சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், மீனாவை வேலை செய்ய விடாமல் தடுக்க, சிந்தாமணி விரித்த வலையில் விஜயா மாட்டிக்கொண்ட நிலையில், மறுபக்கம், பிரவுன் மணி, பரசுராம் குடும்பத்திற்கு கண்டிஷன் போடுகிறான்.
இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில், ரோஹினி தனது பெயரை பச்சை குத்தியது குறித்து மனோஜ் பெருமையாக பேச, தனது மகனுக்காக ரோஹினி இப்படி செய்கிறாளே என்று விஜய ஃபீல் செய்கிறாள். அப்போது மீனா, நானும் முத்துவின் பெயரை பச்சைக்குத்திக்கொள்ள போகிறேன் என்று சொல்ல, முத்து பதறிப்போகிறான். மேலும் அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். அன்பு மனதில் இருந்தால் போதும். அதுக்காக இப்படி பண்ணனும்னு அவசியம் இல்லை என்று சொல்கிறான்.
முத்துவின் பேச்சை கேட்ட ஸ்ருதி முத்து சொல்வது தான் சரி என்று சொல்கிறார். அதை கேட்ட மனோஜ் ரோஹினிக்கு மட்டும் தான் இந்த வீட்டில் பாசம் இருக்கிறது மற்ற யாருக்கும் இல்லை என்று சொல்ல, அதற்கும் ஸ்ருதி பதிலடி கொடுக்கிறாள். பிறகு நாங்க ரூமுக்கு போகிறோம் மீனாவை சாப்பாடு எடுத்து வர சொல்லுங்க என்று சொல்ல, முத்து கோபப்பட்டு திட்டிவிடுகிறான். அடுத்ததாக முத்துவும் மீனாவும் பரசுவின் மகளை வீட்டுக்கு கூட்டி வருகின்றனர்.
அப்போது பரசுவின் மனைவி மகளை அடிக்க, முத்துவும் மீனாவும் சமாதானம் செய்து வைக்கின்றனர். அதன்பிறகு முத்துவும் மீனாவும் அங்கிருந்து கிளம்பிவிட, அடுத்த நிமிடம் பிரவுன் மணி அந்த வீட்டில் என்ட்ரி கொடுகிறார். அவர் முன்கூட்டியே திருமணத்தை நடத்திவிடுவோம் என்று சொல்ல, பரசு வரதட்சனை என்ன வேண்டும் என்று கேட்கிறார். நீங்கள் தங்கம் போல் பொண்ணு வச்சிருக்கீங்க, அதனால் நான் தான் உங்க பொண்ணுக்கு கட்டில் பீரோ வாங்குவேன் என்று சொல்கிறார்.
அதனைத் தொடர்ந்து பார்வதி வீட்டுக்கு வரும் சிந்தாமணி, மீனா ஆர்டரை சரியாக முடித்தது குறித்து கோபமாக பேசுகிறார். அதற்கு மீனா ரொம்ப திறமையான பொண்ணு எந்த விஷயத்தை எடுத்தாலும், சரியாக செய்து முடிப்பாள் என்று சொல்ல சிந்தாமணி மேலும் கோபப்படுகிறாள். அந்த நேரத்தில் விஜயா அங்கு வர, அவரை பார்த்தும் பார்க்காதது போல் சிந்தாமணி கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கிறாள். இதனால் விஜயா கோபமாக கிளம்ப, ஊர்ல, யாருலாமோ ஆடுராங்க இப்போ இந்த ஆட்டம் தான் முக்கியமா என்று கேட்கிறாள்.
மேலும் நீங்க போய்ட்டு வாங்க, வந்தபிறகு அடிக்கலாம் என்று சொல்ல, நீங்கள் எதை மனதில் வச்சிக்கிட்டு பேசுறீங்க என்று தெரியவில்லை. மீனா அங்கு போக கூடாது என்று எவ்வளவோ தடுத்தேன். ஆனா அவ வேலை செய்து முடிச்சுட்டா, நான் என்ன பண்ண என்று கேட்க, இதை கேட்ட சிந்தாமமணி, உங்க மருமக மீனா வளர்ந்துகொண்டே போவா, உங்களால் எதுவும் செய்ய முடியாது என்று சொல்ல, நான் மீனாவை பூ வியாபாரம் செய்ய விடாமல் தடுப்பேன் என்று விஜயா சபதம் எடுக்கிறாள்.
அடுத்ததாக முத்து மீனா கிச்சனில் இருக்கும்போது இருவருக்கும் தும்மல் வருகிறது. அப்போது வீ்ட்டுக்கு வரும் விஜயா அவர்களை தும்ம கூடாது என்று சொல்ல, அவருக்கே தும்மல் வருகிறது. இதனால் அங்கிருந்து ஓடிவிட, அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.