விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இதில் தனக்கு எதிராக சதி வேலை செய்வது ரோஹினி தான் என்பதை முத்து சந்தேகத்துடன் பார்க்கும் நிலையில், இன்றைய எபிசோடு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. வெற்றி வசந்த், கோமதி பிரியா ஆகியோர் முதன்மை கேரக்டரில் நடித்துள்ள இந்த சீரியலில் நடிகரும், இயக்குனருமான ஆர்.சுந்தர்ராஜன் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். குடும்பத்தில் மனோஜ் வீட்டில் ஏமாற்றி பணத்தை வாங்கிக்கொண்டு, அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் நிலையில், அவரது மனைவி ரோஹினி, தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகன் இருக்கிறான் என்பதை மறைத்து விஜயா மனோஜ் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களை ஏமாற்றியுள்ளார்.
இதன் காரணமாக ரோஹினி எப்போது மாட்டுவார்? அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்பு எழுந்துள்ளது. இதனிடையே, கடைக்கு செருப்பு தைக்க வந்த ரோஹினி ப்ரண்ட், செல்போனை விட்டுவிட, அந்த கடைக்காரர் அந்த செல்போனை எடுத்து முத்துவிடம் கொடுத்துவிடுகிறார். முத்து அந்த போனை வீட்டில் வந்து பார்த்தபோது, அது தொலைந்துபோன அவரின் போன் என்று தெரிய வருகிறது. இதை அப்பா அண்ணாமலையிடம் முத்து சொல்கிறான்.
இதை கேட்ட அண்ணாமலை இந்த போனை எடுத்தது யார் என்று தெரிந்தால், சத்யா வீடியோ வெளியிட்டது யார் என்று தெரியும் என்று சொல்ல, முத்துவுக்கு ரோஹினி மீது சந்தேகம் இந்த சந்துகத்தை நிவர்த்தி செய்ய, ரோஹினி மற்றும் அவரது தோழி வித்யாவின் போட்டோவை, அந்த செருப்பு தைப்பவருக்கு அனுப்பியுள்ளார். இதனால் முத்து ரோஹினியை கண்டுபிடித்துவிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதே சமயம், பயத்தில் மீனா தன்னை அடிப்பதாக கனவு கண்ட ரோஹினி தூக்கத்தில், மனோஜை எட்டி உதைத்தார். இதனால் அவருக்கு அவருக்கு பேய் பிடித்துள்ளது. மலேசியாவில் இறந்த அவரது அப்பாதான் ஆவியாக மகளை பார்க்க வந்திருக்கிறார் என்று விஜயா பேய் ஓட்ட சாமியாரை வர வைத்துள்ளார். அவர் கால் பாதத்தில், அடித்துதான் ஆவியை ஓட்ட வேண்டும் என்று சொல்ல, ரோஹினி தினமும் அடிவாங்கிக்கொண்டு இருக்கிறார்.
தொடர்ந்து இன்றைய எபிசோட்டில் வித்யா தான் போனை செருப்பு தைக்கும் கடையில் விட்டார் என்பதை முத்து தெரிந்துகொண்ட நிலையில், ரோஹினி சொல்லித்தான் வித்யா அதை செய்திருப்பார் என்று மீனா சொல்கிறாள். அதே சமயம் பங்ஷன் நேரத்தில் பிரச்னை வேண்டாம் என்று மீனா சொல்ல, அதை கேட்காமல், வித்யா வீ்ட்டுக்கு சென்ற முத்து அவரிடம் விசாரிக்கிறான். இதனால் சுதாரித்துக்கொண்ட வித்யா எதையோ பதில் சொல்லி சமாளிக்கிறாள்.
முத்து எவ்வளவோ முயற்சி செய்தும் வித்யா கடைசிவரை பொய் சொல்லி சமாளிக்கிறாள். இதனால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பும், முத்து மீனாவிடம் இதை சொல்ல, ரோஹினி இதை கேட்டு சந்தோஷப்படுகிறாள். அதன்பிறகு வித்யாவை சந்தித்து ரோஹினி நன்றி சொல்ல, இருவருக்கும் இடையே இருந்த சண்டை முடிகிறது. இன்றைய எபிசோடும் முடிகிறது.