விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், ரோஹினி எப்போது மாட்டுவார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
இன்றைய எபிசோட்டின் தொடங்கத்தில், முத்துவின் போனை தொலைத்தது தொடர்பாக, ரோஹினிக்கும் வித்யாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், இனிமேல் உன் ப்ரண்ட்ஷிப் எனக்கு தேவையில்லை என்று, என்று ரோஹினி சொல்ல, உன் புருஷன் வீட்டாரை ஏமாற்றுவது போல் என்னையும் ஏமாற்றுவாய் உன் ப்ரண்ஷிப் எனக்கு தேவையில்லை என்று வித்யாவும் சொல்லிவிடுகிறாள்.
மறுபக்கம், முத்துவின் போனை எடுத்தது யார் என்பது குறித்து யோசிக்கும் மினா, சத்யாவுக்கு போன் செய்து கேட்க, சிட்டி தான் வீடியோவை லீக் செய்ததாக சொல்கிறான். இப்போது இது ரோஹினி வேலையாகத்தான் இருக்கும் என்று நினைக்கும், மீனா, மனோஜ் கல்யாண பார்ட்டிக்கு போகும்போது தான் போன் மிஸ் ஆகி இருக்கு. அப்படி என்றால், ரோஹினி இல்லனா அவள் ப்ரண்ட் வித்யாதான் இதை செய்திருக்க வேண்டும் என்று முத்துவும் மீனாவும் யோசிக்கின்றனர்.
அதன்பிறகு ரோஹினி மற்றும் வித்யாவின் போட்டோவை காட்டினால், மொபைல் போனை யார் விட்டு சென்றது என்று தெரியும் என முத்து சொல்ல, ரோஹினியை போட்டோ எடுக்கலாம். ஆனால் வித்யா போட்டோ இல்லையே என்று மீனா சொல்ல, வித்யா வீட்டுக்கு சென்று போட்டோ எடுக்க, மீனாவுக்கு முத்து ஐடியா கொடுக்கிறான். மறுநாள் வித்யா வீட்டுக்கு செல்லும், மீனா, அவளிடம் சாதுர்யமாக பேசிக்கொண்டு இருக்கிறார். அப்போது வித்யா தனது காதல் பற்றி சொல்கிறாள்.
காதலர் பற்றி எப்படி தெரிந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து ஐடியா கொடுக்கும் மீனா, இன்னைக்கு நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க என்று சொல்லிவிட்டு போட்டோ எடுக்கிறாள். அதன்பிறகு அங்கிருந்து கிளம்பும் மீனா, வித்யா போட்டோவை முத்துவுக்கு அனுப்ப, முத்து ரோஹினி மற்றும் வித்யா போட்டோவை அந்த செருப்பு தைப்பவரிடம் அனுப்பி இந்த இருவரில் யார் போனை விட்டது என்று என்று கேட்க, அந்த நபர் வெளியில் இருப்பதாகவும் ஊருக்கு வந்து சொல்வதாகவும் கூறுகிறான்.
அடுத்து ரோஹினி தூங்கிக்கொண்டு இருக்கும்போது, மீனா பேயாக வந்து முத்துவின் போனை எடுத்தது நீதானே, சத்யாவின் வீடியோவை ரிலீஸ் பண்ணது நீதானே என்று கேட்டு மிரட்டுவது போன்று, கனவு வர, என்னை விட்டுவிடு என்று ரோஹினி எட்டி எதைக்க, மனோஜ் கட்டிலில் இருந்து விழுந்துவிடுகிறான். அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.