விஜய் டிவியின் சிறக்கடிக்க ஆசை சீரியல் டி.ஆர்.பி ரேட்டிங்கில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வரும் நிலையில், தினசரி எபிசோடுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில், ரவி வேலை செய்யும் நீத்து ரெஸ்டாரண்டில் பொங்கல் கொண்டாட்டம் நடைபெறுகிறது. இதில் தனித்தனியாக வைக்கப்பட்ட போட்டியில் முத்துவும் மீனாவும் வெற்றி பெறுகின்றனர். கணவன் மனைவியாக வைத்த போட்டியில் விஜயாவின் 3 மருமகள்களும் தோற்றுவிடுகின்றனர். இவர்கள் தோற்றுவிட்டதால் பாட்டி ரொம்பவே கோபப்படுகிறாள்.
மூன்று குடும்பத்திற்கும் உள்ள சண்டையால் தான் இவர்கள் தோற்றுவிட்டதாக பாட்டி சொல்ல, இறுதிப்போட்டியில் மூன்று ஜோடிகளும் சேர்ந்து சமாதானமாகி வெற்றி பெற்றுவிடுகின்றனர். பரிசுத்தொகை வழங்கப்பட்டவுடன், வாழ்க்கையில் இப்படித்தான் ஒற்றுமையாக இருந்து வெற்றி பெற வேண்டும் என்று பாட்டி அட்வைஸ் செய்கிறார். அதன்பிறகு எல்லோரும் வீட்டுக்கு வர, பாட்டி தொட்டில் ஒன்றை கொண்டு வந்துள்ளார்.
இந்த தொட்டிலில் தான் விஜயா பெற்ற 3 மகன்களும் வளர்ந்தார்கள். அதேபோல் தான், இந்த வீட்டின் வாரிசுகளும் வளர வேண்டும் என்று பாட்டி சொல்ல, நான் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்கிறேன் என்று ஸ்ருதி சொல்ல, அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். இதை கேட்ட விஜயா, உச்சக்கட்ட கோபத்திற்கு சென்ற நிலையில், குழந்தை பெற்றுக்கொள்ள பயமாக இருக்கிறது. அதனால் தான் இந்த முடிவு. இல்லை என்றால் குழந்தையே வேண்டாம் என்று ஸ்ருதி சொல்கிறாள்.
இப்போதைக்கு அவசரப்பட வேண்டாம் என்று பாட்டி ரவிக்கு அட்வைஸ் கொடுக்கிறார். மறுபக்கம் திருமண காரை மீனா டெக்ரேஷன் செய்துகொண்டு இருக்கிறாள். மீனாவின் வேலையை தடுக்க, ப்ளான் செய்யும் சிந்தாமணி, சில ரவுடிகளை அனுப்ப, அந்த ரவுடிகளை மீனா. அடித்து விரட்டிவிடுகிறாள். அடுத்ததாக, ஆர்டர் கொடுத்தவர் வந்து பார்த்துவிட்டு, டெக்ரேஷனை வைத்து மீனாவை பாராட்டுகிறார். சிந்தாமணி டெக்ரேஷனை பார்த்து இது பழைய மாடலில் இருக்கிறது என்று சொல்லிவிட்டு, இனி எல்லா ஆர்டரையும் மீனாவுக்கே கொடுக்கலாம் என்று சொல்லிவிடுகிறார்.
இதை கேட்டு சந்தோஷப்படும் மீனா, யாருடைய வேலையையும் கெடுக்காமல், இருந்தாலே நமக்கு கிடைக்க வேண்டியது சரியாக கிடைக்கும். வாழு வாழவிடு எனறு சொல்லி அனுப்புகிறாள். அதன்பிற மனோஜ் ரோஹினி இருவரும் கோவிலுக்கு செல்ல, அங்கு மீனாவின் அம்மா அர்ச்சனை தட்டு வேண்டுமா என்று கேட்க, நாங்கள், வேற வேலையாக வந்திருக்கிறோம் என்று சொல்லிவிட்டு செல்கின்றனர்.
பிறகு மனோஜை ஏமாற்றிய கதிரின் வீடியோவை போலீசார் வாங்குகின்றனர். இதை பார்த்த மனோஜ் அந்த வீடியோவை தனக்கு தருமாறு கேட்க, அவர்கள் கொடுக்க மறுக்கின்றனர். அந்த வீடியோவை கொடுத்தால் நான் சோஷியல் மீடியாவில் போட்டு அந்த நபரை கண்டுபிடிக்க முயற்சிப்பேன் என்று சொல்ல, நீ காசு கொடுத்து டிகிரி வாங்குனியா என்று போலீசார் மனோஜை திட்டி அனுப்பிவிடுகின்றனர். அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“