விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலின், இன்றைய எபிசோட்டில், வித்யா, தனது தனிப்பட்ட விஷயங்களை மீனாவிடம் சொல்வதை பார்த்து, ரோஹினி கோபப்பட, போலீ்காரர் அருண் பற்றிய விஷயங்களை முத்து வெளியிட்டதால், அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்பு எழுந்துள்ளது.
இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில் பரசு, அண்ணாமலை வீட்டுக்கு வந்து தனது மகளுக்கு கல்யாணம் நிச்சயம் ஆகியிருப்பதாக சொல்கிறார். மேலும் முத்து மீனா இல்லை என்றால், இது நடந்திருக்காது. இருவரும் வயதில் சிறியவர்களாக இருந்தாலும் மனதில் பெரியவர்கள் என்று சொல்ல, விஜயாவும் ரோஹினியும் கடுப்பாகின்றனர். அப்போது விஜயா இவங்க புரோக்கர் வேலை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்களா என்று செய்ய, நாங்க ரெண்டு பேரை சேர்த்து வைக்கணும் என்று முடிவு செய்தோம். ஆனால் சிலர் பிரித்து வைக்க நினைக்கிறாங்க என்று முத்து சொல்ல, விஜயா கடுப்பாகிறார்.
அதன்பிறகு பரசு எங்களுக்கு எவ்வளவு சொந்தக்காரங்க இருந்தாலும் நீங்க தான் முக்கியம் நீங்கதான் குடும்பத்தோட வந்துடனும் என்று சொல்கிறார். மேலும், முத்துவிடம் நீ தான்ப்பா முன்னாடி நின்னு நடத்தணும் என்று சொல்ல, மீனா நான் டெக்ரேசன் வேலை எல்லாம் பார்த்துகிறேன் என்று சொல்கிறாள். அதேபோல் முத்து டிராவல்ஸ் பிரச்சனையை நான் பார்த்துகிறேன் என் பிரண்டுகளோட கார் இருக்கு என்று சொல்லிவிட்டு, அதோடு மேக்கப் போடவும் ஆளு இருக்கு என்று ரோகிணியை பற்றி சொல்கிறான்.
இதை கேட்ட ரோஹினி, முதலில் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்க, குடும்பத்தில் எல்லோரும் சொன்னதால் சம்மதம் சொல்கிறார். அதன்பிறகு, ரவிக்கு கேட்ரிங், விஜயா மொத்தத்துல எங்க குடும்பத்துல இருந்து ஃப்ரீயா கல்யாணம் பண்ணி வச்சுருவாங்க போல என்று நக்கல் செய்கிறார். பிறகு அண்ணாமலை மாப்பிள்ளை வீட்டை பற்றி விசாரிக்க மாப்பிளையோட மாமா ரொம்ப நல்லவரா இருக்காரு கறிக்கடை வச்சிருக்கார் என்று பரவு சொல்கிறார். இதை கேட்ட, விஜயா, கறி ப்ரீயா வந்துரும் என்று நக்கல் செய்ய, அண்ணாமலை விஜயாவை திட்டுகிறார்.
அடுத்து போலீஸ் ஸ்டேஷன் வரும் மனோஜ் தனது பணம் ஏமாற்றிய நபரை பற்றி விசாரிக்கும்போது, திமிராக பேச, போலீசும், அவனிடம், திமிராக பேசி சீக்கிரமா கண்டுபிடிக்கிறோம் போ என்று மனோஜை அனுப்பி வைக்கிறார்கள். அதன் பிறகு கான்ஸ்டபிள் அருண் போலீஸ் ஸ்டேஷனுக்கு வர, கொஞ்ச நேரத்தில் இன்ஸ்பெக்டர் வந்து, நீ ஹெல்மெட் போடாம செல்போனில் பேசியபடி பைக்கில் போனதை வீடியோ எடுத்து யாரோ அப்லோடு பண்ணி இருக்காங்க. மூணு நாள் டிஸ்மிஸ் பண்ணறேன் என்று சொலகிறார். அதைக் கேட்டு அதிர்ச்சியான அருண், என்னிடம் பிரச்சனை செய்தது அந்த டாக்சி டிரைவர் தான் என்று சொல்ல, நீ அவன் காரை தூக்கினதால, இப்போ அவன் வேலையை ஆரம்பிச்சுட்டான் என்று சொல்கிறார்.
அதை தொடர்ந்து மீனா பைக்கில் வந்து கொண்டிருக்கும் போது, வித்யா மீனாவை நிறுத்தி நீங்க சொன்ன மாதிரி அவரு கிட்ட போனை வாங்கிட்டேன். அதுல எதுவுமே இல்லை என்று சொன்னதும் அப்போ அவர் நல்லவரா தான் தெரியுறாரு நீங்க பேசி பாருங்க என்று மீனா சொல்ல, அதற்கு வித்யா உடனே எப்படி பேச முடியும் என்று கேட்கிறார். இதை அந்த நேரத்தில் அந்த பக்கமாக வந்த ரோகிணி பார்த்து அதிர்ச்சி அடைந்து நிற்கிறார். பிறகு மீனா கிளம்பியதும் வித்யாவிடம் மீனா கிட்ட ரொம்ப க்ளோசா பேசிட்டு இருக்குற கேட்கிறார்.
அதைத்தொடர்ந்து அருனை பார்க்க வந்த சீதா, சாப்பிடாமல் இருப்பதால் அவருடைய அம்மாவும் சாப்பிடாமல் இருக்கிறார். இதனால் அருணிடம் விசாரிக்க, அவன் தன்னை மூணு நாள் சஸ்பெண்ட் செய்துவிட்டதாக சொல்கிறான். அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.