விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலின் தினசரி எபிசோடுகள் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், இன்றைய எபிசோட்டில், மனோஜ் ஷோரும்க்கு புதிய பிரச்னை வர, ரோஹினியின் அம்மா லட்சுமி முத்துவின் கண்களில் சிக்கிக்கொண்டார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பிப்ரவரி 12 இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில், மனைவி மீனாவுக்கு அக்கவுண்ட் ஓபன் செய்து, செக் புக் கொடுக்கும் முத்து நீ கொடுத்த காசையும் அக்கவுண்டில் போட்டுவிட்டேன் என்று சொல்கிறான். அதோடு முதல் செக் யாருக்கு என்று முத்து கேட்க, மாமாவுக்கு தான் முதல் செக் என்று மீனா சொல்கிறாள். இதை கேட்ட அண்ணாமலை நீங்க நல்லா இருந்தா போதும். எனக்கு எதுக்கு இதெல்லாம் என்று சொல்லிவிடுகிறார்.
அடுத்து மீனா, ரவி மற்றும் ஸ்ருதிக்கு செக் கொடுக்கப்போவதாக சொல்கிறாள். அவங்க கொடுத்த காசில் தான் இந்த ஆர்டரை செய்ய முடிந்தது. அதனால் முதல் செக் அவங்களுக்கு கொடுத்துவிடலாம் என்று சொல்ல, ரவியும் ஸ்ருதியும் இப்போதைக்கு வேண்டாம் என்று சொல்லிவிடுகின்றனர். ஆனால் ஒருத்தவங்ககிட்ட கடன் கேட்ட உடனே கிடைத்தால், அதை அவர்கள் கேட்கும் முன்பே கொடுத்துவிட வேண்டும் என்று சொல்கிறாள் மீனா.
மேலும், அப்படி செய்தால் தான் இந்த உறவு நீடிக்கும் என்று சொல்லி, செக் புக்கில் எழுதி கொடுக்க, ரவி நீ வட்டி போட்டு வாங்குடா என்று மனோஜ் சொல்ல, நாங்க என்ன பைனான்ஸ் கம்பெனியா நடத்துறோம் என்று ஸ்ருதி பதிலடி கொடுக்கிறாள். அதன்பிறகு ஸ்ருதிக்கு செக் கொடுக்கும் மீனா, அதை போட்டோ எடுத்து சந்தோஷப்பட, விஜயா கடுப்பாகிறாள். மறுபக்கத்தில் ரோஹினி ஷோருமில்ஃபைல்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போது ஜி.எஸ்.டி வார்ணிங் லெட்டர் இருக்கிறது.
இதில் ஜி.எஸ்.டி கட்டாமல் இருப்பதால், 10 நாட்களுக்குள் கட்ட வேண்டும் என்று வார்னிங் லெட்டர் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார்கள். இதனால் கடுப்பாகும் ரோஹினி, மனோஜை அழைத்து திட்டிவிட்டு ஏன் கட்டவில்லை என்று கேட்க, மறந்துவிட்டேன் என்று சாதாரணமான மனோஜ் பதில் சொல்கிறான். அப்போது ஜி.எஸ்.டி அதிகாரிகள் வந்து ஏன் வரி கட்டவில்லை என்று கேட்க, மறந்துவிட்டேன் என்று மனோஜ் சொல்ல, நீ படித்தவன் தானே இப்படி பதில் சொல்ற என்று அவர்கள் திட்டுகின்றனர்.
இதை கேட்ட ரோஹினி மன்னித்துவிடுங்கள் சார், ஒரு இடத்தில் 30 லட்சம் ஏமார்ந்துவிட்டோம். கொஞ்சம் டைம் கொடுங்க சீக்கிரம் கட்டிவிடுவிறோம் என்று சொல்ல, எங்களுக்கு தெரியாது நாங்கள் கடைக்கு சீல் வைக்கப்போகிறோம் என்று அதிகாரிகள் சொல்ல, அதிர்ச்சியான ரோஹினி அவர்களிடம் கெஞ்ச, இப்போதைக்கு 3 லட்சம் 3 மணி நேரத்தில் கொடுக்க வேண்டும் என்று சொல்லி நாங்க்ள போய்ட்டு வருவதற்கும் பணம் ரெடியாக இருக்க வேண்டும் இல்லனா சீல் வச்சிடுவோம் என்று சொல்லிவிட்டு செல்கின்றனர்.
மறுபக்கம் அண்ணாமலையை ஸ்கூலுக்கு விட வந்த முத்து, ரோஹினியின் அம்மா லட்சுமியை பார்க்க, க்ரிஜை பற்றி விசாரிக்கிறான். அதன்பிறகு லட்சுமி தனது மகள் இங்கேயே வந்துவிட்டதாகவும், சொல்ல, அந்த நேரத்தில் ரோஹினி லட்சுமிக்கு கால் செய்கிறாள். அப்போது போனை எடுத்த லட்சுமி, முத்துவை பார்த்த விஷயத்தை சொல்ல, ரோஹினி இன்னும் கடுப்பாகிறாள். ஆனாலும் நகைகளை எடுத்துக்கொண்டு நான் சொல்லும் இடத்திற்கு வந்து சேரு என்று சொல்லிவிட்டு போனை வைக்கிறாள்.
அடுத்ததாக வித்யாவை பார்க்க வரும் முருகன், தனது நண்பர் பிரியாணி கடை திறந்திருப்பதாக சொல்லி பிரியாணி கொடுக்க, இருவரும் பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று முருகன் சொல்ல, உங்களை பற்றி எனக்கு எதுவும் தெரியாதே என்று வித்யா சொல்ல, என்னை பற்றி உங்களுக்கு தெரியவைக்க நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறான். அப்போது அவனது போனை வாங்கி வித்யா வைத்துக்கொள்கிறாள். அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.