விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில், ரவி ஸ்ருதி இருவரும் தங்கள் திருமண நாளை பிரம்மாண்டமாக கொண்டாட முடிவு செய்துள்ள நிலையில், ரோஹினிக்கு புதிதாக பிரச்னை வந்துள்ளது.
சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், இன்ஸ்பெக்டர் வீட்டில் பூ கொடுக்கும் மீனா, முத்துவின் கார் சீல் வைக்கப்பட்டது குறித்து உதவி கேட்க, கொஞ்சம் இருங்க சார் வந்துடுவார் என்று சொல்கிறார் இன்ஸ்பெக்டர் மனைவி. மறுப்பக்கம் தனது கார் சீல் வைக்கப்பட்டது குறித்து போலீஸ் ஸ்டேஷனில் உள்ள ஏட்டுவிடம் சொல்கிறார். அதற்கு அவர், நீ நோ பார்க்கிங்கில் வந்தது தப்பு தானே?
அது மட்டும் இல்லாமல், போலீஸை அடிக்க கை ஓங்கினால், என்ன நடக்கும்னு இப்பவாது தெரிஞ்சுதா? இனி உனக்கு பிரச்னை மேல் பிரச்னை வந்துகொண்டே இருக்கும் என்று சொல்ல முத்து பயப்படுகிறான். அப்போது அங்கு வரும் இன்ஸ்பெக்டர், முத்துவிடம் விசாரித்துவிட்டு, காரை எடுத்து வந்த போலீஸை திட்டுகிறார். நோ பார்கிங்கில் போனால் ஃபைன் போட வேண்டிதானே காரை எதற்காக எடுத்து வந்த? அவன் வேலைக்கு போக வேண்டாமா? அவனுக்கு வருமானாம் வேண்டாமா? என்று கேட்கிறார்.
அதன்பிறகு முத்துவிடம் இதுதான் எனக்கும் கடைசி முறை, இனி நீ எதாவது பிரச்னையில் மாட்டி உன் மனைவி வந்து என்னிடம், பேசுறாங்க, அவங்க சொன்னதால் தான் இப்போது வந்தேன். உன் காரை வெளயில் எடுக்க ஹெல்ப் பண்ணேன். இனி என்கிட்ட வந்து நிற்க கூடாது என்று முத்துவுக்கு வார்னிங் கொடுத்து அனுப்பி வைக்கிறார். மறுபக்கம் ரோஹினி தூங்கிக்கொண்டிருக்கும்போது குச்சியுடன் வரும் மனோஜ், நின்றுகொண்டிருக்க, ஏன்டா இப்படி நிக்கிற என்று விஜயா கேட்கிறாள்.
சாமியார் சொன்ன மாதிரி ரோஹினியை எப்படி அடிப்பது என்று கேட்க, அப்போது பேய் கூட குடும்பம் நடத்துவியா என்று விஜயா கேட்கிறாள். அதற்கு பயப்படும் மனோஜ், ரோஹினி காலில் அடிக்க, வலி தாங்க முடியாமல், ரோஹினி கத்துகிறாள். இதை பார்த்த விஜயா அடித்தால் தான் பேய் உன்னை விட்டு போகும் என்று சொல்ல, அதற்குள் நான் போய் சேர்ந்துவிடுவேன் என்று ரோஹினி அழுதுகொண்டிருக்கிறாள்.
ரோஹினி அழுவதை பார்த்த மனோஜ் அவளுக்கு ஆறுதல் சொல்ல, இதை பார்த்த விஜயா, இப்ப அழுவது ரோஹினி இல்ல, அவருடைய அப்பா என்று சொல்கிறாள். மேலும் நீ பாவம் பார்க்காமல், பரிகாரம் செய்தால் தான் ரோஹினி திரும்பவும் கிடைப்பாள் இல்லனா, நீ நைட்ல மிதி வாங்கனும் என்று சொல்ல, மனோஜ் பயப்படுகிறான். அதன்பிறகு காரை வாங்கிய முத்து, மீனாவுக்கு நன்றி சொல்ல, வீட்டில் இருவரும் ரொமான்டிக்காக பேசிக்கொண்டிருக்கின்றனர்.
அடுத்து ரவியும், ஸ்ருதியும் தங்கள் திருமண நாளை பிரம்மாண்டமாக கொண்டாட தயாரான நிலையில், ஒரு லெட்டர் கொடுக்கிறார்கள். இதில் விஜயா டான்ஸ் ஆடுவார் என்றும், மீனா அலங்காரம், முத்து கார் சர்ஸ்வீஸ் செய்வார் என்றும் போட்டிருக்கிறார்கள். இதை பார்த்த முத்து எங்க எல்லார் பெயரும் இருக்கு ஓகே, ஆனா இவன் என்ன செய்ய போறான்? இவன் பெயர் எதுக்கு என்று மனோஜை பார்த்து கேட்க, மனோஜ் ரோஹினி இருவரும் அதிர்ச்சியடைகின்றனர். அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.