர். அப்போது இவர்களை பார்த்து ரோஹினி ஒளிந்துகொள்ள, க்ரிஷ் முத்துவிடம் தனக்கு இன்று பிறந்த நாள் என்று சொல்ல, அனைவரும் ஒன்றாக சேர்ந்து கேக் வெட்டுகின்றனர். உள்ளே ஒளிந்துகொண்ட ரோஹினி இதை பார்த்துக்கொண்டு இருக்கிறார். கேக் வெட்டும்போது க்ரிஷ் சோகமாக இருக்க முத்து என்ன என்று கேட்கிறான்.
அதற்கு க்ரிஷ் அம்மா என்று சொல்லிவிட்டு அதன்பிறகு அத்தை என்ற சொல்ல, பாவம் பையன் எவ்வளோ கஷ்டப்படுகிறான். நீங்க போன் பண்ணுங்க அவ அத்தைக்கிட்ட நான் பேசுகிறேன் என்று முத்து சொல்ல, அவளால் வர முடியாது என்று கிருஷ் பாட்டி சொல்கிறார். இதற்கு மீனா ஏன் என்று கேட்க, என் பொண்ணோட மகன் தான் க்ரிஷ். தனக்கு குழந்தை இருப்பதாக அவள் யாரிடமும் சொன்னதே இல்லை என்று சொல்ல, அருகில் இருந்து ரோஹினி இதை கேட்டுக்கொண்டே இருக்கிறாள்.
பிறகு காரில் வரும்போது மீனா முத்துவிடம், எனக்கு ஒரு விஷயம் தொணுது என்று சொல்ல, முத்து என்ன என்று கேட்க, நாம க்ரிஷை தத்தெடுத்து வளர்க்கலாமா என்று கேட்க, முத்து உடனே காரை நிறுத்திவிடுகிறான். அத்துடன் இந்த ப்ரமோ முடிவடைகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“