சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், அண்ணாமலையின் நண்பரின் மகள், காதலித்த நபரோடு வீட்டை விட்டு ஓடிய நிலையில், அவர்களை சேர்த்து வைக்க, முத்துவும் மீனாவும் முயற்சி செய்ய, ரோஹினியின் மாமாவாக நடித்தவரும் அங்கே வருகிறார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில், ஸ்ருதி கார் வாங்கினால் மீனாவை டிரைவராக வைத்துக்கொள் என்று விஜயா சொல்ல, அதை கேட்ட ஸ்ருதி மீனா ஒன் ஆப் தி கார் ஓனர். அவங்க கத்துக்கிட்டு இன்னும் 4 பேருக்கு சொல்லிக்கொடுப்பாங்க என்று பதிலடி கொடுக்கிறாள். அடுத்து ரோஹினி மனோஜ்ஜிடம், உன் தம்பி படிக்காதவன்னு நாமதான் சொல்கிறோம். ஆனால் அவன், எவ்வளவு உஷாரா எல்லாத்தையும் செக் பண்றான் பாரு. நீ டேக்ஸ் கூட கட்டாமல் இருக்க என்று சொல்கிறாள்.
இதை கேட்டு கடுப்பாகும் மனோஜ், அவனை என்னோடு கம்பேர் பண்னாத நான் எவ்வளவு படித்திருக்கிறேன் தெரியுமா என்று கேட்க, படித்தால் மட்டும் போதுமா என்று ரோஹினி பதிலுக்கு கேட்கிறாள். மறுபக்கம், சீதா ஹெல்மட் போடாமல் வண்டி ஓட்டி வர டிராபிக் போலீஸ் அவளை நிறுத்த பைன் கட்ட சொல்கிறார்கள். சீதா அருணை பார்த்து நலம் விசாரிக்க, ஆனால் அவரோ, ஹெல்மட் போடாமல் வண்டி ஓட்டியது ஆபத்து என்று உங்களுக்கு தெரியாதா என்று கேட்கிறாள்.
அவரின் கேள்வியால் அதிர்ச்சியாகும் சீதா, அமைதியாக இருக்க, நான் டூட்டில இருக்கும்போது யாரையும் பார்க்க மாட்டேன். எனக்கு ல்லோரும் ரூல்ஸை மதிக்கனும் பைன் கட்டு என்று சொல்ல, சீதா அமைதியாக இருக்க, என்ன பைன் கட்ட பணம் இல்லையா என்று கேட்கிறார். அதன்பிறகு நான் கட்டுகிறேன் என் சொல்ல, சீதா நானே கட்டுகிறேன் என்று சொல்லி பணத்தை கட்டிவிட்டு கிளம்பிவிடுகிறாள். அடுத்ததாக அண்ணாமலையை சந்திக்க வருகிறார் அவரது நண்பர் பரசு.
தனது 2-வது மகள் பவானி லெட்டர் எழுதி வைத்துவிட்டு, காதலித்த பையனோடு ஓடிவிட்டதாக சொல்லும் பரசு, அவளுக்கு கல்யாண ஏற்பாடுகள் செய்திருந்ததாக சொல்கிறார். இதை கேட்ட முத்து நீங்கள் மாப்பிள்ளை பார்க்கும் முன்பு, பவானியை கேட்டீங்களா எனக்கு யாராவது புடிச்சிருக்கா என்று கேட்டீங்களா என்று கேட்க, அவர் இல்லை என்று சொல்கிறார். பொண்ணு நம்ம பேச்சை மீறமாட்டானு நினைக்கிறீங்க, அவளுக்கு நல்லது கெட்டது தெரியும். அவளுக்கு எது பிடிக்கும் யாரை பிடிக்கும் என்று முதலில் கேட்டிருக்க வேண்டும் என்று சொல்கிறான்.
இதை கேட்ட பரசு, அண்ணாமலையிடம் நல்ல வேளை உனக்கு பெண் குழந்தை பிறக்கவில்லை என்று சொல்ல, அதை கேட்ட விஜயா, பிறந்திருந்தாலும் நான் இப்படி தருதலையா வளர்த்திருக்க மாட்டேன் என்று சொல்கிறார். இதை கேட்ட முத்து, நீங்க வளர்த்த மனோஜ் ஓடுகாலி மேடையில் இருந்து ஓடவில்லையா என்று கேட்க, விஜயா கடுப்பாகிறாள். அதன்பிறகு பவானி பற்றி விசாரிக்க, அவர் வேலை செய்த மெடிக்கல் ஷாப்பிற்கு செல்கின்றனர். அங்கிருந்த பெண்ணிடம் தான் போலீஸ் என்று முத்து உண்மையை கேட்கிறார்
பயந்துபோன அந்த பெண், பவானி யாரை காதலித்தார் இப்போது எங்கு இருக்கிறார் என்று சொல்லிவிடுகிறாள். மறுபக்கம், பவானி காதலித்த பையன் வீ்ட்டில் அவனது அம்மா அழுதுகொண்டிருக்க, ரோஹினியின் மலேசியா மாமாவாக நடித்த பிரவுன்மணி அங்கு பேசிக்கொண்டு இருக்கிறார். அதன்பிறகு பவானி வீட்டில் பேசலாம் என்று ஒருவரை அழைத்து வருகிறார். பரசுராம் வீட்டில் முடித்து பேசிக்கொண்டிருக்க பிரவுன்மணியும் அங்கு வர அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.