விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், விஜயா சிந்தாமணியுடன் சேர்ந்து செய்த சூழ்ச்சிகள், மீனாவுக்கு தெரியவர, முத்து மீனா இருவரும், இணைந்து விஜயகாவின் முகத்திரையை வீட்டில் வைத்து வெளிப்படுத்தியுள்ளனர்.
சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், மாலையுடன் மகிழ்ச்சியாக வீட்டுக்கு வரும் முத்து, அனைவரையும் அழைத்து, மீனாவுக்கு அந்த மாலையை போடுகிறான். இதை பார்த்த ரவியும் அண்ணாமலையும், என்ன என்று விசாரிக்க, இன்னைக்கு மண்டபம் வராமலே டெக்ரேஷன் வேலைகளை மீனா சிறப்பாக செய்திருக்கிறாள் என்று முத்து சொல்ல, அனைவரும் பாராட்டுகின்றனர்.
அப்போது அண்ணாமலை, மீனா ஏன் மண்டபத்திற்கு வர முடியவில்லை என்று கேட்க், அம்மாவுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாம போச்சு, அவங்களை பார்த்துகிறதால மீனா வீடியோ காலிங்லேயே, டெக்ரேஷன் வேலைகளை முடித்துவிட்டால் என்று முத்து சொல்கிறான். இதை கேட்ட அண்ணாமலை, விஜயா உனக்கு உடம்பு சரியில்லையா? என்கிட்ட சொல்லவே இல்லையே என்று கேட்க, உடம்பு சரியில்லனா என்கிட்ட சொல்லிருக்கலாமே என்று ரோஹினியும் கேட்கிறாள்.
இவர்களின் கேள்வியால், விஜயா ஷாக் ஆனாலும், வழக்கமாக வர வலிதான் என்று சொல்லி சமாளிக்கிறாள். அதன்பிறகு, முத்துவை கிச்சனுக்கு அழைத்து சென்ற, மீனா, உங்க அம்மாவுக்கு உண்மையான வலி வரவில்லை. என்னை போக விடாமல் தடுப்பதற்காக இப்படி செய்திருக்காங்க என்று சொல்கிறாள். மேலும் அவங்களுக்கு சிந்தாமணியை எப்படியோ தெரிந்திருக்கிறது. அவங்க சொல்லிதான் இவங்க இப்படி பண்ணிருக்காங்க
சிந்தாமணியும் இவங்களும், போனில் பேசிக்கொண்டதை நான் கேட்டேன் என்று சொல்கிறாள். இதை கேட்டவுடன், ஹாலுக்கு வந்த முத்து அனைவரிடமும் இதை சொல்ல, விஜயா அமைதியாக இருக்கிறாள். அப்போது அண்ணாமலை, வயசுக்கு தகுந்த வேலையை பாரு, அடுத்தவங்க முன்னேற்றத்தை தடுக்க, இப்படி சூழ்ச்சி பண்ணாத,. நீ அமைதியாக இருக்கிறத பார்த்தாலே,உன்மேல தப்பு இருக்குனு தெரியுது எனறு சொல்லி திட்டிக்கொண்டிருக்கிறாள்.
அப்போது முத்து, நான் இன்னொரு விஷயத்தை சொல்கிறேன். நான் ஒரு டிரைவிங் ஸ்கூள் ஆரம்பிக்க போகிறேன் என்று சொல்ல, அதை கேட்ட அண்ணாமலை, சந்தோஷம், ஒரு தொழில் இல்லனாலும் மற்றொரு தொழிலை பார்த்துக்கலாம் என்று பாராட்டுக்கிறான். அதற்காக ஒரு போர்டு வைக்கனும் என்று முத்து சொல்ல, அப்பா வச்சா அது கமர்ஷியல் ஆகிவிடும், அதற்கு கரண்ட் பில் அதிகமாகிடும் என்று சொல்கிறாள்.
இதை கேட்ட விஜயா, இது என் வீடு, நான் சம்மதிக்க மாட்டேன் என்று சொல்ல, இது என்னோட வீடும் கூடத்தான் என்று சொல்லி போர்டு வைக்க சம்மதிக்கிறான். இதை கேட்ட மீனா, நீங்க இப்போ இதை சொல்லுவீங்கனு எதிர்பார்க்கல, என்று சொல்ல, இதுதான் சரியான சமயம். அம்மா மேல ஒரு பழி விழுந்துருக்கு, அவங்க என்ன பேசினாலும், அதற்கு மதிப்பு இருக்காது. அதனால் தான் இப்போ சொன்னேன் என்று முத்து சொல்கிறான். இதனையடுத்து அடுத்த நாள் காலை வேலை பரபரப்பாக செல்கிறது.
அப்போது வீட்டுக்கு வரும் பேங்க் ஆபீசர் ஒருவர், மீனாவுக்கு அக்கவுண்ட் ஓபன் செய்து, ஏடிஎம், கார்டு க்ரிடீட்கார்டு எல்லாவற்றையும் கொடுக்கிறான். அதனபிறகு லோன் எதாவது வேண்டும் என்றால் என்னை கூப்பிடுங்க வாங்கி கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு செல்கிறார். இதை பார்த்த விஜயா, முகத்தை திருப்பிக்கொண்டு போக, வழக்கம்போல் முத்து விஜயாவை கிண்டல் செய்ய அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.