சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்பது அந்த சீரியலில் ஏதாவது ஒரு அசாம்பாவிதம் நடக்கும்போது தெரியவரும். இந்த வகையில் தற்போது சிறகடிக்க ஆசை தொடரில் வரும் சம்பவத்திற்கு ரசிகர்கள் தங்களது சோகத்தை பகிர்ந்து வருகிறது.
Advertisment
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒனறு சிறகடிக்க ஆசை. டி.ஆர்.பி ரெட்டிங்கில் முக்கிய இடத்தை பெற்று வரும் இந்த சீரியல், இளைஞர்களை அதிகம் கவர்ந்து வருகிறது. புதுமுகம்வெற்றிவசந்த்நாயகனாகநடித்துவரும்நிலையில், வேலைக்காரன் சீரியல் புகழ் நடிகை கோமதி ப்ரியா நாயகியாக நடித்து வருகிறார்.
மேலும் நடிகரும் இயக்குனருமான சுந்தர்ராஜன் இந்த சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். மேலும் சில புதுமுக நடிகர்களும் இந்த நடித்து வரும் நிலையில், சீரியல் தொடங்கியதில் இருந்து டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வருகிறது. அதேபோல் முத்து – மீனா இடையேயான காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த சீரியலுக்கான தனியாக ஃபேன் பேஸ் உருவாகியுள்ள நிலையில், அவ்வப்போது கதையில் நடக்கும் திருப்பங்களுக்கு தங்களது ரியாக்ஷனை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது, முத்துவின் தம்பி ரவி தனது காதலியை திருமணம் செய்துகொண்டார். இதற்கு மீனா சாட்கி கையெழுத்து போட்டுவிட்டார். இதனால் பெண்ணின் பெற்றோர்கள் அண்ணாமலையின் பெயரில் கம்லைண்ட் கொடுக்க போலீஸ் அவரை அழைத்து செல்கிறது.
இதனை மீனா ஆட்டோவில் இருந்து பார்க்கிறார். அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது. இதனால் அடுத்து என்ன நடக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவம் காரணமாக முத்துவும் மீனாவும் பிரிய போகிறார்கள். இன்னும் ஒரு மாதத்திற்கு இந்த சீரியலை பார்க்க மாட்டேன் ஒரு மாதத்திற்கு பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”